FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on March 27, 2021, 11:08:37 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: Forum on March 27, 2021, 11:08:37 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 262

இந்த களத்தின்இந்த  நிழல் படம்  FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

(http://friendstamilchat.org/Forummedia/forumimages/OU/262.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: kanmani on March 28, 2021, 03:26:09 PM
ஊரெங்கும் விழாக்கோலமாச்சு
எரியாத தெருவிளக்கு எரிய ஆரம்பிச்சிடுச்சு
ஒரு குவாட்டருக்கும் பிரியாணிக்கும் கிளம்பியாச்சு
கட்சி கரைவேட்டிகளெல்லாம் பரபரப்பாகியாச்சு
இதுவரை யாரும் பார்த்திராத விருந்தாளி
வோட்டுக்கேக்க வீடு வீடாக ஏறுமுகமாச்சி

வாக்குறுதிகளையும் அள்ளிவிட்டாச்சி
நம்ம தலையில் வரியும் ஏத்தியாச்சி
ஆரத்தி எடுத்தால் நூறுரூபாய் என ஆசையாச்சி
தட்டோடு தெருவில் பிச்சை எடுக்கவும் நின்னாச்சி
எத்தனையோ சம்பவமும் மறந்தாச்சி
எத்தனை எத்தனையோ ஊழலும் காற்றில் பறந்தாச்சி

தெருவுக்கு ஒரு கட்சி என்றாச்சு
சாதிக்கு வோட்டு என்றாச்சு
இலவசத்திற்கு கையையும் நீட்டியாச்சு
கேள்விகேட்கும் வாயையும் அடிச்சாச்சி
பாக்க பாக்க எல்லாம் பழகிப்போச்சு
விவசாய கடன் தள்ளுபடி ஆச்சி
விவசாயத்தை பாழும் குழியில் தள்ளிவிட்டபின்..
கல்விக்கடனும் ரத்தாச்சி
பணம் சம்பாதிக்க மட்டுமே கல்விநிலையங்கள் என்றானபின்
இதுக்கெல்லாம் ஆசைப்பட்டு வாய பொலந்தாச்சி
பொழைக்க  வழி தெரியாமல் அவலமும் ஆரம்பிச்சாச்சு

திரும்பி பார்க்கும் நேரம் வந்தாச்சு
எனது வோட்டு எனது உரிமையாச்சி
வெற்றிநடை போட்டு உரிமைகளை மீட்டிட நீதி-நெறியோடு
தமிழனாய் களமிறங்கியாச்சி
நல்லாட்சி கொண்டுவர கிளம்பியாச்சு
வோட்டு போட்டிட  வாரீர்.. அரசியல் மாற்றம் காண்பீர்

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: AgNi on March 28, 2021, 08:59:51 PM


ஜன நாயகத்தின்  பண நாயகர்களே!
வந்து விட்டது உங்களின் தேர்தல் திருவிழா !
மக்களை மாக்கள் ஆக்கும்  எங்களுக்கோ
மற்றும் ஒரு திருவிழா!

சினிமா அரசியலும் வந்தாச்சு..
வாரிசு அரசியலும்  வந்தாச்சு..
சாமியார் அரசியலும்  வந்தாச்சு..
 ஜாதி  மத  அரசியலும்  வந்தாச்சு..
கார்பரேட் அரசியலும் வந்தாச்சு...
சாக்கடை அரசியல் ஆயாச்சு!
எப்படியோ நாங்கள் அரசாண்டால்
எங்கள் தலைமுறை கொழிக்க வேண்டுமே!

ஆயிரம் வாக்குறுதிகள் இங்கே !மக்கள் வளர்ச்சி எங்கே !
காற்றாடி மேலே போக வைக்கும்  நூல்கண்டை பற்றி
எங்களுக்கு எங்கே கவலை பட நேரம் ?
நாணயம் எந்த கடையில் விற்கும் ?
நாட்டு பற்றுயென்றால் என்ன ?
இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் ?

