தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 331

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 331

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அனோத்:

 அநீதி  வாழ்வதும் நீதி வீழ்வதும்
நம் கண் முன்னால் நடக்குது.....
நியாயம் கேட்டு கூடி வந்தால்
அரசே அதை தடுக்குது........

நியாய தர்மங்கள்
முழுதாய் மறைக்கப்படுகுது
நீ யாரென  கேள்வி கேட்டு
அநியாய அதர்மங்கள்
அதிகாரம் காணுது.........

குற்றம் செய்தவன்
குபேரன் என்றால்
அரசே பாதுகாப்பு
கொடுக்குமாம்

குற்றமற்றவன் குலோத்துங்க
பேரன் ஆகினும் ஊழல் குடின்
சிறை வாசமாம்.......

ஆட்சியர்கள் சாட்சியங்களை
மறைக்க பாதுகாப்பா ?
ஆதாரத்   தடயங்களைத் 
தேட பாதுகாப்பா ?

போலித்  துறையாய்
உதவும் போலீசுக்களா ?
அல்லது தர்மம் காக்க வந்த
காவல்துறையா?

கேள்விகள் பல உண்டு
அதை  கேட்கத்  தான் அனுமதி இல்லை
கேடு பிடித்த அரசாங்கம்
போடச்  சொல்லும் தடை உத்தரவுகள்

பாடாய் படும் நீதியின்
உண்மைகளை மறைக்கவே
அதிகார நாடகங்களின்
அரங்கேற்றம்  தடை போடுகிறது ......

காத்திருப்பதும்  தடையதை உடைப்பதும்
சாமானிய மக்கள் நாம் உணரவேண்டிய
காலம் இது ..

Mr.BeaN:
காக்கி சட்டை வெறப்பாக
கண்ணு ரெண்டும் மொறப்பாக
குற்றம் ஒன்னும் நடக்காம
காவல் தானே காப்பாக
 
நீதி காக்க நாளெல்லாம்
நமக்காக உழைப்பாக
மக்கள் உசுரு காக்க தான்
செத்து செத்து பிழைப்பாக

குற்றங்கள் நடக்காம
முடிஞ்சவரை தடுப்பாக
எல்லா மக்களுக்கும்
பாதுகாப்பு கொடுப்பாக

அதையும் மீறி சில குற்றம்
ஊரிலே நடந்தாக்க
யாருமே போகாம
பாதுகாப்பா தடுப்பாக

புலனாய்வு செஞ்சுதான்
குற்றவாளி பிடிப்பாக
ஊர்மக்கள் அவர்களையோ
தெய்வமா மதிப்பாக

வயல்காட்டில் பயிர் வளர
களையும் கூட.வளருமாம்
 காவல் துறை உள்ள கூட
களைகள் பல இருக்குமாம்

வேலி பயிரை மேயும் கதை
நிஜத்தில் நடக்குமே
சில கயவர் கூட்டமித
காவல் உடையில் நிகழ்த்துமே

 எத்தனையோ இன்னல்களை
அவர்கள் தந்த போதிலும்
பத்திரமாய் நாம்.வாழ
அவர்கள் இங்கு வேண்டுமே

இந்த மண்ணில் காவலர்கள்
இல்லை என்று நீங்கினால்
கயவர் கூட்டம் கயமையுடன்
நம்மை வந்து தீண்டுமே

Vijis:
காவல்துறை நமது நண்பன்

சுடும் வெயிலிலும் கடுமையான மழையிலும்
மக்களுக்காக உழைக்கின்றவர்கள்
காடுகளிலும் கரடுமுரடான
பாதைகளிலும் பணிபுரிபவர்கள்

 நாட்டில் ஒவ்வொரு தவுறுகளையும் களை எடுத்து
சுத்தம் செய்யும் உண்ணதமான நண்பர்கள்

 நாட்டில் ஒவ்வொரு பெண்களும் இரவில்
 பயமின்றி நடமாட செய்யும் காவல்தெய்வங்கள்

 தன் மக்களுக்கு சேவை புரிவதற்கு
தன் பெற்றோர் மனைவி குழந்தைகள் உறவினர்கள்
 என்று பலரை விட்டு தன் விருப்பு வெறுப்புகளை கடந்து
 சந்தோஷமாக வேலை செய்யும் நண்பர்கள்

சில நேரங்களில் சாலையோரம் இருக்கும் பள்ளங்களுக்கும்
 கொலை வழக்குகளுக்கும் தடுப்பு பதாகைகளை
வைத்துஇருப்பார்கள் அதை மீறி நாம் செல்லக்கூடாது

காவலர் போடும் சட்டத்தை மதிப்பதும்
அதன்மூலம் நம் உயிர் காப்பதும்
நாம் காவல்துறைக்கு செய்யும் பேருதவி.

வாகனங்களை மெதுவாக ஒட்டவும்
கட்டயமாக தலை கவசம் அணிந்து
சாலை விதிகளை மதிப்போம்
இதுவே நாம் நாட்டுக்கு செய்யும் உதவியாகும்

Vethanisha:
படம் பார்த்தும் பழைய நினைவுகள்
 வந்து வந்து போகுதுங்க
நேர்மை தவறா என் போலீஸ் அப்பாவிற்கு
 இந்த கவிதை சமர்பணங்க

மூவினம் வாழும் நாடு என் நாடுங்க
இங்க
மொழி இனம் மதம் பேதம் இன்றி
நேர்மையாய் உழைத்த   மனுஷனுங்க

துரைசிங்கம் போல மீசையும்
ராகவன் போல கம்பீரமும்
ஜோசப் குருவிலா போல குசும்பும்
தனக்கே கொண்டவருங்க
சுகுமாறன்னு பேரு கொண்ட அவரு
எங்க அப்பாவுக்கே அண்ணனுங்கே

கரு நீல சீருடை அணிந்து
நேர்கொண்ட பார்வையோடு
 மெடுக்காய் அவரு  வருகையில
 தூர நிக்கும் காலி பசங்க கூட
 தலை தெறிக்க  ஓடுவாங்க

நாடோடி வாழ்க்கை அது
அடிக்கடி posting  மாற்றுவாங்க
பக்கமே வீடு இருந்தும் பண்டிகைக்கும்   
 அவருக்கு  வேலைதாங்க

எத்தனை மணிக்கு phone வந்தாலுமே
உடனே எழுந்து ஓடுவாருங்க
 கை சுத்தம் வாய் சுத்தம் இதுவே
காவலனுக்கு போதுனாருங்க

காவலர்கள்

அவர்கள் விழித்திருப்பது
நாம நிம்மதியா தூங்கத்தாங்க
அவர்கள் கண்டிப்பாய் இருப்பது
நாம பாத்துக்கப்பா இருக்கதாங்க
அவர்கள் போடும் தடுப்பு
குற்றத்தை  தடுக்கத்தாங்க   
நெறியோடு நாம்  நடந்து அவர்கள்
பணிச்சுமையை குறைபோமுங்க

காவலர்கள் நம் நண்பனா
அது சரியாய் தெரியலைங்க
ஆனா
கடமை தவறா என் போலீஸ் அப்பா மாதிரி
 இருக்கும் ஒவ்வொருத்தரும்
 என் மனதில் ஒசத்தி தாங்க


 VethaNisha.M





Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version