Author Topic: இன்று ஒரு தகவல்  (Read 12627 times)

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 16
« Reply #15 on: June 11, 2021, 04:58:22 PM »


மூளையா? கிலோ என்ன விலை?



உண்மையில் நட்சத்திரமீன்கள், மீன்களே அல்ல. அவை Asteroidea என்ற குடும்பத்தைச் சார்ந்த கடல்வாழ் உயிரினங்கள். நட்சத்திரம் போன்ற உருவ அமைப்பே இவற்றின் பெயர்க்காரணம். ஐந்து கைகளை உடைய நட்சத்திர மீன்களைத்தான் அதிகம் பார்த்திருப்போம். 20 முதல் 40 கைகள் உடைய மீன்களும் இருக்கின்றன. உப்புத் தண்ணீரில் மட்டுமே காணப்படும் இந்த உயிரினத்திற்கு cardiac stomach மற்றும் pyloric stomach என்று இரண்டு வயிறுகள் இருக்கின்றன. இவற்றின் ஒவ்வொரு கையின் முனையிலும் ஒரு கண் அமைந்துள்ளது. இந்தக் கண்கள் சுற்றிலுமிருக்கும் அசைவுகளையும், இருட்டு/வெளிச்சத்தையும் கண்டுபிடிக்க உதவுகின்றன.

பல்லியின் வால் மாதிரி, நட்சத்திர மீனின் கைகளில் ஒன்று துண்டானால், ஒரே வருடத்தில் அவை மீண்டும் வளர்ந்துவிடும். நட்சத்திர மீன்களுக்கு மூளை கிடையாது. அவற்றின் உடம்பில் இரத்தமும் கிடையாது. இரத்தத்தின் இடத்தை கடல் நீர் நிரப்புகிறது. தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ளும் தன்மை நட்சத்திர மீன்களுக்கு உண்டு. ஒரு பெண் மீனால் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 1.3மில்லியன் முட்டைகளை இடமுடியும். இவற்றின் அதிகபட்ச வாழ்நாள் 35 வருடங்கள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 17
« Reply #16 on: June 11, 2021, 04:59:09 PM »



பேர் சொல்லும் (கிளிப்)பிள்ளை?

கிளிகள் தங்கள் பிள்ளைகளை பெயரிட்டு அழைக்கின்றன. அதுமட்டுமல்ல, வயதில் சிறிய கிளிகள் நம்மைப்போலவே , தங்களின் பெயரை அவற்றுக்குப் பிடித்த மாதிரி மாற்றியும் வைத்துக்கொள்கின்றன. வெனிசுலாவில் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில் 17 கிளிக்கூடுகளில் சிறு மைக்குகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்தனர். இதில் 9 கூடுகளில் இருந்த முட்டைகள் வெவ்வேறு கூடுகளில் மாற்றி வைக்கப்பட்டன. கிளிகளின் பெயர்கள் அவற்றின் பெற்றோர்,மூதாதையரைச் சார்ந்துள்ளதா அல்லது வளர்ப்பைச் சார்ந்துள்ளதா என்று கண்டறியவே இப்படி முட்டைகள் மாற்றி வைக்கப்பட்டன. முடிவில் வளர்ப்பைச் சார்ந்தே பெயர்கள் வைக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள்.


கூட்டமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணம் செய்யும்போது வயதில் சிறிய கிளிகள் தொலைந்துவிடாமல் இருக்கவும், தொலைந்தால் கண்டறியவும், சரியான வேளைக்கு உணவு கொடுக்கவும்இந்தப்பெயர்கள் பெரிய கிளிகளுக்கு உதவுகின்றன. அதென்ன ”சரியான நேரத்திற்கு உணவு கொடுக்க” என்று யோசிக்கின்றீர்களா? மற்ற விலங்குகள்/பறவைகளுடன் ஒப்பிடும்போது கிளிகளே மனிதர்கள் மாதிரி தங்கள் பிள்ளைகளை அதிக நாட்கள் தங்களுடன் சேர்த்து வைத்துக்கொள்கின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல கூட்டைவிட்டுக் கிளம்பிய மூன்று வாரங்களுக்குப் பிறகும் சிறிய கிளிகள் தங்கள் பெற்றோரையே உணவுக்காகச் சார்ந்திருக்கின்றன.

