கூடா நட்பு கேடாய் முடியும்
இது யோசிக்க வேண்டிய விஷயம்
இவ்வுலகில் நாம் கேட்க காண பகிர
ஆரோக்கியமான விஷியங்கள்
ஆயிரம் உண்டு நண்பர்களே !
சிலருக்கு கணவன் மனைவி தேர்ந்தெடுக்க
உரிமை இல்லாத போதும்
நல்ல நட்பை தேர்ந்தெடுக்க
தடை சொல்வதில்லை யாரும் ..!
உன் வாழ்நாளில் இவன் என் நட்புக்கு
தகுதியானவன் என்று தோன்றும்
நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல நட்பு கொள்
அதுவே உன் மிக பெரிய சொத்து !!
அப்படி ஒரு நல்ல நட்பு கிடைத்தால்
அதை யாருக்காவும் விட்டு கொடுக்காதே,
மனம் துவண்டு நீ நிற்கும் நேரம்
தூணாக வந்து துணை நிற்பான்..!
இயலாத குழந்தையை தாங்கும் தாய் போல
உன்னை அரவணைத்து
உன்னை உனக்கே அடையாளம் காட்டுவான்
உனக்குள் இருக்கும் திறமையை
வெளிக்கொண்டு வருவான் ..!
உன் வெற்றியை அவன் வெற்றியாய்
கொண்டாடுவான்
உன்னை போட்டியாக கருதமாட்டான்
யாதொரு தீங்கும் உன்னை நெருங்காமல்
பார்த்திருந்து காப்பான்
நீ எட்ட நினைக்கும் தூரத்தை
கரம் கோர்த்து
உன்னை சாதிக்க வைப்பான் ..!
நல்ல நட்பிலே என்றும் சுயநலம் இருக்காது
நட்பு என்றுமே மனதை பலப்படுத்தும்
வாழ்க்கையை மேம்படுத்தும்
எந்த உறவு இல்லாமலும் வாழ்ந்து விடலாம்
ஒரு நல்ல நட்பு உடன் இருந்தால்..!