Author Topic: பாசம்!  (Read 1015 times)

Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
பாசம்!
« on: September 04, 2016, 02:11:43 PM »
ஒரு ஊரில் ஒரு தம்பதியினர் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது,அவள் பெயர் அனிதா. அவள் தாய் மீண்டும் கருவுற்றிருந்தாள். அவர்களுக்கு தெரியும் வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையாகத்தான் இருக்கும் என்று.

பெற்றோர்கள் இருவரும் அனிதாவிடம் உனக்காக ஒரு தம்பி பாப்பா வரப்போகிறான். நீயும் அவனும் சேர்ந்து ஜாலியா விளையாடப்போறீங்க என்று சொல்லியே வளர்த்தார்கள்.

அனிதா அவள் அம்மா வயிற்றில் தினமும் கைகளால் தடவிக்கொண்டே டேய் தம்பி சீக்கிரம் வெளியே வாடா நாம ஜாலியா விளையாடலாம் நான் உன்னை யாருக்கும் குடுக்க மாட்டேன், நான் மட்டுமே உன் கூட விளையாடுவேன் என்று சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அனிதா இன்னும் முகம் பார்க்காத தன் தம்பியிடம் அவ்வளவு பாசமாக இருப்பதை பார்த்து அவள் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அனிதாவுக்கும் தினமும் அம்மா வயிற்றில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதே வாடிக்கையாக இருந்தது.

நாட்கள் உருண்டோடின பிரசவ வலி எடுக்கவே மருத்துவமனையில் சேர்த்தார்கள்.பிரசவம் நார்மலாக இருக்கும் என்று நினைத்தார்கள் ஆனால் மிக சிக்கலாகி ஆப்ரேஷன் பண்ணிதான் குழந்தையை வெளியே எடுத்தார்கள்.மருத்துவர்கள் குழந்தை மிக பலவீனமாக இருக்கிறது

இன்னும் சில நாட்களே உயிரோடு இருக்கும் என்று கூறி ICU வில் அட்மிட் பண்ணினார்கள்.
அனிதாவையும் அவள் தந்தையையும், குழந்தையையும் அம்மாவையும் பார்க்க அனுமதிக்கவே இல்லை.பிறகு அனிதாவின் தந்தையை மட்டும் அனுமதித்தார்கள் அவர் உள்ளே சென்று குழந்தையை பார்த்துவிட்டு வந்தார்.

ஒரு வாரம் ஓடி விட்டது அனிதா அடம் பண்ண ஆரம்பித்தாள் நீ மட்டும் பார்த்துட்டு வந்தியே நானும் தம்பியை பார்க்கனும் என்று கத்தினாள்.உன் தம்பி சாமிக்கிட்ட போகபோறான் உன்னை மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கமாட்டாங்கம்மா என்று அவள் அப்பா சொன்னார்.அவள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணவே சரி நாளைக்கு எப்படியாவது உன்னை உள்ளே கூட்டிட்டு போறேன் என்றார்.

மறுநாள் மருத்துவமனயில் அனிதாவையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவேண்டும் என்று கேட்டார் ஆனால் குழந்தையை ICU வுக்குள் செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று கூறினார்.பிறகு அவர்கள் கெஞ்சுவதை பார்த்து அனுமதித்தார்கள்.

அனிதா உள்ளே ஓடிச் சென்று குழந்தையின் பிஞ்சு விரலை பிடித்தாள்,அவள் கை பட்டதும் குழந்தை லேசாக அசைந்தது. டேய் தம்பி எழுந்து வாடா நாம விளையாடலாம்’ என்றாள். குழந்தை லேசாக மூச்சு விட ஆரம்பித்தது. ’உன்னை நான் சாமிக்கிட்ட கொடுக்கமாட்டேன், நானே வச்சுக்குவேன், நீ என் கூடத்தான் இருக்கனும்’ என்றாள். இப்போது குழந்தையின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது.

மருத்துவர்களே ஆச்சரியப்பட்டார்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்து விட்டு இனி நீங்கள் பயப்படத் தேவை இல்லை என்றார்கள்.