கிளிகள் மட்டுமல்ல டால்ஃபின்களுக்கும் பெயர்கள் உண்டு. ஒரு டால்ஃபின் தொலைந்துவிட்டால், மொத்த டால்ஃபின் குடும்பமும்(pod) சேர்ந்து தொலைந்துபோன டால்ஃபினின் பெயர் சொல்லி அழைக்கின்றன.




தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 18
« Reply #17 on: June 11, 2021, 04:59:52 PM »


தேன்வளைக்கரடி?

“Honeyguide” என்றொரு பறவை. விலங்குகளுக்கும்(சில சமயங்களில் மனிதர்களுக்கும்) தேன்கூடுகள் எங்கிருக்கின்றன என்று அடையாளம் காட்டுவதாலேயே இந்தப்பெயர்.. விலங்குகள் வந்து தேன்கூடுகளை உடைத்து சாப்பிட்டுச் சென்றபின் மீதமிருக்கும் தேனையும், கூடுகளிலிருக்கும் சிறு புழு,பூச்சிகளையும் உணவாக உட்கொள்வதற்காகவே இந்த வழிகாட்டும் வேலை.


தேனை விரும்பி உண்ணும் Honey Badger என்ற கரடி வகைகளுக்கே இவை அதிகம் வழிகாட்டுவதாக நம்பப்படுகிறது.. ஆப்ரிக்காவிலும் இந்தியாவிலும் காணப்படும் தேன்வளைக்கரடி(Honey Badger)களின் டயட்டில் தேனுடன் சேர்த்து பழங்களும், எலி முதலிய சிறு விலங்குகளும் இடம்பிடித்துள்ளன. பாம்புகளைக்கூட கொன்று சாப்பிடும் பழக்கமுடையவை இந்த வகைக்கரடிகள்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 19
« Reply #18 on: June 11, 2021, 05:00:39 PM »


நெருப்புக்கோழிகள்?

நெருப்புக்கோழிகள்/தீக்கோழிகள் தங்கள் தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொள்ளும் அதிலும் குறிப்பாக ஆபத்துக்காலங்களில் என்ற கதையை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? உண்மையில் அது கதைதான். அவை தலைகளை மண்ணுக்குள் புதைத்துக்கொள்வது தங்கள் முட்டைகளைப் பாதுகாக்க. ஆண் நெருப்புக்கோழிகள் ஆறு முதல் எட்டு அடி அகலமும் 2 முதல் 3 அடி ஆழமும் கொண்ட குழிகளைத் தோண்டுகின்றன. இக்குழிகளில் பெண் நெருப்புக்கோழிகள் தங்கள் முட்டைகளை இட, ஆணும் பெண்ணும் மாறி மாறி அடைகாக்கின்றன. எதிரிகள் யாராவது தாக்க வரும்போது முட்டைகள் வெளியே தெரியாமல் இருக்கவே இந்த ஏற்பாடு. முட்டைகளை அடைகாக்கும் தீக்கோழிகள் அவ்வப்போது தங்கள் தலைகளால் அவற்றைத் திருப்பி வைக்கின்றன. இந்தச் சமயத்தில் தூரத்திலிருந்து பார்த்தால், அவை தலையை மண்ணுக்குள் விட்டிருப்பது போலவே தோன்றும்.

எதிரிகள் வரும்போது நெருப்புக்கோழிகளின் முதல் ரியாக்‌ஷன் பயத்தில் ஓடுவது; தங்களைக் காப்பாற்றிகொள்ள மட்டுமல்ல, தங்கள் முட்டைகளைக் காப்பாற்றவும்தான். தப்பித்து ஓடும் கோழியைப் பிடிக்கச்செல்லும் எதிரிகள் முட்டையையும் மறந்து, கோழிகளின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் கையுடன் திரும்பிச் செல்கின்றன.

