தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 325

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 325

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Sagi2023:
உன் வெட்கம் என்னையும் வெட்கப்பட வைக்கிறதடி...!!
      உன் விரல் அசைவில் விழுந்தது என் அணுக்கள்..,,
      பார்வையால் கடத்தப்பட்டது என் தினப்பொழுதுகள்...,,

வாக்கியம் தீட்டி உன்னை வரைய நினைத்தேன்..
       உன்னை கண்ட பின்பு அத்தனையும் மறந்தேன்..
               சுழன்று வந்த பூமிக்குள் சுழறாத நான்,, நீயாகி போனேன்..

காத்திருப்புக்கும் காதல் வந்தது ஏனோ..?

                            உன்னை எண்ணி ,
           தலையணைக்கும் காய்ச்சல் தானோ..!

என் உதிரத்தில் பிணைவதை நிறுத்திவிட்டு..
                உள்ளத்தால் இணைந்து...
                                என் உடலோடு கலந்து விடு...!!

பெரு மூச்சுக்குள் போர்க்கருவிகள் எதற்கடி..??
              கருவிழிகள் கூட கூரிய ஆயுதம் ஆனதடி..!!
                        வழிந்த வியர்வையில் சரிந்தது என் தாகம்..
உதிர்ந்த பூக்களில் முறிந்தது என் மோகம்...

பல வருட வேட்க்கையும் அடங்கியதடி ..!!
              உன் சிலநோடி ஸ்பரிசத்தில்....
நின்றது இதயம் மட்டுமல்ல...
              என் இமைக்கா விழிகளும் தான்...

        இதயத்தில் இதழ்களையும் ,,
இதழ்களில் இறுக்கத்தையும் ,,
   
                      பதித்துவிட்டு..
       கலைத்துவிட்டாய் என் கனவை....!!



KS Saravanan:
மெல்ல துடிக்குது மனசு..!

கண்ணே கண்மணியே
கட்டழகு காவியமே..!
கண்ணால் உனை கண்டால்
கலைந்து போகும் கார்மேகமே..!
மோகினியே உன் பார்வை ஒன்றே போதுமே..
பாற்கடலும் கரைந்திடுமே..!

புன்னகை பூத்த புது மலரே..
இன்று தான் நீ பூத்தாயோ..!
கருங்கூந்தலின் வாசமோ
தாழம்பூவாய் வதைக்குதே..!
உன்னை சூடிய பூக்களோ
மோட்சம் பெற்று விலகுதே..!

மேனியெங்கும் பளிங்கு நீரோடையோ
உதடுகள் செந்தூர தாமரையோ..!
நாணம் கொண்ட சிணுங்கலோ
நாணல் போல மலருதே..!
தங்கம் நெய்த கைகளோ
முகத்தை மூடி மறைக்குதே..!

பட்டு பூச்சியின் ஸ்பரிசமோ
பட்டாடை உடுத்தி வியக்குதே..!
வீணையேற்றும் விரல்களோ
முல்லைக்கொடியாய் வலையுதே..!
வண்ணம் கொண்ட வளையல்களோ
உன்னை தொட்டு தழுவுதே..!

வில்லேந்திடும் புருவமோ
கண்ணால் அம்பெய்தி நிக்குதே..!
பெண்ணழகை போற்றிட
உன் சங்கு போன்ற கழுத்திலே
மஞ்சள் கயிறு கட்டிடவே
கடவுள் என்னை படைதானா..?

தமிழினி:
பெண் உணர்வுகளில்
ஆண் வேடமிட்டு
அனைவரையும் ஆட்டி படைத்தவள்..

உன் அரைநொடி உரையாடலுக்கு பின்
உன் இமைநீங்க நோட்டங்களுக்கு பின்
உன்னை தழுவிய காற்று என்னை தீண்டி சென்ற பின்
உன் மீதான ஸ்பரிசம் என்னை
சுவாசிக்க விடாமல் தடுக்கிறது..

முதல் முறையாகா

என்னில் மாற்றம்..
என் உடையும் சேர்ந்தே மாற தொடங்கியது..
பூப்படைந்த நாளில் கூட இப்படி ஓர் மாற்றம் என்னில் இல்லை..
என்னவனே
உனக்காக ஏற்பட்ட இந்த மாற்றம் உள்ளத்தில் மட்டுமின்றி
 என் உடையுளும் தோன்றியது..
முதல் முறை உனக்காக புடவை அணிந்து
பூ இட்டு
என்னை நானே அலங்கரிக்க தொடங்கினேன்

உன் கவனம் ஈர்க்க..


கண்ணா..

நினைவினில் கூட நாணப்பட வைக்க உன்னால் மட்டுமே முடியும்..

Mani KL:
வெட்கத்தின் உறைவிடம் உன் முகம்
உன் வெட்கம் என் மனது செல்கிறது சொர்கம்


என்னை பார்த்த பொழுது
உன்னில்
அளவு கடந்த சந்தோசம்
அந்த வினாடியை கண்டு வியந்த ஐம்புலன்கள்

நான் சொல்வதை கேட்ட உன் செவிகள்
அதை சொல்ல  தெரியாமல்
மௌனம் கொண்டஉன் உதடு
புன்னகை மட்டுமே பூத்தது

பார்க்க தயங்கிய கண்கள்
பாதி இமைகள் மூட

என் சுவாச காற்றை உன் சுவாசம் தழுவ

உமிழ் நீரை இறக்கி மௌனம் கொண்ட தொண்டை குழி

ஐம் புலன்களின் மௌனம்
உன் முகத்தில் தெரிந்த வெட்கம்

வெள்ளை காகிதம் கொண்டு துடைத்தால்
மாயாத பெண்ணின் வெட்கம்

வியர்ப்பை துடைத்து விட்டு செல்லும்
வெள்ளை காகிதம் அல்ல பெண்ணின் வெட்கம்

ஆணின் மனதில் நினைவலைகளாய்  கவிதைகள் பயணிக்கும்
வெள்ளை காகிதம் பெண்ணின் வெட்கம்

கலைஞன் கையில் உள்ள வெள்ளை காகிதம்
வியர்ப்பை துடைத்து விட்டு செல்லும்

கவிஞன் கையில் உள்ள வெள்ளை காகிதம்
கவிதைகளை தொகுத்து  கவிஞன் கூட பயணிக்கும்.

என்னிடம் பிடித்ததை கேட்டேன்
வெட்கப்பட்டாய்

உனக்கு பிடித்ததை கேட்டேன்
வெட்கப்பட்டாய்

 எதை கேட்டாலும் வெட்கப்படும்
உன்னிடம்
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய்
என்று கேட்டேன்

அதற்கும் வெட்கப்பட்டாயே

ஆபரணங்கள்  அணிவதால் வரும் அழகு
உன் சொந்தங்கள்
உனக்கு தரும் ஆடம்பர அழகு

அதை விட அழகு

வெட்கம் வரும் போது
 உன் முகத்தில் தோன்றும் அழகு
இறைவன்
உனக்கு தந்த ஆர்ப்பரிக்கும் அழகு









 





Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version