தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 291

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 291

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

AK Prakash:
அமர்ந்து யோசித்தால் உள்ளம் குதுகலிக்கும்
நட்பை பார்த்திட்டால் உற்சாகம் துள்ளிக் குதிக்கும்
மறக்க இயலாத வாழ்வின் கல்வெட்டு
சிறந்த சிற்பமாக   குடியிருக்கும் மனக்கோயிலில் .

நினைத்து பார்த்தால்  கண்களின் ஓரத்தில் கண்ணீர் கசிகிறது
திரும்ப கிடைத்திடாத பொற்காலம் அவை
வாழ்க்கை என்னும் செடியில் பூத்த முதல் பூ அத
 எண்ணி எண்ணி  பார்த்தாலும் கையில் எட்டிடாத நாட்களவை
நம் வாழ்நாள் முழுவதும் நினைவாய்  சுமக்க வைக்கும் பொதிசுமைகள்

வெளியுலகம் தெரியாமல் தான் நினைப்பதே சரி என்றும்
தன் கண் முன்னே வருவது அனைத்தும் நிஜமென்றும்
நினைத்து வாழும் கள்ளம் கபடம் இல்லா தூய மனமனம்

 நான் சிறுவயதில் விளையாடிய விளையாட்டுக்கள்
 நவீன உலகில்  வேண்டுமானால் மறைந்திருக்கலாம் 
அதில் பெற்ற இன்பமும் நினைவுகளும்   
எந்த ஒரு நவ நாகரீகத்தாலோ விஞ்ஞானதாலோ அழிக்க முடியாதவை .

 மழை பெய்யும் முன் வீசும் மண்  வாசனையை நுகர்ந்து
கூட்டம் கூட்டமாய் ஒருசேர  வீழும் மழைத்துளிகள்
உண்டாக்கும்  சத்தத்தை பெரும் இசையாய் கொண்டு
அதற்கேற்ப ஆட்டம் போட்ட கடைசி தலைமுறைகள் நாங்கள்

அம்மழையோடு மனம் ஓருசேரும்  பொழுது
 சிறகில்லாமல் பறந்ததும் , கவலை இருந்தும்  சிரித்ததும்
காகிதக் கப்பல் விட்டு மழையில் ஆடியதும்
சூடான பகோடா காப்பியை  தேடியதும் மறக்கதான்   முடியு,மா ?

இளமை காலம்  வாழ்வின் வண்ணமயமான நாட்கள்
நினைத்து பார்க்கும் ஒவ்வொரு நொடியும் மணக்க வைக்கும் வாடா பூக்கள் அவை
சோகத்தை மறந்து  புன்னகையை தரக்கூடிய வல்லமை படைத்தது .
முதுமை காலத்தில்   சிந்தித்து சந்தோஷத்தில்  ஆழ்த்தும் அவை



Abinesh:
மனதில் வைராக்கியம் இல்லை
மனதில் பாரம் இல்லை
தலையில் கணம் இல்லை
விளையாடுங்கள் என்று கூறுபவர்களை
பிடிக்கும் காலம்
படியுங்கள் என்று கூறுபவர்களை
பிடிக்காத காலம்
இந்த குழந்தை பருவத்தில்...!

மழையில் நனைந்து விளையாடிய காலம்
வெயில் அலைந்து திரிந்த காலம்
நண்பர்களின் புது பேனாக்களை பார்த்து
எனக்கும் அதே போன்று பேனா வேண்டும்
என்று அழுது அடம் பிடித்த கனாக்காலம்....!

காலையில் பள்ளிக்கூடம் போகும் போது
ஒரு பயம்...
அதே மாலையில் இறுதி மணி அடித்தால்
ஒரு இனம் புரியாத ஆனந்தம்
எதற்காக அழுகிறோம் ,எதற்காக சிரிக்குறோம் என்று அறியாத
சுட்டித்தனம் நிறைந்த பருவம்...!

சிறுவயதில் தொலைக்காட்சி பெட்டியில்
சக்திமான், ஜீ பூம்பா, மாயா மச்சிந்த்ரா
கண்டு களித்த காலம்...
கிரிக்கெட், கோலி விளையாடும் போது
தன்னை மறந்த தருணம்...