ஒன்று தெரியுமா? நெருப்புக்கோழிகளின் மூளையின் சைஸ் அவற்றின் கண்களை விடச்சிறியது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 20
« Reply #19 on: June 11, 2021, 05:01:19 PM »



இந்தக்கொசுத்தொல்லை தாங்க முடியல?

பெண் கொசுக்கள் தான் மனிதர்களையும் விலங்குகளையும் கடிக்கும் சரி.. ஆண் கொசுக்கள் ஏன் நமக்கு ஊசி போடுவதில்லை? இதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் பெண் கொசுக்கள் ஏன் நம்மைக் கடிக்கின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம். பெண் கொசுக்கள் தன் இனப்பெருக்கத்திற்குத் தேவையான சத்துகளை நம் ரத்தத்திலிருந்து பெறுகின்றன. ஒவ்வொரு முறை முட்டையிடும் முன்பும் அவற்றிற்கு ரத்தம் தேவைப்படுகிறது. ஆண் கொசுக்களுக்கு இனப்பெருக்கம் செய்யும் வேலை இல்லை..அதனால் அவை நம்மைக் கடிப்பதும் இல்லை. ஒன்று தெரியுமா? பெண் கொசுக்கள் நம்மைக் கடிக்கப் பயன்படுத்தும் ஊசி போன்ற உறுப்பே ஆண் கொசுக்களுக்குக் கிடையாது. தங்களது உணவை சர்க்கரை அதிகமுள்ள தாவரங்களிலிருந்து எடுத்துக்கொள்கின்றன ஆண் கொசுக்கள்.

ஒரு பெண் கொசு, தன் எடையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சும் திறன் பெற்றது. பெண் கொசுவின் வயிற்றிலிருக்கும் சென்சார் ஒன்று, தேவையான அளவு ரத்தம் கிடைத்தவுடன் “இப்போதைக்கு இது போதும்” என்று சிக்னல் தருகிறது. இந்த சென்சார் மட்டும் இல்லையென்றால், பெண் கொசு, தான் வெடித்துச் சிதறும்(!!) வரை ரத்தம் உறிஞ்சுவதை நிறுத்தாது.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் -21
« Reply #20 on: June 11, 2021, 05:02:04 PM »


ஒரு சாக்லெட்டும் மைக்ரோவேவ் ஓவனும்?

மைக்ரோவேவ் ஓவன் உருவானதற்கு முதல் காரணம் சாக்லெட் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்று யோசிக்க வேண்டாம். மைக்ரோவேவ் ஓவனைக் கண்டுபிடித்த பியர்ஸி ஸ்பென்சர்(Percy Spencer) ஒரு சாக்லெட் விரும்பி. இரண்டாம் உலகப்போரின்போது ராடார் கருவிகளுக்கருகில் பணிபுரிந்துகொண்டிருந்த பியர்ஸி, தன் சட்டைப்பையிலிருந்த Mr.Goodbar சாக்லெட் உருகியிருப்பதைப் பார்த்தார். அவ்விடத்திலிருந்த Magnetron ரேடார் கருவிகளிலிருந்து வெளிவந்த மைக்ரோவேவ் கதிர்களே தன் பாக்கெட்டிலிருந்த சாக்லேட் உருகக் காரணம் என்பதைக் கண்டறிந்த அந்தக் கணநேரத்தில் அண்ணாரின் சிந்தனையில் வந்ததே இந்த மைக்ரோவேவ் ஓவன் ஐடியா..

Magnetron கருவியிலிருந்து வரும் மைக்ரோவேவ் கதிர்களைக் கொண்டு உணவுப்பொருட்களை வெகுவிரைவில் சூடாக்க முடியும் என்று சொல்லி பியர்ஸி உருவாக்கித் தந்ததே இன்று நாம் உபயோகப்படுத்திக்கொண்டிருக்கும் மைக்ரோவேவ் ஓவன். முதல் மைக்ரோவேவ் ஓவனுக்கு அவர் வைத்த பெயர் Radarange. பியர்ஸி ஸ்பென்சர், தான் கண்டுபிடித்த மைக்ரோவேவ் ஓவனில் சமைத்த(!!!!!) முதல் உணவு பாப்கார்ன். ஒற்றைச் சாக்லெட் நம் வீட்டில் ஒரு அ(நா)வசிய பொட்டியைக் கொண்டுவந்து வைக்கும் என யாராவது நினைத்திருப்போமா? ம்ம்ம்.....



