தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 326

(1/3) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 326

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

VenMaThI:


வாழ்க்கையில் வலியை அறியாதோறும் இல்லை
ஒரு தருணமேனும் உன்னை உணராதோறும் இல்லை
உனக்காய் நான் இருக்கிறேன்
என்று என்னை அரவணைத்தவனே

தாயின் கருவறையில் உடன் இருந்தாயோ அறியவில்லை
பிறந்த நொடி முதல் என்னை விட்டு நீ விலகவில்லை ...
என்னை தீண்டியதுமில்லை என்றும் விட்டு நீங்கியதுமில்லை
வாடி நின்ற போதெல்லாம் வாரி அணைக்க தவறியதும் இல்லை

அன்பாய் அரவணைத்தோர் பலர்
ஆச்சர்யமாய் கொடுத்த பரிசும் நீ
எதிர் பார்ப்பு இல்லாமல் பழகியோர்
எதிர் பாராமல் கொடுத்த பரிசும் நீ
அழவைப்பவனும் நீ
என்னை அரவணைப்பவனும் நீ ...

சுற்றமும் உற்றமும் என்னை சூழ்கையில்
சற்றே விலகி நின்று என்னை ரசித்தாய்
சொந்தமும் பந்தமும் விலகுகையில் ... அழகாய்
அழையாத விருந்தாளியாய் என்னை ஆட்கொண்டாய் .

கேட்க மறந்த பாடலையும்
கேட்க வைத்தவன் நீ
ரசிக்க மறந்த காட்சிகளையும்
ரசிக்க வைத்தவன் நீ

முடங்கி கிடந்த வாழ்க்கையில்
முடிச்சு அவிழ்ந்த பறவையாய்
வானுயற பறக்கிறேன்
உன் கைகோர்த்த தருணம் முதல்


என் இனிய தனிமையே
என்றும் என் துணை நீயே ...

TiNu:


சிவமே! ஏன் இந்த வெறித்த பார்வை..
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை நோக்கியே..

சிவமே! நீ ஆண்டவனின் புண்ணிய
படைப்பின், மானுட பிறவி ஆவாய்..

சிவமே! நீ அன்பில்லா முரடன் அல்ல.. உன்
பாசத்தை பகிர அறியாதவன் ஆவாய்..

சிவமே! நீயே வானுக்கும் மண்ணுக்கும்..
பொறுப்பான, காவல் காரன் ஆவாய் 

சிவமே! நீ அழ தெரியாதவன் அல்ல, உன்
கண்ணீரை மறைக்க தெரிந்தவன் ஆவாய்..

சிவமே! நீ விரும்பும் உயிர்களுக்கு உனையே, 
முழுதாய், அர்ப்பணிக்கும் கொடையாளி ஆவாய்.     

சிவமே! நீ பொருள் தேடி அலைபவன் அல்ல.. உன்
பந்தங்களை பராமரிக்க உழைப்பவன் ஆவாய்..

சிவமே! ஏன் இந்த வெறித்த பார்வை..
ஆர்ப்பரிக்கும் ஆழ்கடலை நோக்கியே..

சிவமே! நீ சோம்பேறியானவன் அல்ல.. உன்
அங்கீகாரத்துக்காக காத்திருப்பவன் ஆவாய்..

சிவமே! நீ உணரும் இந்த தவிக்கும் தனிமையும்
உன் சிந்தை சீராகி, உறுதியானவன் ஆவாய்..

சிவமே! நீ உன் வாழ்க்கை பாதையாய்
பிறருக்காகவே, வழிவகுக்கும் மகான் ஆவாய்..

சிவமே! நீ என்று, இவ்வையக அணைத்து
சக்திகளை தாங்கும், சுமைதாங்கி ஆவாய்..
     
சிவமே! நீயே  ஆண்டவனின் புண்ணிய
படைப்பின், மானுட பிறவி ஆவாய்..

நீயே, காத்திடுவாய் இப்பிரபஞ்சத்தையே..
அவளுள்! அவனுள்!!  அடங்கிய சிவமே!!

Minaaz:
இணையில்லை இளைப்பார இடங்கள் அளித்திட்ட இயற்கையின் பரவசத்திற்கு ஈடாய்....

தனிமையே தன்னலம் மறந்து தாலாட்டாய் ஏற்று நிற்கும் இயற்கையதின் கொஞ்சும் மொழிகளை....