அடம்பிடித்து அழுது விட்ட கண்ணீர்
அதே  மழையாக மாறிய தருணம்
அதே மழையில் குளித்த பருவம்
குடையின்றி வாழ்ந்த குளிர் காலம்...
 
ஒரு பொருள் தொலைந்துவிட்டால் என்னவோ,அதை வாங்கி விடலாம்
ஆனால் பழைய நினைவுகள்
அது நிஜம் ஆகாது,என தெரிந்தும்
மனம் என்னவோ பழைய நினைவுகளை
தேடி செல்கிறது...


குறிப்பு:(சிறு வயதில் அனுபவித்த வாழ்கையை இப்பொழுது அனுபவிக்க முடியவில்லையே என்று ஏங்கும்,உங்களை போல நானும் ஒருவன் உங்கள் தோழன் Abinesh)


Sun FloweR:
கவிதை பாடும் வண்டுகளாய்
காடுமேடு சுற்றித் திரிந்தோம்
கள்ளம் கபடம் ஏதுமற்று ....

காற்றின் போக்கில் ஓடும்
பட்டமாய் வானவெளி எங்கும்
சுற்றித் திரிந்தோம்
சுதந்திரமாய்....

ஆண் பெண் பாகுபாடு பார்த்ததில்லை
ஜாதி மதம் வேறுபாடு அறிந்ததில்லை
களிப்புடனே வாழ்ந்திருந்தோம்
நேரங்காலம் கூறுபாடு காணாமலே ...

பணம் காசும் தேவையில்லை
பகட்டு வாழ்வும் தேவையில்லை
சொந்த பந்தமும் தேவையில்லை
சோறும் கூட தேவையில்லை.....

செப்புச் சாமான்களும்
கோலிகுண்டுகளுமே எங்களுக்கு
விருப்பமானவை...
மழையில் நனைவதும்
மரத்தில் ஏறுவதுமே
எங்களுக்குப் பிடித்தமானவை...
காலையில் காய் விட்டு
மாலையில் பழம் விடும் நட்பே
எங்களுக்குப் போதுமானது....

வண்ணங்கள் மட்டுமே
நிறைந்த வசந்த காலம் அது...
குதூகலம் மட்டுமே
நிறைந்த குழந்தைப்பருவம் அது...

கணினியில் விளையாடும்
கைப்பேசியில் வாழ்வைத்
தொலைத்திடும்
இன்றைய பிள்ளைகளுக்கு
எங்கே தெரியும் எங்களின்
பால்யத்தின் அருமையும் பெருமையும்????

SweeTie:
தூற்றல் மழை   நனைக்கிறதே
காற்றும்  சேர்ந்து அடிக்கிறதே
சீக்கிரமாய்  வீடு செல்வோம்
'
காகிதத்தில் கப்பல் செய்து 
மழை நீரில்   ஓட்டிடுவோம்
சந்து பொந்து சகதி எல்லாம்
தண்ணீராய்   பாய்கிறதே   

ஓடி  விழையாடிடுவோம்   
ஒருபோதும்  ஓயமாட்டோம்
கூடி விழையாடிடுவோம்   
குறைவராது    பாதுகாப்போம்

கு ட்டாஞ்சோறு   ஆக்கிடுவோம் 
கூடியிருந்து  அருந்திடுவோம் 
மாமரத்தின்   கிளைகளிலே  , நாம்
மந்திகள் போல்    ஏறிடுவோம் 

சுக்கு சுக்கு  கோச்சி  வண்டி 
பச்சைக்  கொடி  காட்டும்  வண்டி 
நீண்டு வளைந்து  போகும்  வண்டி 
ஸ்டேஷனிலே   நிற்கும் வண்டி 

ஆணுமில்லை  பெண்ணுமில்லை
அனைவருமே  நண்பர்கள் நாம்
ஆலாவட்டம்   சுற்றிடுவோம் 
ஆடிப் பாடிக் கொண்டாடிடுவோம்

ஆட்டம்  பாட்டம்  கொண்டாட்டம்
சண்டையில்  முடிவதும்   சமரசம் ஆவதும்
சிறுவர்கள்   உலகின்  இயற்கை வினோதம்

மழையில்  நனைந்து  விளையாடி
நோய்நொடி இன்றி  வாழ்ந்தோம் அன்று
கணினியோடு  அறைக்குள் அடைந்து
இளமையில்  நோயாளியானோம் இன்று. 






 

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version