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 22
« Reply #21 on: June 11, 2021, 05:02:43 PM »


உங்க டூத்பேஸ்ட்ல ஃப்ளோரைடு இருக்கா?

டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா இல்லையா என்ற ஆராய்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும்.. டூத்பேஸ்ட்ல சோடியம் ஃப்ளோரைடு இருப்பது பற்றி பார்க்கலாம். ஃப்ளோரைடு, நம் பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ஃப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப்படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் மட்டுமல்ல, டூத்பேஸ்ட்டும் விஷமே. ப்ரெஷின் தலை பெரிதாக இருக்கிறது என்பதற்காக, ஃப்ளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்பட்ட பற்பசையினை அளவுக்கதிகமாக உபயோகிப்பது  பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம். அதிக அளவுக்கதிகமான ஃப்ளோரைடு, பற்சிதைவு ஏற்படக் காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக்கூடும். ஃப்ளோரைடு கலந்த பற்பசைகளில் “WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately.” என்ற செய்தியைக் கட்டாயமாக அச்சிட வேண்டுமென்று 1997ஆம் ஆண்டு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) உத்தரவிட்டுள்ளது..



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 23
« Reply #22 on: June 11, 2021, 05:03:25 PM »


அழகான ராட்சசியே?

ஐஸ் மேஜிக், சூப்பர் கூல் குளிர்சாதனப்பெட்டிகளெல்லாம் வந்துவிட்ட பிறகு, மண்பானை என்பது மறந்தே போய்விட்டது. அதை மீண்டும் பழக்கத்திற்குக்கொண்டு வந்த பெருமையெல்லாம் 12 மணி நேர பவர்கட்டையே சேரும். மண்பானையில் வைக்கப்படும் நீர் மட்டும் வெயில் காலங்களில் குளிர்ச்சியாக இருப்பதன் காரணமென்ன தெரியுமா? பானைகளில் இருக்கும் சிறு சிறு துளைகள் தான். பானைகளிலிருக்கும் இந்த சிறு துளைகள் வழியாக உள்ளிருக்கும் இருக்கும் நீர் வெளியேறி, வெயில் மிகுதியால் நீராவியாக மாறுகிறது. இந்த நீராவியே, பானைக்குள் இருக்கும் நீரை குளிர்ந்த நீராக மாற்றுகிறது.

குளிர்/மழைக்காலங்களில் வெயில் குறைவாக இருப்பதால், நீர் நீராவியாக மாறுவதில்லை, பானைக்குள் இருக்கும் நீரும் ஜில்லென்று மாறுவதில்லை. வீட்டிலிருக்கும் மண்பானைக்கு ஏன் அடிக்கடி வியர்க்கிறதென்று இப்போது புரிந்திருக்குமே.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 24
« Reply #23 on: June 11, 2021, 05:04:03 PM »


நான் போகிறேன் மேலே மேலே?

குழந்தைகளைக் குஷிப்படுத்த எப்போதும் மேலேயே பறந்துகொண்டிருக்கும் ஹீலியம் பலூன்களில் நிரப்பப்படும் ஹீலியம் 1868ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஹீலியம் பூமியிலிருப்பதாக கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரே, சூரிய ஒளிக்கதிர்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்த Pierre Janssen and Norman Lockyer என்ற இரு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூரியனுக்கருகில் ஹீலியம் நிறைந்திருப்பதைக் கண்டறிந்தனர். சூரியனைக்குறிக்கும் Helios என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்ததே ஹீலியம்.