மக்கள் தொண்டா ?சமுதாய வளர்ச்சியா?
அதெல்லாம் எதற்கு ?என்  வீட்டுநலம் காப்பேன் ..
என் உறவு மக்கள் வளர வேண்டாமா ?
மக்கள் வாழ்ந்தால் என்ன? வீழ்ந்தால் என்ன ?

நம்பிக்கை என்ற மரம் வளர்க்கவே இங்கு
பண விதைகளை ஊன்ற  வேண்டி  இருக்கிறதே ?
நாளை வெற்றி கனிகளை பறிக்க இன்றே நட்டு வைப்பேன்
ஊழல் நீர் பாய்ச்சாமல்  ஒரு உயிரும் காய்க்காதே! 

உண்மைகளும் இங்கே உறங்கட்டும் சிறிது நாள்
பொய்களும் வாக்குறுதிகளாய் ஊர்கோலம் போகட்டும்
நம்பும் மக்கள் இருக்கும்வரை ஏமாற்றுவது எளிதுதான்
எங்கள் வாழ்வில்  ஒளி ஏற்றும் தேர்தலே வருக !



Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: JsB on March 28, 2021, 09:38:40 PM
நான் பிறந்த செழிப்பு மிக்க தேசமே...
என்னை வாழ வைக்கும் தேசமே...
நான் அதிகம் நேசிக்கும் தேசமே...
இன்று தேசத்தில் மக்கள் சக்தியால்...
சக்தி வாய்ந்த அரசுகளும்...தலைவர்களும்
தேர்தலில் தோல்வியை தழுவியுள்ள தேசமே...


தேசத்தில்...
புதிய சட்டங்கள் பிறந்து
பழைய சட்டங்கள் நீக்கப்பட்டு
இன்று பணத்தை செலவழித்தால் தேர்தலில் மட்டுமல்ல
வாக்காளர்களையும் வெற்றி பெற்று விடலாம் என்ற மனநிறைவும்
பின் செலவழித்த பணத்தை திரும்ப பெற...
பல மடங்கு ஊழல் செய்யும் நிலையும்...
கண்கொள்ளாக் காட்சியாக...
படமெடுத்துக் காட்டுகிறதே...

வாக்காளர்களே...
வாக்களிக்க மறக்காதவர்களே...
வாக்காளர்கள் தங்களுக்கு கொடுக்கப்படும்
பணம்,இதர சலுகைகளை எதிர்ப்பாராமல்...
தங்கள் கைகளிலுள்ள ஆயுதத்தைக் கொண்டு...
ஜாதி, மதம், இனம் பாராமல்
நீதியோடு...நேர்மையோடு...துணிந்து நின்று...
மாபெரும் சட்டமைக்க உறுதியோடு போராடுங்கள்...

வாக்களிக்க பதிவு செய்யாதவர்களே...
வாக்களிக்க மறந்து போனவர்களே...
வாக்களிப்பது என் கடமை...
அது என் உரிமை...என்று
சிந்திக்க மறந்தது ஏன்?...

வாக்காளர்களின் சக்தி அளவிட முடியாதது
என்பதை ஆழமாக இதயத்தில் பதிவு செய்து...
தேசம் பற்றெனும் காந்தம் கொண்டு
கண்ணியமாக வாக்களியுங்கள்...
வாக்களிக்கும் குடிமகன், குடிமகள், குடிமக்கள்
என்பதில் பெருமை கொள்ளுங்கள்...


என்றும் அன்புடன்,
உலக தேசங்களுக்காக
திறப்பில் முழங்காலில் நிற்கும்
ஜெருஷா JSB
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: SweeTie on March 28, 2021, 10:39:34 PM
அட  என்னங்க  எங்க போறீங்க
வோட்டு  போட கெளம்பிடீங்களாக்கும் 
காசு வாங்கிடீங்களாக்கும் 
இனி  ஆருக்கு  போட்டத்தான்  என்ன
எவனுக்கு  தெரியப்போவுது
அரசன்   ஆண்டா  என்ன
புருஷன்   ஆண்டா என்ன 
எவன்  எத பண்ணிடப்போறான் 

