Author Topic: ~ கொள்ளு குழம்பு -உடம்பைக் குறைக்க ~  (Read 106 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218397
  • Total likes: 23071
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கொள்ளு குழம்பு -உடம்பைக் குறைக்க



தேவையான பொருட்கள் :

கொள்ளு – 1 1/2 கப்
அன்னாசி பூ – 2
சோம்பு – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1
தக்காளி – 1
தேங்காய் பால் – 1/2 கப்
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை :

* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொள்ளுவை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
horse-gram-kulambu
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அன்னாசி பூ,சோம்பு, மிளகு, வெங்காயம் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்குங்கள். அதோடு தக்காளி சேர்த்து வதக்கவும்.
* உப்பு சேர்த்து, வேக வைத்த கொள்ளுவை கொட்டி 5 நிமிடம் வேக வைக்கவும்.
* அதில் தேங்காய் பால் சேர்க்கவும். வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
* சப்பாத்திக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்