ஒரு கிராம் எடையுள்ள பொருளை மேலே தூக்கிச்செல்ல ஒரு லிட்டர் ஹீலியம் தேவைப்படும். நீங்கள் 50 கிலோ தாஜ்மஹாலாக இருந்தால், உங்களை மேலே தூக்கிச் செல்ல எத்தனை லிட்டர் ஹீலியம் வாயு தேவைப்படும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். நிறம், மணம் இல்லாத இந்த வாயுவை திடமாகவோ, திரவமாகவோ ஜீரோ டிகிரி வெப்பநிலையில் மாற்ற முடியும்.

விண்வெளி ஆராய்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஹீலியம், முதன் முதலில் மார்கெட்டுக்கு 1928ஆம் ஆண்டு வந்திருக்கிறது. ஹீலியம் நிறப்பப்பட்ட பலூன்களை வீட்டில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்திருந்தால், அவற்றிலிருக்கும் ஹீலியம் மெதுவாக வெளியேறி பலூன் தானாக தரைக்கு வந்துவிடும். ஹீலியத்தின் எடை மிகக்குறைவு. அதனால்தான் எந்த புவியீர்ப்பு சக்தியாலும் ஹீலியம் பலூன்களை கீழே வைத்திருக்க முடிவதில்லை.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 25
« Reply #24 on: June 11, 2021, 05:04:44 PM »


வரலாற்றின் 4 மாபெரும் ராஜாக்கள்?

நண்பர்களுடன் இல்லையென்றாலும், வெட்டியாக இருக்கும்போது பொட்டியிலோ செல்போனிலோ சீட்டு விளையாடும் பழக்கம் இருக்கும் மக்களுக்கான போஸ்ட் இன்று. அடிக்கடி பார்த்திருந்தாலும், நமக்குத் தெரியாத அல்லது நாம் கவனிக்காமல் விட்ட சில சீட்டுக்கட்டு செய்திகள் இதோ..

சீட்டுக்கட்டு ராஜாக்கள் நால்வரும் வரலாற்றிலிருக்கும் நான்கு மாபெரும் ராஜாக்களின் பிம்பங்கள்.

ஸ்பேட் ராஜா – டேவிட்
டைமண்ட் ராஜா – ஜூலியஸ் சீசர்
ஹார்ட்டீன் ராஜா – சார்லஸ் VII
க்ளவர் ராஜா – அலெக்சாண்டர் தி க்ரேட்

அதேபோல் 4 ராணிகளும்..
ஸ்பேட் ராணி – பல்லஸ்(Pallas)
டைமண்ட் ராணி – ரேச்சல்
ஹார்ட்டின் ராணி – ஜூடித் (Judith)
க்ளவர் ராணி – Argine

சீட்டுக்கட்டிலிருக்கும் இந்த 4 செட்களும் பஞ்சபூதங்களில் நான்கை(ஆமா..ஐந்தில்ல..நாலுதான்) குறிக்கின்றன.
ஸ்பேட் – காற்று
டைமண்ட் – பூமி
ஹார்ட்ஸ் – நீர்
க்ளவர் – நெருப்பு

சீட்டுக்கட்டிலிருக்கும் 52 சீட்டுகள் ஒரு வருடத்தின் 52 வாரங்களையும், 4 ஸெட் ஒரு ஆண்டின் நாலு சீசன்களையும், ஒவ்வொரு செட்டிலிருக்கும் 13 கார்டுகளும் ஒவ்வொரு சீசனின் 13 வாரங்களையும் குறிக்கின்றன.

டைமண்ட் ராஜா மட்டும் கையில் கோடாலி வைத்திருக்க, மற்ற ராஜாக்கள் கத்தியுடன் போஸ் தருகிறார்கள். அதே போல், டைமண்ட் ராஜாவுக்கு ஒரே ஒரு கண்தான். கைகளில்லாத ராஜாவும் இவரே. நான்கு ராஜாக்களில், ஸ்பேட் ராஜா மட்டும்தான் வலப்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பார்.

ராணிகளில், ஸ்பெட் ராணி மட்டுமே வலப்பக்கம் பார்த்துக்கொண்டிருப்பார்.நான்கு ரானிகளும் கையில் பூ வைத்திருந்தாலும், ஸ்பேட் ராணி கையில் செங்கோலும் இருக்கும்.



