தமிழ்ப் பூங்கா > கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது

ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 333

(1/2) > >>

Forum:
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....

**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.

நிழல் படம் எண் : 333

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Mr.BeaN:
காலம்
கணிக்க முடிந்த கணக்கல்ல
கடக்க முடியா வழக்கு

ஆண்டுகள் பல ஆகியிருந்தாலும்
 புது வருடம் வந்தால்
கொண்டாடி தீர்த்து கூத்தாடி மகிழ்ந்து
இத்தனை கேளிக்கையில்
என்றேனும் சிந்தித்தோமா
 எத்தனை நொடிகளை கொன்று
பிறக்குது புத்தாண்டு என்று


ஒன்றின் வீழ்ச்சியில் இன்னொன்று பிறக்குமாம்
மனித்த்தை கொன்றா பிறக்குது புத்தாண்டு?
எத்தனை இன்னல் சுற்றியும் நடக்க
எளிதென கடந்து நகர்கிறோம் நாமும்

சென்னையும் நெல்லையும்
வெள்ளத்தில் மிதக்க
என் இடம் மேடென
மனமுமே நினைக்க
இப்படி எண்ணமும் தோன்றிடும்
நம்மிடம்
இருந்ததாய் சொல்லிடும் மனிதமும் எங்கே?

எந்திரம் போல ஆன நம் வாழ்வில்
மனிதம் என்னும் மந்திர சொல்லை
மனத்திலே இருத்துவோம் மனிதம் வாழ
பிறக்கட்டும் புத்தாண்டு நாமுமே ஆள..

Vijis:
ரோபோ

அறிவியல் அறிவின் படைப்பு என்பார்கள் ஆனால் தனி ஒருவரின் அறிவின் படைப்பு

தன்னை உத்தியோகப்படுத்தி கொண்டு இன்று ரோபோட்டிக் என்ற பெயரில் உள்ளது நாளை என்ன பெயரோ

ஒரு வரிக் கேள்வினை கொடுத்தால் இரண்டு வரி பதில் கொடுக்கும் மனிதனுக்கு இடையில் இரண்டு பக்கம் பதில் கொடுக்கும் எந்திரமே

 இன்று பேட்டரியை போட்டு ஒட விடும் இந்த ரோபோ நாளை நமக்கு இரண்டு பேட்டரி கட்டையை உணவாக அளிக்கலாகுமோ

 ஆனால் இன்று நாம் வேடிக்கையாக பார்க்கும் ரோபோ நாளை நம்மை வேடிக்கை பொருளாக ஆக்கலாமோ

கணிமையான இவ்வுலகில் கண் கட்டி வித்தையாக நாமும் சுழல்கிறோம் நீயும் சுழல்வாயோ

 எந்த கேள்வி கேட்டாலும் சற்றென்று பதில் கிடைக்கும் என்று மனிதனின் உணர்வுகளுக்கும் உணர்ச்சிக்கும் விடுதலை பெற உருவாக்கப்பட்ட ஆயுதம்

 மனித உணர்வுகள் நாளை நம் பிள்ளைகளின் பாட நூல்களில் வரலாம் உண்மையான ரோபோ நாம் தான் நம்மை உருவாக்கிய பெற்றோரே அறிவியல் விஞ்ஞானிகள்

 இனி வரும் இந்த புத்தாண்டில் தனி மனிதனின் ஒருவரின் படைப்பு அவரின் வசதிக்காகவே என புரிந்து

இயற்கை மாறாக உருவாக்கப்பட்ட இந்த எந்திரத்தை பயன்படுத்தாமல் மனிதனின் அறிவினால் அன்பும் பண்பும் நிறைந்த இவ்வுலகில் இன்னும் பல சாதனைகளை புரிந்து வெற்றி பெறுவோம் இனிமையான வாழ்வை வாழ்வோம்        நன்றி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Sun FloweR:
இயந்திரத்தின் விரலிலே
மனித இனத்தின் இயக்கம்...
பழையன கழித்து
புதியன புகுத்தும்
புதுமை பிரம்மாக்கள்...