ஐஞ்சு வருசத்துக்கு   ஒருதரம்
காச   எறிஞ்சு   வோட்டு  வாங்கிப்புட்டு '
மாயமா மறைஞ்சு போறானுங்க
பதவி  ஆசை  ஆர  விட்டுச்சு
சாகும்வரை  நாற்காலி விட்டு   எறங்கமாட்டனுங்க
மத்தவன் நல்ல இருந்தா   பொறுக்கமாட்டானுங்க 
நம்ம  மக்களுக்கு   சோறு முக்கியம்
எவன்   ஆண்டா  நமக்கென்ன வந்துச்சு
பேச மட்டும்தானே  முடியுது

அரசியல்வாதி  கல்லுப்போல  உக்காந்திருக்க 
ஆதரவாளர்    அடிபுடிபட்டு  அநியாயமா   செத்துபோறானுங்க
ஆதரவு   கேட்டு  அவன் குடும்பம்    நாயா  பேயா அலைஞ்சா   
நாளைக்குவா   நாளைக்குவானு      சொல்லி   
அவன் பொழப்ப  ஓட்டிட்டு இருப்பான்
நம்ம  சனங்க    ஏமாந்து    சீரழிஞ்சு   
திரும்பவும் அவனுக்கே  வோட்டு போட்டு 
நாற்காலில  ஏத்திவிடும்
இதுதாங்க நம்ம அரசியல் .   

சனநாயகம்   சொல்றதுக்கு மட்டும்தான்
பண்றதெல்லாமே   சட்டவிரோதம்
நாய கண்டா  கல்லக்  காணோம்
கல்லக்   கண்டா   நாய  காணோம் கதைதான்
பிரச்சனைன்னு வந்துட்டா   அரசியல்வாதி  காணாமப்போடுவான்
வோட்டு வாங்கினத்தோட அவன் கத   முடிஞ்சுபோச்சு
அடுத்த தேர்தல் வர மட்டும்   நம்ம காத்திருக்கனும் .
இது நமக்கும்   பழகிப்போச்சு   
அரசியல்வாதிக்கும்    பரீட்ச்சயமாப்போச்சு
மாறாத  அரசியல்  நம்ம அரசியல்.   

 [/b]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: Hari on March 30, 2021, 09:39:52 PM
ஜனநாயக நாட்டில்   உனது  தனி  உரிமை
உனக்கான  ஆளுமையை தேர்வு செய்வது
இவன் நல்லது செய்வான் அவன் நல்லது செய்வான்
என்று நம்பி வாக்களிக்க போகிறோம்..

அவன் ஏறுவதோ  பணம் காய்க்கும் மரம்
ஏறும் வரை   நம்  காலை பிடிப்பான்,
உச்சாணி  கொம்பை  அடைந்துவிட்டால் 
பின்  உன் தலையில் காலால் மிதிப்பான்..
5வருடம்  சில்லுனு குளிசாதன அறையில் இருப்பான்..

உன் ஒற்றை வாக்கிற்காக வீதி வீதி யாய்
சுட்டெரிக்கும் வெயிலிலும் சுற்றி திரிவான்..
அதை செய்வேன் இதை செய்வேன் என்று பொய் கூறி
உனது மனதில் ஆசையை தூண்டுவான்..

ஆட்சி அதிகாரம்  என்னும்  பணம் காய்க்கும் அரியணை ஏறிய பின்
உன்னை செல்லாத காசாய் தூக்கி ஏறிவான்..
அவன் தூக்கி எறியும்  பிச்சை  காசுக்கு 
உன் விலைமதிப்பு மிக்க  வாக்குகளை விற்று
 உன்   தரம் தாழ்த்தி கொள்ளாதே..

