Author Topic: இன்றைய ராசி பலன்கள் - 11/06/2014 (Jun 11th)  (Read 728 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook


மேஷம் :

காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று முடிப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்
 
 

ரிஷபம் :

பரபரப்புடன் காணப்பட்ட நீங்கள் இன்று குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள்.அவர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.வியாபார ரீதியாக பிரபலங்களைச் சந்திப்பீர்கள். தலைவலி, இடுப்பு வலி நீங்கும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் அனபுத்தொல்லைகள் விலகும்.ஆடம்பரச் செலவுகளை தவிர்ப்பீர்கள்.கோபம் நீங்கும். அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்
 
 

மிதுனம் :

முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.வியாபாரத்தில் இருந்துவந்த சிக்கலுக்கு முடிவு கட்டுவீர்கள். நீண்டநாள் ஆசைகளை பூர்த்தி செய்துக்கொள்வீர்கள்.கணவன் -மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு.தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும்.வாகனப்பழுது நீங்கும்.வெளியூர் பயணங்களால் சந்தோஷமடைவிர்கள். உத்தியோகத்தில் மன உளைச்சல் விலகும். அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்
 
 

கடகம் :

இன்றைய தினம் எதிர்ப்புகள், இழப்புகள், ஏமாற்றங்கள் நீங்கும்.பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும்.கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்பு மரியாதைக் கூடும். சகோதரர்கள் உதவுவார்கள்.வியாபரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள்.பணிகளிலிருந்து வந்த தேக்க நிலை மாறும். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே
 
 

சிம்மம் :

இன்றைய தினம் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும்.பிள்ளைகளை நல்வழிபடுத்து வீர்கள்.அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.வியாபாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.பிரபலங்களின் சந்திப்பு நிகழும்.ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகளைத் தவிர்ப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை
 
 

கன்னி :

புது எண்ணங்கள் தோன்றும்.விரும்பியப்பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.பணவரவு உண்டு. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசுக் காரியங்கள் முழுமையடையும்.வியாபாரத்தில் இருந்து வந்த தேக்க நிலை மாறும்.பால்ய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம் மனநிறைவு கிட்டும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு உண்டு. அதிர்ஷ்ட எண்: 3 அதிர்ஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்
 
 

துலாம் :

காலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். பேச்சித் திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை
 
 

விருச்சிகம் :

காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்
 
 

தனுசு :

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்
 
 

மகரம் :

புது முயற்சிகள் வெற்றியடையும்.கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த பிணக்குகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணங்களைக் கேட்டரிந்து பூர்த்தி செய்வீர்கள்.வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே
 
 

கும்பம் :

இன்றைய தினம் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் மதிக்கப்படுவீர்கள்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.கணவன்- மனைவிக்குள் அன்யோயம் பிறக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.சகோதரவகையில் நன்மை பிறக்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.நட்பு வட்டம் விரியும். அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
 
 

மீனம் :

காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்