7ம் அறிவு,
 8ம் அறிவு என நீட்சி பெற்றுக் கொண்டே செல்லும் உலோக மனிதர்கள்...
அன்னையின் கருவுமில்லை
தந்தையின் உயிர் துளியும் இல்லை...
விஞ்ஞான பேரறிவு பெற்றெடுத்த வித்திலே
முளைத்து விட்ட
விந்தை மனிதர்கள்...
இதயமற்ற மானுடர்கள் ..

அன்பற்றவர்கள் இவர்கள்
அறிவுள்ளவர்கள் இவர்கள்
கட்டளையைச் செய்பவர்கள் இவர்கள் ..
கண்ணீர் வடிக்க தெரியாதவர்கள் இவர்கள் ..

வயோதிகமும் அண்டாதவர்கள்...
வியாதிகளும் நெருங்காதவர்கள்..
லஞ்சமும் வாங்காதவர்கள்...
வஞ்சமும் அறியாதவர்கள் ..

உயிருள்ள மானிடத்தில் பொய், களவு, துரோகம், பேராசை பொதிந்திருக்கும்..
உயிரற்ற இயந்திர மனிதனுள்
கடமை மட்டுமே எஞ்சியிருக்கும்...

கணிப்பொறியின் முன்னே
குவலயமும் ஓடுகின்றதே!
எந்திரத்தின் பின்னே
மனித வாழ்வும் மண்டியிடுகிறதே!

எஃகு மனிதன் விரல் நுனியில் எழுதிவிட்டான் 2024ம் ஆண்டை..
இரும்பு மனிதன் துவங்கிவிட்டான் புதிய நூற்றாண்டை...

ரோபோக்களின் ஆதிக்கத்தில்
செழிப்பாகட்டும் உலகம் ..
எந்திர மனிதர்களின் கட்டுப்பாட்டில்  கனவு வெல்லட்டும் பூலோகம்..


வருக புதிய மனிதனே...
வருக புதிய 2024ம் ஆண்டே ..

TiNu:


இயற்கையின் பருவ மாற்றத்தில் கணக்கிட்ட காலத்தை..
இன்று இலக்கங்களில்(Numbers) தேடுகிறது உலகம்...

மனிதமும், இயற்கையின் ஓர் அம்சமென்பதை மறந்து ..
மானுட மதியால், விளைந்த எந்திரங்களின் பின்னே ஓடுகிறான்..

ஓரறிவு ஜீவன் முதல் ஆறறிவு உயிர்கள் அடங்குமாம், அந்த ஐந்தில்..
நம் புலன்களால் மட்டுமே, உணரும் அனைத்தும் அடங்குமாம், அதே ஐந்தில்..

இப்பிரபஞ்சமே! நிலம், நீர், நெருப்பு, காற்று, மேகத்தில் அடங்கி நிற்க..
நீ ஏனடா! எண்களின் கைகளை, பற்றிக்கொண்டு நடைபோடுகிறாய்..

தொழில்நுட்பம் துணைகொண்டு நீ 1000 சுலபவழிகள் கண்டறிந்தாலும்..
அவையாவும், உன்னை அழைத்துச்செல்வது ஏனோ! உன் அழிவுக்குத்தானே..

ஈராயிரத்து இருபத்து நான்கோ இல்லை.. இரு கோடியே இருபத்து நான்கோ..     
காலம்! எதுவாக இருப்பினும், அதன் முடிவை... அதுவே சொல்லும்.   
 
எத்தனை கோடிகளை, இவுலகின்  உருபொருள்கள் கடந்து போனாலும்..
இறுதியில்! அதன் உருவமாற்றம் என்னவோ ஐந்தில் ஒன்று தானே. ..

அதனால்,
என்றுமே!  நாம் நம் வாழும் காலம் மட்டும், இயற்கை எனும் ஆடைகள் அணிந்து,
இந்த பூமி தாயின் மடியில்.. குழந்தைகளாய் மகிழுந்து தவழுவோம்..

Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version