தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 289

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 289

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

TiNu:
சகியே.. வெட்கமும்.. நாணம்...
உனை அறியாது.. வெளிவந்த..
காரணமென்ன.. சொல்வாயா?
என் அன்பு தோழியே....

உன் இரு கன்னங்களும்...
அந்தி வானமென சிவக்க..
காரணமென்ன.. உரைப்பாயா?
என் ஆசை  தோழியே....

பன்னீர் பூவென.. மலர்ந்த
உன் ஐவிரல்களும்.. முகம் மூட..
காரணமென்ன.. கூறுவாயா?
என் பிரியா   தோழியே....

புதிதாய் பூத்த பொற்தாமரை என
உன் முகம் பூரித்து மின்னிட
காரணமென்ன.. கூறுவாயா?
என் அழகு..   தோழியே....

உன் நாணத்தின் பொருள்..
நீ கூறாது.. நான் அறியேன்...
காரணங்கள் நேர்மறையானதா?
என் பாசமிகு ..   தோழியே....

போலியாக  யாரோ.. உதிர்த்த..
ஓரிரு பொய்யான வார்த்தைகளில்..
உன் நாணம்.. மலர் கூடாது...
என் காவிய ..   தோழியே....

எந்த சூழலில்... எம்மொழியில்..
யார் எது.. மொழித்தாலுமே
அதன் ஆழ் பொருள் அறிவாய்..
என் ஓவிய ..   தோழியே....

உன் முகத்தில் பூத்திருக்கும்..
புன்னகை.. உண்மை எனில்..
நானும் உன்னுடன் மகிழ்வேன்...
என் உயிர் தேவதையே...

Mirror:
 அன்பே ! நீ கொண்ட வெட்கம்..
 என் உலகை மறைத்து ..மனதை நனைத்து
 உயிரை உறைத்து ..உணர்வுகள் துளிர்த்து ..
உருகினேன் உண்ணை நினைத்து..

இமயமலை உச்சியின்..
 உயரத்தை அடைந்தாலும் ..
கிடைக்காத இன்பமடி ..
என்னால் நீ கொண்ட வெட்கம்..

ஐயகோ....என் செய்வேன்..
வாய்விட்டு சிரிக்க ஆசை.. ஆனால்,
பாவை நீ பதறிப் போனாள் ..
வெட்கத்தின் எல்லை முடிந்து விடுமே..

என்னவளே.. என் இனியவளே..
காவிரியின் கரையோரம் ..
கிளை துளிறும் வாய்க்கால் போல..
காற்றில் அசையும், உன் காற்முடி கலைதளில்..
கணக்கிறதடி என் நெஞ்சம்..
அல்லி முடிய ஆசை ..
 ஆனால் அதிசயம் அகண்டு விடுமோ என்ற அச்சமடி...

முல்லைகொடியின் முதுகு தண்டில்..
 முட்டுகள் இரு இணைய..
கைகள் கோர்த்து, கண்ணை மூடி..
 கண்ணி நீ வெட்கும் நேரம் ..
வேதனையின் விலாசம் விலகி..
உன் வெகுளியின் வெளிச்சத்தில்..
 களவு கொண்ட கள்வன் நானடி..

செங்காந்தள் முடியழகி ..செதில் மீனின் கண்ணழகி..
மணியோசை குரலழிகி..மணம் மயக்கும் பேச்சழகி..
இடுக்கையின் இடையழகி..ஈடில்லா இதழழகி..
பாலாடை நிறத்தழகி, பருவத்தின் கடையழகி..
பாவை நீ பேரழகி..

உன் மறகதமேனி நிறம் பார்த்து ..
வானவில்லின் வண்ணம் கூட..
 வணங்கி நின்று விலகிக் கொள்ளும்..
கண நேரம்..

உன் வெட்கத்தின் வளம் பார்த்து..
 இயற்கையின் இயக்கமோ..
 இம்சை கொள்ளும் ..
சில நேரம்..

உன் பூரிப்பின் புலம் பார்த்து..
 படைப்பின் பிரம்மனோ..
புகழ்ச்சி கொள்வான்..
இந்நேரம்..

இத்தனையும் களவு பார்க்க ..
 காவியத்தை படித்துப் பார்க்க ..
என்று வருமோ..
என் நேரம்....