வருபவன் ஒவொருவனும்  மிக சிறந்த நடிகனே 
அவன் நடிப்பை கண்டு கரைந்து விடாதே..
பச்சை பசுமையாய் இருக்கவேண்டிய நம் நாடு
பசுமை  இழந்து இன்று ஊழல்  நிறைந்த நாடாய்  இருப்பது  என் ?
 பணம் என்னும் காகித  குப்பைக்கிடங்குகளின்  அதீத வளர்ச்சி 

நீ  என்ன செய்துகொண்டுருக்கிறாய்  என்று சிந்தனை செய்..
நீ எப்படி இருந்திருக்க வேண்டும் என்று சிந்தனை செய்..
உன் ஏதிர்காலத்தின் தலைஏழுத்தை மாற்ற
நீ என்ன செய்ய போகிறாய் என்று சிந்தனை செய்..
சிந்தித்த பின்பு உன் விரலை நீட்டு..
உன்னை காக்கும் நேர்மையான நல்ல தலைவனுக்கு போடு ஓட்டு..
உன் ஜனநாயக உரிமையை நிலை நாட்டு..
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: Cholan on March 30, 2021, 10:18:07 PM
     மாறி மாறி வரும் தனமழை  காலமிது
     மழலை முதல் முதுமை வரை அரசியல்
     வியாதியுறும்   காலமிது
     சரி தவறு பட்டியல் வெளியீடு  வெளியாகும் காலமிது
     மக்கழும்   அரசன் ஆகும் காலமிது .


     ஐந்து ஆண்டு காணாத முகம்கள் வெளித்தோன்றி
     என் அணி மக்கள் என வாதிடும்  காலம்
     அறியப்படாத வண்ணக்  கொடிகள்
     பருந்துகள் போல்  பறக்கும்  காலம்


     கதர் தொழிலாளர்களுக்கு   ஓய்வில்லாத உழைப்பு
     அச்சகங்களில்   தாளின்றி  தவிப்பு
     தொலைக்காட்சி  வானொலி பரபரப்பு
     கால்நடைகளுக்கு   என்றுமில்லா  விருந்தளிப்பு


     சிறு பேச்சாளர்களும்  பிரச்சார மேதை ஆகிடுவார்
     அரசியல்வாதிகள் இசைக்கலைஞர்களாய்  மாறிடுவார்
     கட்சி பாடல் தாரை தப்பட்டை வெடி செவி கிழிக்கும் .
     சமூக ஊடகம் உள்ளடக்கம் தேடி அலையும்
     சண்டை  சச்சரவுகள்   நிறைந்த   காலமிது


     ஏழ்மை வாழ்வாதாரம் மாறும் என நினைத்து
     விரலில் கரும்புள்ளி குத்தி
     முடிவு வரும்  வரை  இரவுபகல்  காத்திருந்து
     மறுபடியுமா என நம்பிக்கைகள் தளர்ந்து
     போகும் காலமிது


     மூடநம்பிக்கை அதிகமாக இருக்கும் நாட்டை
     தமிழ்நாட்டை கடவுளே இல்லை என சொல்லும்
     திராவிடர் ஆளும் காலமிது



     இப்படிக்கு
     இவன்.

எனது முதல் முயற்ச்சி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: MoGiNi on March 31, 2021, 01:10:26 AM
சேவைகள்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அலசி ஆராயப் படுகிறது
அரை டஜன் வாக்குறுதிகள்
அள்ளி  விடப்படுகிறது..
யார் வீட்டு சுவர்களோ
அநியாயத்துக்கு அபகரிக்கப்பட்டு
அலங்கார வார்த்தைகள்
அள்ளி  தெளிக்கப்பட்டு
அரை குறை நிர்வாணமாய்
பல்லிளிக்கின்றது
சில பல பதாகைகளுடன் ..

அன்றுவரை அறிந்திராதா
அந்தகார காடுகளும்
அதிகாரத்துக்கு ஆசைப்படுவோரின்
அழகு முகங்களை
அலங்கரித்து
சிரித்து நிற்கிறது ..
நகரும் சிறு காட்டு நரிகளும்
அலறுகிறது அதுகண்டு ..

பாழடைந்த குளங்களும்
படர்ந்த காட்டுச் செடிகளும்
பத்து நாட்களாக
தூர்வார படுகிறது
பத்துமாதம் கழித்து
பசியால் சாகும் ஒருவனுக்கு
அது உதவி புரியலாம் ...