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 26
« Reply #25 on: June 12, 2021, 05:45:24 PM »


பொத்தி வச்ச மல்லிகை மொட்டு?


மற்ற பூக்களெல்லாம் அதிகாலையில் பூக்க, இந்த மல்லிகை மட்டும் இரவில் பூத்து மக்களிடையே ஸ்பெஷல் இடத்தைப் பெற்றுள்ளதன் மாயமென்ன? மற்ற செடிகளைப் போல், மல்லிகைச்செடியும் பூக்களைப் பூக்க வைக்கும் florigen என்ற ஹார்மோனை சூரிய ஒளியின் உதவியால் இலைகளில் உருவாக்குகின்றன. இலைகளிலிருந்து இந்த ஹார்மோன், மொட்டுகளை நோக்கி நகரும் “Nastic Movement”, பகலின் வெளிச்சம் குறைந்து இரவு  துவங்கும் நேரத்தில் தூண்டப்படுகிறது. இதுவே, மல்லிகைப் பூக்கள் இரவில் மலர்வதன் ரகசியம்..

மல்லிகைச்செடிகளின் மகரந்தச் சேர்க்கைக்கு பெரிதும் உதவுவது அந்து(தி?)ப்பூச்சிகள்/விட்டில்பூச்சிகள். இரவு நேரத்தில், இந்தப்பூச்சிகளைக் கவர்ந்திழுக்கவே, மல்லிகைகள் வெள்ளை நிறமும் கொள்ளை மணமும் கொண்டிருக்கின்றன.

ஹவாய், இந்தோனேஷியா, பாகிஸ்தான் மற்றும் பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளின் தேசிய மலர் மல்லிகை.
« Last Edit: June 12, 2021, 05:49:04 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 27
« Reply #26 on: June 13, 2021, 07:07:28 PM »


செவ்வாயில் செவ்வாய்?

மங்கள்யான் மங்களகரமாக செவ்வாய் கிரகத்திற்குச் சென்றுவருவதற்கு முன், நாம் ஒருமுறை சென்றுவரலாம். சூரியக் குடும்பத்திலேயே மிக உயரமான மலையைக் கொண்ட கிரகம் என்ற பெருமை செவ்வாய்க்கு உண்டு. இதிலிருக்கும் Olympus Mons என்ற எரிமலையின் உயரம் 21கிலோ மீட்டர்(ஆமாம்..தூரமல்ல..உயரம்). கிட்டத்தட்ட 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவான மலையாக இருந்தாலும், இந்த எரிமலை இன்னும் உயிருடன் இருப்பதாக வானியல் வல்லுனர்கள் தங்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

அதிகமாக புழுதிப்புயல் தாக்கக்கூடிய கிரகமும் செவ்வாய் தான். மொத்த கிரகமும் புழுதியால் மூடப்படக்கூடிய அளவிற்கு, இங்கு மாதக்கணக்கில் புழுதிப்புயல் வீசும். பார்ப்பதற்கு சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், Red Planet என்று(ம்) செவ்வாய் கிரகத்தை அழைக்கின்றனர். Mars என்பது ரோமன் போர்க்கடவுளின் பெயர்.

செவ்வாய் கிரகத்தின் நிலவுகளின் பெயர்  Phobos(Fear), Deimos (panic). இவற்றில் முதலாவது ஒரு நாளுக்கு இருமுறை மேற்கு திசையில் உதித்து கிழக்கில் மறைகிறது. இரண்டாவது, கிழக்கில் ஒரு முறை உதித்து மேற்கு திசையில் மறைய 2.7 நாட்களை எடுத்துக்கொள்கிறது. இக்கிரகத்தின் சராசரி வெப்பநிலை -81 டிகிரி ஃபாரன்ஹீட். அதிகபட்சமாக(!!) குளிர் காலங்களில்  -205 டிகிரியும், வெயில் காலத்தில் 72 டிகிரி ஃபாரன்ஹீட்டாகவும் இருக்கிறது.