நாம ஒரு பொருள் மேல உண்மையான பாசம் வச்சிட்டா அந்த ஆண்டவனே நினைச்சாலும் நம்ம கிட்ட இருந்து பிரிக்க முடியாதுங்க...!!
[/b]

copy write

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: பாசம்!
« Reply #1 on: September 04, 2016, 03:43:11 PM »

Baby ma....
nice story...its so touching ....en anna ne nyabagam
padithiruchi this story.....
naanum anna saami kitta porathuku munna ...
avunga kaiye pidichi pesi iruntha poiruka matangapole....
I Miss Him....alot.......... :'( :'( :'( :'( :'(
anyhow ....nadanthathu nadanthuruchi.....
The Story Really awesome baby....
Keep Writing...Waiting for ur upcoming Stories.....
All the Best Bb ka............


« Last Edit: September 04, 2016, 10:45:48 PM by MysteRy »


Offline BlazinG BeautY

  • Full Member
  • *
  • Posts: 182
  • Total likes: 800
  • Karma: +0/-0
  • Gender: Female
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு!
Re: பாசம்!
« Reply #2 on: September 06, 2016, 04:11:19 PM »

எப்போதும் கூடவே இருப்பேன் ரித்திகா  ,
இது  முக புத்தகத்தில்  வந்தது ... மனதை தொட்டு விட்டது, சில கண்ணீர் துளிகள் வழிந்தோடின.
நண்பர்களுடன் பகிர நினைத்தேன் ...

 

Offline PraveeN

Re: பாசம்!
« Reply #3 on: September 28, 2016, 10:11:35 AM »
Dear Ms. Blaze,


Very Nice story, When I studied In Climax Really I got Tears from My Eyes.....

This is Called Love and Affection....

Best Wishes,

Praveen

Offline SweeTie

Re: பாசம்!
« Reply #4 on: September 29, 2016, 06:36:43 AM »
அருமையான கதை  தோழியே.  வாழ்த்துக்கள்.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: பாசம்!
« Reply #5 on: December 15, 2016, 07:32:58 PM »
ஒளி அழகு, வணக்கம்,

பாசம், இணையில்லா உறவு!

தாயின் கருவுற்ற வயித்தில் இருந்து
தம்பி வருவான், தங்கை வருவாளென
எதிர்பார்த்து ஏமாந்த கண்ணீர்கதைகள்
அதிகம்.

உங்கள் ஆக்கங்களை படிக்கையில் மனிதம்
கலங்கவே செய்கிறது சகோதரி, பலரும் உலகில்
மறக்கின்ற, எங்குமே விற்பனைக்கு வரமுடியாத,
விலைமதிக்க முடியாதவற்றை இலவசமாக
விற்பனை செய்கின்றீர்கள், படித்ததிலிருந்தும்!

கொள்வனவு செய்துவிட்டேன்! பேணிக்காத்திடவும்
முயல்வேன்,

சிறியதொரு அதிகப்பிரசங்கிதனம் செய்கின்றேன்
குறைபொறுத்திடுக!

கடவுள் தீர்மானித்தால் மனிதன் மாற்றிவிட முடியாது.
ஆனால் கடவுள் விரும்புவது போன்று, பாவம், வஞ்சம்,
பழி, பொறாமை, பகை இன்னமும் இவைபோன்ற
அழுக்குகழும் அசிங்கங்கழும் இல்லாமல் தூய உள்ளம்
கொண்டு மனிதன் வேண்டுதல் செய்தால் கடவுள் இரங்கி,
அருள்வார்!

வஞ்சமில்லா பிள்ளை உள்ளம் இவைகளை அறிந்திடாது,
எனவே வேண்டுதல் செய்ய அறிந்திடாத போதிலும், அனிதா
அன்புக்கு கடவுள் இரங்கி இருப்பார்!.

நான் அறிந்ததை சொல்லாது கடந்து போனால் பாவம்
எனைவந்து சேரும்.

தங்கையே ரீத்திக்கா கலங்காதிரு, நன்னைமகள்
உனைச்சூழ வேண்டுகின்றேன்.

பாசம், இணையில்லா அக்கா தம்பி உறவு!

வாழ்க வளம்பெறுக.
நன்றி

உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....