திடீர் திடீரென
முளைத்து சிரிக்கும்
சமூகசேவை மையங்களும்
சமுதாய விழிப்பு பதாகைகளும்
பார்ப்பவரை
பல்லிளிக்க வைக்கிறது ..

வீட்டுக்கு  ஐவராம்
ஐந்தை பெற்றதன்
அருமை என்னவோ
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அன்பளிப்புகளால்
நியாயப்படுத்தப் பட்டுவிடுகிறது ..

இலவசங்கள்
எங்கும் நிறைந்து கனக்கிறது
இருதயங்கள்  எங்கும்
இவை எதற்கென்று
கேள்வி எழுகிறது  ..

அவனா இவனா
இவனை விட்டால்
வேறுண்டா ...
எங்கிருந்தேனும்
ஒரு இரட்ஷகனுக்காய்
மனிதம்
ஏங்கித்  தவிக்கிறது ..

விடுதலைக்கு ஏங்கும்
பூமித் தாயின்
விலங்கினை அறுக்க
ஒரு வீரன் வேண்டாம்
ஒரு மனிதனுக்காய்
காத்திருப்பது
கருவறுக்கப்பட்ட
தாயின் கடைசி நம்பிக்கை .
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 262
Post by: thamilan on March 31, 2021, 06:48:56 AM

தேர்தல்
நம்  நாட்டுக்கு ஒரு சாபக்கேடு
ஐந்து வருடத்துக்கு ஒரு முறை வரும்
ஆட்சி மாறும்
அதிகாரம் கைமாறும்
மனித இனம் மட்டும் என்றும்
அதே நிலையில்

தேர்தல் வந்து விட்டால் திருவிழா தான்
என்றும் ஏரியா பக்கமே வந்திராதவன் கூட
படை எடுத்து வருவான்
கூப்பிய கை கூப்பியவண்ணமே இருக்கும்
கண்களில் இரவு அடித்த சரக்கின் சிவப்பையும் மீறி
பரிவு படமெடுக்கும்
அந்த ஏரியாவையே சொர்க்கமாக மாற்றுவதாக
வாக்குகளை அள்ளி வீசுவான்
அவர்கள் போடப்  போகும் வாக்குகளுக்காக

ஒருவன் நான் வீட்டுக்கு வீடு
கிரைண்டர் தருகிறேன் என்பான்
இன்னொருவன் தையல் மிஷின்
தருகிறேன் என்பான்
மக்களுக்கு குழப்பமே
யாரு நல்லவன் யாரு கெட்டவன் என்பதல்ல
கிரைண்டரா மெஷினா என்பதே 

சாராயத்துக்கும் பிரியாணிக்கும்
விலை போகும் ஆண்கள்  கூட்டம்
மிக்சிக்கும் கலர் டிவிகளுக்கும்
விலை போகும் பெண்கள் கூட்டம்
தங்கள் ஒரு ஓட்டு
ஒரு நாட்டின் தலைவிதியையே நிர்ணயிக்கும்
இதை அறியாத அப்பாவி மக்கள்

தன் பலம் என்னவென்று அறியாத பாமரன்
அவன் பலவீனம் என்னவென்று
நன்கறிந்த அரசியல்வாதிகள்
கழுத்தை சுற்றி
நாய்ப்பட்டையிட்டு தங்களுக்கு வாலாட்ட வைத்திடும்
வித்தை தெரிந்தவன் அரசியல்வாதி
இயல்பான சுதந்திர உணர்வோடு
திமிறி நழுவிச் சென்றால்
இரண்டு பிஸ்கட்டுகளை வீசினால்
அடங்கிப் போவான் ஏழை பாமரன்
இதை நன்கறிந்தவன் அரசியல்வாதி

படிப்பறிவற்ற கூட்டம் இருக்கும் வரை
ஓட்டுப் போட்டு ஜெய்க்க வைக்கும்
அரசியல்வாதிகளோ வாழ்வது
திரு வோடு
ஓட்டுப் போட்டவர் கைகளிலோ
திருவோடு