மனதோரம் முனு முனுத்திடும் சிணுங்கல்களில் சிற்பமாய் செதுக்கி வடுத்திடும் அதன் அழகுதனை....

இறைவனே வரமாய் வர்ணனையாய் தீட்டிட்ட ஓவியம் அது....


மனிதன் என முத்திரையிடப்பட்டவனே கவிஞன் என  மொழி மாற்றத்தின் மாறுதல் இயற்கை....


படபடப்பாய் ஓடி அலைந்திடும் அலைதனை நோகாமல் தாங்கிப்பிடித்திடும் பாறைதனை ஓவியங்களில் கண்டு கழித்திடும் கண்கள் நிஜமென உணருகையில் திகைத்து நின்றிடும் மேனியின் விசித்திரம்....

பாலாய்ப்போன மனதும் பாதியில் இழந்து தவித்திடும் அதன் தடுமாற்றத்தில்....[

தனிமையில் நான் தவித்திருக்கும் பொழுதெல்லாம் உள்ளம் தேடுவது என்னவோ ,....
தனிமையை  தண்ணில் தவிக்ர்கும்..,
மாயவள் உன்னையே....

இவ்வளவு அழகு பொருந்திய உனது விசித்திர ஜாலத்தில் என் இன்னல்களும் சோர்வுகளும் ....
கணமில்லா பஞ்சென காற்றோடு காற்றாக கரைந்திடும் அதிசய கலை உன்னிடம்....


அதனால் தான் என்னவோ,....
கவலைகள் சூழ்ந்து கொள்ளும் தருணம் தன்னை அறியாமல் தேடுகிறேன் உன்னை ...
என் உதட்டோரம் தவழும்
 ஒரு சிறு புன்னகைக்காக..,♥️/color]

Sun FloweR:
எவர் வந்து ஆற்றுப்படுத்தினும்
ஆறாது என் காயம்..
எந்த விரல்கள் வந்து துடைத்திடினும் நிற்காது என் கண்ணீர் ..
எந்தக் கரங்கள் வந்து தலை வருடினும் அமைதியாகாது என் ஆன்மா..

சொல்லுக்குள்ளும்
அடங்காதது..
வார்த்தைகளுக்கும் வசப்படாதது..
வேதனையை மட்டுமே வரவாய் கொண்டு,
துன்பங்களை மட்டுமே துணையாய் கொண்டு
வாழ்பவனின் துயரக் கதை இது..

உயிராய்ப் பழகிய உறவுகளைத் தொலைத்து ..
உணர்வாய் வாழ்ந்த நண்பர்களைத் துறந்து..
தாயை மறந்து, தந்தையை இழந்து,
சகோதரனை சாகக் கொடுத்து,
சகோதரியை சாய்த்தொழிய விட்டு விட்டு என்னுயிர் காக்க பிழைப்பு தேடி கடல் தாண்டி, நாடு தாண்டி பயணித்தேன்;
எந்திரம் போல் பொருள் ஈட்டி
 உயிர் இருந்தும் உயிரற்ற பொம்மையாய் வாழ்கின்றேன்..

ஆர்ப்பரிக்கும் அலைகடலே
என் தேசம் கொண்டு சேர்ப்பாயா?
அமைதி காக்கும் பெரும் பாறைகளே என் பூமி கொண்டு சேர்ப்பாயா?
விசும்பில் வீற்றிருக்கும் வெண்ணிலவே என் லோகம் கொண்டு சேர்ப்பாயா?
இறைஞ்சுகின்றேன் இயற்கையே என் வையம் கொண்டு சேர்த்துவிடு..

எல்லாம் இழந்து நின்றாலும் என்றேனும் ஒரு நாள் தாய்மண்ணில் தடம் பதிப்பேன்...
அனைத்தும் கரைந்து போனாலும் என்றேனும் ஒரு நாள் அன்னை மண்ணில் கால் பதிப்பேன் ..

துரத்தியடிக்கப்பட்ட நாட்டிலே என் நாடி அடங்கி போகட்டும் ..
பிறப்பு தந்த பூமியிலே என் இறப்பு வந்து சேரட்டும் ..
ஜனனம் தந்த மண்ணிலே என்
மரணம் வந்து தீண்டட்டும்...
என் மரணம் வந்து தீண்டட்டும் ..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version