செவ்வாய்க்கு அனுப்பப்படும் விண்கலன்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே வெற்றிபெற்றிருக்கின்றன. இதையெல்லாம் தாண்டி, நாம் எப்போ செவ்வாயில் ப்ளாட் வாங்கி, வீடு கட்டி…. ம்ம்...
« Last Edit: June 13, 2021, 07:13:15 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 28
« Reply #27 on: June 14, 2021, 08:10:34 PM »



 >:(பட்டைக்குறி..Bar code ?

நாம் வாங்கும் எல்லா பொருட்களிலும் நீங்காத இடம்பிடித்துவிட்ட “Bar Code”(தமிழில் ”பட்டைக்குறி”), அமெரிக்காவில் ரயில் பெட்டிகளை அடையாளம் கண்டுபிடிக்க முதன்முதலில் உபயோகப்படுத்தப்பட்டது. ஆனால், சூப்பர் மார்கெட்டுகளில், தினசரி வாங்கும் பொருட்களில் அச்சடிக்கப்பட்ட பிறகுதான், அவை அதிகம் வெளியுலகிற்குத் தெரிய வந்தன.

“Bar Code Scanner” கருவிகொண்டு முதன்முதலில் ஸ்கேன் செய்யப்பட்ட பொருள் Wrigley’s Juicy Fruit gum பாக்கெட். 1974ஆம் ஆண்டு அமெரிக்காவின் ட்ராய் நகரத்திலிருந்த ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க(!!) செயல் நடந்தது.


பலவகையான Bar Code இருந்தாலும், Universal Product Code(UPC) என்ற Bar Code தான் அதிகமாக உபயோகிக்கப்படுகிறது. இந்த வகை Bar Codeஇல் இருக்கும் கருப்புப் பட்டைகளின் அகலமும், பட்டைகளுக்கிடையே இருக்கும் இடைவெளியும் தான் ஸ்கேன் செய்யப்படுகிறது. இவற்றின் உயரத்தைப் பதிவு செய்யவேண்டும் என்பது அவசியமில்லை.

சாத்தான்/பேய்/தீய சத்தி இவற்றைக் குறிக்கும்(???) 666 என்ற எண்கள் Bar Codeஇல் ஒளிந்துகொண்டிருப்பதாக ஒரு கதை உண்டு. இது கதையல்ல நிஜம் என்று சொல்லவும் ஒரு க்ரூப் இருக்கிறது. பாவம்..அப்பாவி கம்ப்யூட்டர்களுக்கு இந்த 666 கதையெல்லாம் தெரியாததாலோ என்னவோ, இன்றுவரை  எந்தப்பிரச்னையும் செய்யாமல் அவையெல்லாம் சமத்தாக வேலை செய்கின்றன.

ஒன்று தெரியுமா? ஒரு UPC Bar Codeஇல்முதல் மூன்று கருப்புப் பட்டைகளும் அதன் கீழ் உள்ள 3 எண்களும், குறிப்பிட்ட அந்தப் பொருள் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது என்பதைக் குறிக்கிறது. இதில் இந்தியாவிற்கான எண் 890.  உடனே, அருகிலிருக்கும் பொருளை எடுத்துப்பார்த்திருப்பீர்களே.. 🙂
« Last Edit: June 14, 2021, 08:13:59 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 29
« Reply #28 on: June 15, 2021, 09:27:28 PM »


ஆனியன் ஐஸ்க்ரீம், கார்லிக் ஐஸ்க்ரீம்?


வெனிசுலா நாட்டிலிருக்கும் Heladeria Coromoto என்ற ஐஸ்கிரீம் கடையில் கிட்டத்தட்ட 1000 வகைகளில் ஐஸ்கிரீம்கள் உள்ளன. 1980ஆம் ஆண்டு Manuel da Silva Oliveira என்பவரால் துவங்கப்பட்ட இக்கடை, அதிக வெரைட்டிகளில் ஐஸ்கிரீம் இருக்கும் கடை என்று கின்னஸ் புத்தகத்திலும்(!) இடம் பிடித்திருக்கிறது. பல ஐஸ்கிரீம் கம்பெனிகளில் வேலை செய்த Oliveria, தன்னால் புது விதங்களில் ஐஸ்கிரீம் தயாரிக்க முடியும் என்று சொல்லி இக்கடையைத் தொடங்கியிருக்கிறார்.


