Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 03/01/2014 (Jan 3rd)  (Read 863 times)

Offline kanmani

இன்றைய ராசி பலன்கள் - 03/01/2014 (Jan 3rd)



மேஷம்: உணர்ச்சிபூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுபூர்வ மாகப் பேசுவீர்கள், செயல்படு வீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.


ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்& மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.  நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.


மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.


கடகம்: உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யா ணப் பேச்சுவார்த்தை சுமுக மாக முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.


சிம்மம்: சாணக்கியத்தனமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள்.
அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்&பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


துலாம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள். உழைப் பால் உயரும் நாள்.


விருச்சிகம்:  துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவா கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள். 



மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடியும். சிறு சிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக் காதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியா பாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.


கும்பம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள் ளாதீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 


மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.