இயற்கையே....



Tee_Jy:
கொஞ்சம் வெட்கப்பட்டுக்
காட்டேன்!
தொட்டாச்சிணுங்கி
பற்றி நான்
அறிய வேண்டும்!

தேவதை என்று
நான் சொல்லும்
சிறு பொய் கேட்டு
முகம்மூடி
வெட்கப்படுகிறாளோ....
இல்லை வெட்கப்படும் போது
உண்மையாகவே
தேவதையாகி விடுகிராளோ...

இருள் சூழ்ந்த மேகத்தின் முந்தானையில் ஒளிந்திருக்கும் நிலவை போல் தோன்றுகிறாள்.....

மஞ்சள் பூசிய சந்தன நிலவு...
கொஞ்சி சிரிக்கும் மாலை வெயில்...
பனித்துளிகள் கன்னக் குழியில் விழுந்து
பல்லாங்குழி ஆடுமழகில் பூவிதழ் ஆகிறாள்......

தொட்டால் சுருங்கும் இலைகள் போல
தொடாமல் அழகாய் முகம் சுழித்தாள்...
சுண்டு விரல் நகம் கடித்து
கண்கள் மயங்க எனைப் பார்த்தாள்......

கைவிரலின் வண்ணக் கோலம் மறந்து
கால்களின் விரலில் மௌன கோலமிடுகிறாள்...
கழுத்தின் மணியைக் கைகளில் எடுத்து
புதிதாய் எண்களைப் பயின்றிட விழைகிறாள்......

நீ சிந்தும் வெட்கத்தில் செடியில் உள்ள மலர்கூட மயங்கி விழுகின்றன.....

நாணம் கண்டு நாணல் சாய்கின்றது...
வானில் எதிரொளியாய் மின்னல் பூக்கின்றது..
இமைகள் இரண்டும் சிறகுகள் விரிக்கின்றது...
தேன்சிட்டாய் படபடவென பலமுறை துடிக்கின்றது......

பூக்களின் புன்னகையில் உலா போகிறாள்...
வெட்கத்தின் இலக்கியத்தில் விளையாடி வருகிறாள்...
குளிர்ந்த காற்றில் தேகம் நடுங்குகிறாள்...
பளிங்கு விழிகளால் என்னை விழுங்குகிறாள்......

ஒலிம்பிக் போட்டிகளில் வெட்கத்திற்கும் போட்டி வைத்தால்... உன் வெட்கத்திற்கு ஒரு வெண்கல பதக்கம் கூட கிடைக்காது....


வெட்கத்தை பற்றி எதாவது எழுத வேண்டும் என்றுதான் இப்படி கிறுக்கினேன்....
உன் வெட்கத்தை சொல்வதென்றல் எனக்கு வெட்கமாக இருக்கிறது....

VenMaThI:
சிரிக்காதே சகியே...
உன் சிரிப்பில் சிதறும் இதயங்கள் பல
அதில் என் இதயமோ விதிவிலக்கல்ல

நாணம் என்று கூறவா
இல்லை
நான் ஆம் என்று கூறவா!

ஆம் பெண்ணே

சிக்கி தவிக்கிறேன்...
சிறகில்லாமல் பறக்கிறேன்....
மழையின்றி நனைகிறேன்...
நதியின்றி நீந்துகிறேன்...
அனைத்தும் உன் சிணுங்களில் மட்டுமே ...
வெட்கமும் வெட்கி நிற்கும்
அந்த நாணமும் நாணி செல்லும்
உன் சிரிப்பால் சகியே....


பெண்ணே!
அழகின் அழகு நீ...
ஆலயத்தின் தெய்வம் நீ....
இயற்கையின் படைப்பு நீ ...
ஈடில்லா கருணை நீ ...
உறையும் பனியும் நீ..
ஊர் போற்றும் திருவிழா நீ ...
எரியும் நெருப்பின் பிம்பம் நீ...
ஏந்திப்பிடிக்க கூர்வால் நீ...
ஐயமில்லா அறிவு நீ ...
ஒளியின் வெளிச்சம் நீ ....
ஓசையில்லா மொழியும் நீ ....



பெண்ணே சிரித்திரு ..
உன் சிரிப்பில் சுற்றத்தையும் மகிழ்வித்திரு ❤️❤️❤️❤️

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version