அவர் முதன்முதலில் முயற்சி செய்த புது வெரைட்டி ஐஸ்கிரீம் அவகேடோ(பட்டர் ஃப்ரூட்). அதன் சுவையை சிறப்பானதாக மாற்றும் முயற்சியில் கிட்டத்தட்ட 50கிலோ ஐஸ்கிரீமை செலவு செய்திருக்கிறார் இந்த மனிதர்.

இங்கு(மட்டுமே??) கிடைக்கும் சில வித்தியாசமான ஐஸ்கிரீம் சுவைகள் – வெங்காயம், ஸ்வீட் கார்ன், முட்டை, சீஸ், காளான், மிளகாய், தக்காளி, ஒயின், பூண்டு, நண்டு(நோ ஸ்பெல்லிங் மிஸ்டேக்..நண்டு தான்). ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 60 வகை ஐஸ்கிரீம்கள் விற்கப்படுகின்றன.

Cointreau, cognac or vodka-and-pineapple – இவையெல்லாம் என்ன தெரியுமா? இந்தக்கடையில் இருக்கும் சில ஆல்கஹால் கலந்த ஐஸ்கிரீம் வெரைட்டிகள்.
« Last Edit: June 15, 2021, 09:33:18 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
Re: இன்று ஒரு தகவல் - 30
« Reply #29 on: June 16, 2021, 09:48:43 PM »
 

லம்போகினி கார்கள் பிறந்த கதை?


 
இத்தாலியன் ஏர் ஃபோர்சில் மெக்கானிக்காக இருந்த Ferruccio Lamborghini, தன் உழைப்பால் உயர்ந்து “லம்போகினி” என்ற டிராக்டர் தொழிற்சாலையைத் துவங்கினார். இவர் கார்கள் தயாரிக்கத் துவங்கியதற்குப் பின்னால் ஒரு சுவையான சம்பவம் இருக்கிறது. டிராக்டர் தயாரிக்கும் கம்பெனியாக இருந்த லம்போகினியை கார்கள் தயாரிக்கும் கம்பெரியாக மாற்றிய பெருமை ஃபெராரி காரையும், அதன் கம்பெனி ஓனரையுமே சேரும் என்றால் நம்ப முடிகிறதா?

கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த லம்போகினி, தன் முதல் ஃபெராரி 250GT மாடல் காரை 1958ஆம் ஆண்டு வாங்கினார். ஆனால் ஃபெராரி கார்கள் மிகுந்த சத்தத்துடனும், தினசரி பயணங்களுக்கு கடினமானதாகவும் இருப்பதாகவும் நினைத்தார் லம்போகினி, தன் ஃபெராரி காரின் க்ளர்ச் உடைந்துபோனபோது அந்த க்ளர்ச் தன் கம்பெனி டிராக்டர்களின் க்ளர்ச் போலவே இருப்பதைக்கவனித்தார்.

ஃபெராரி கார் ஓனர் ஃபெராரியிடம் சென்று தன் க்ளர்ச்சுக்கு வேறு நல்ல மாற்று க்ளர்ச் தரவேண்டினார். கடுப்பான ஃபெராரி லம்போகினியைப் பார்த்து “நீ ஒரு டிராக்டர் தயாரிப்பாளர். உனக்கு ஸ்போர்ட்ஸ் கார் பற்றி எதுவும் தெரியாது” என்று முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட, வெளியே வந்த லம்போகினி எடுத்த முடிவுதான் லம்போகினி கார்கள் பிறப்பதற்கான காரணம். தன் தயாரிப்பில் வரும் கார்கள் “வெறும்(!)” ஸ்போர்ட்ஸ் கார்களாக மட்டுமில்லாமல் தினசரி உபயோகத்திற்கும் எந்த பிரச்னையும் தராமல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்.
« Last Edit: June 16, 2021, 09:55:35 PM by எஸ்கே »



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்