Author Topic: திண்டுக்கல் ஜிலேபி  (Read 2214 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
திண்டுக்கல் ஜிலேபி
« on: July 26, 2011, 02:42:21 PM »
திண்டுக்கல் ஜிலேபி


தேவையானவை:

    * உளுந்து – 200 கிராம்
    * பச்சரிசி – 50 கிராம்
    * வனஸ்பதி – 250 கிராம்
    * ரீபைண்ட் ஆயில் – கால் லிட்டர்
    * நெய் – 150 கிராம்
    * சர்க்கரை – அரைகிலோ
    * தண்ணீர் – ஒரு லிட்டர்
    * எலுமிச்சம் பழத்தில் பாதி மட்டும்.

செய்முறை:

    * முதலில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஜீராவாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.
    * அடுத்து கால் மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் கிரைண்டரில் போட்டு நன்கு நைஸ் பதத்துக்கு மாவை ஆட்டி எடுத்து வைக்க வேண்டும்.
    * இப்போ ஜீராவும், ஜிலேபி மாவும் ரெடி.
    * சூடான எண்ணெய் சட்டியில் ரீபைண்ட் ஆயிலுடன் நெய்யை சேர்த்துவிட்டு, அதில் பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட வேண்டும்.
    * எண்ணெய் சட்டி நன்கு காய்ந்தவுடன் ரெடியாக இருக்கும் ஜிலேபி மாவை பிழிய வேண்டும்.
    * சிறிய ஓட்டையுடன் இருக்கும் துணியில் கையளவு மாவை எடுத்து கொண்டு, கொலுசு மாதிரி சிறிய சிறிய வளையங்களாக ஒரே சீராக பிழிய வேண்டும்.
    * சுவையான ஜிலேபி தயார்!