FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: sibi on July 24, 2015, 12:24:45 PM

Title: நாம் உபயோக படுத்தும் டூத் பேஸ்ட் களின் மர்மம்
Post by: sibi on July 24, 2015, 12:24:45 PM
உங்கள் ஹெர்பல் டூத் பேஸ்ட்டின் உறையின்மீது இருக்கும் அரிய, அற்புத மூலிகைகளின் படங்களைத் தாண்டி, அதில் உள்ள ‘இன்கிரிடியன்ட்ஸ்’ பட்டியலைக் கொஞ்சம் பாருங்கள். கண்ணுக்கே தெரியாதபடி மிக மிகச் சிறிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் பற்றிய குறிப்பை ஒருமுறை படித்தால் போதும்... உங்கள் ஹெர்பல் டூத்பேஸ்ட்டின் மர்மம் உங்களுக்கு விளங்கி விடும்!

அந்த பேஸ்ட்டில் என்னென்ன கலக்கப்பட்டிருக்கிறது? சோடியம் லாரைல் சல்பேட், சோடியம் சாக்ரின், ஹைட்ரேட்டட் சிலிகா, சோடியம் ஹைட்ராக்சைடு, ஜிங்க் சல்பேட், சோடியம் ஃபுளூரைடு, ஃபார்மால்டிஹைட், ஹெர்பல் எக்ஸ்ட்ராக்ட்ஸ்... அப்புறம் சில எண் குறியீடுகள். இதில் ‘ஹெர்பல் எக்ஸ்ட்ராக்ட்ஸ்’ என்ற ஒன்றைத் தவிர மற்ற எல்லா பொருட்களும் மூலிகைகளா என்ன?

மேற்கண்ட ரசாயனப் பொருட்கள் என்ன காரணத்திற்காக சேர்க்கப்படுகின்றன தெரியுமா? நாம் பயன்படுத்துகிற பேஸ்ட் பற்களோடு உராய்வை ஏற்படுத்துவதற்காக கால்சியம் கார்பனேட் அல்லது சிலிகா போன்ற ரசாயனப் பொருட்கள்; லேசான இனிப்பைத் தருவதற்காக சாக்ரின் சேர்க்கிறார்கள். அந்தக் காலத்தில் சாதாரண பெட்டிக் கடைகளில் விற்கும் மிட்டாய்களிலும்,குளிர்பானங்களிலும் செயற்கை இனிப்பைத் தரும் சாக்ரின் கலக்கப்பட்டிருந்தால் ‘அது உடல்நலத்தைக் கெடுக்கும்’ என்று தவிர்த்து விடுவார்கள். சர்க்கரையோடு இதை சேர்த்துக் கலந்ததற்காக சில டீக்கடைகளையே புறக்கணித்த மக்கள் உண்டு. அதே சாக்ரின்தான் நம்முடைய பேஸ்ட்டுகளில் கலக்கப்படும் சோடியம் சாக்ரின். நுரையைத் தருவதற்காக ஃபோமிங் ஏஜென்ட்களும், ஃபுளூரைடுகளும் கலக்கப்படுகின்றன.



இவ்வளவு ரசாயனங்களைக் கொண்ட ஒரு பேஸ்ட்டைத்தான் நாம் ஹெர்பல் பேஸ்ட் என்ற சொல்லால் அழைக்கிறோம். சாதாரண பேஸ்ட்டுகளுக்கும், ஹெர்பல் பேஸ்ட்டுகளுக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... 2.5% முதல் 5% அளவு வரை ஏதாவது ஒரு மூலிகைப் பொருளைக் கலப்பது மட்டும்தான் அந்த வேறுபாடு. 95% முதல் 97.5% வரை இரண்டு பேஸ்ட்டுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

நம் நாட்டில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஹெர்பல் பேஸ்ட்டுகளின் எண்ணிக்கை பத்து. இதில் ஃபுளூரைடு கலந்த பேஸ்ட்டுகள் நான்கு. ஃபுளூரைடிற்குப் பதில், அதே விளைவைத் தரும் வேறு ரசாயனப் பொருள் உள்ள பேஸ்ட்டுகள் மூன்று. இந்த இரண்டு வகைகளிலும் அடங்காத, மூலப்பொருட்கள் என்னவென்று குறிப்பிடப்படாத பேஸ்ட்டுகள் மூன்று.

ஹெர்பல் பேஸ்ட்டுகளுக்கும், சாதாரண பேஸ்ட்டுகளுக்கும் இதையெல்லாம் கடந்த ஒரு ஒற்றுமை உண்டு... அந்த ஒற்றுமை, எஸ்.எல்.எஸ். என்று அழைக்கப்படும் சோடியம் லாரைல் சல்பேட்தான். எந்த பேஸ்ட்டாக இருந்தாலும் சரி... அழுக்குநீக்கியாகப் பயன்படும் எஸ்.எல்.எஸ். இல்லாமல் நம் நாட்டில் தயாரிக்கப்படுவதே இல்லை.

நம்ம ஊர் மெக்கானிக் ஷெட்களில் தரையில் படிந்திருக்கும் அழுக்குகளையும், கிரீஸையும் போக்குவதற்காக, இரவில் கடைசியாக ஒரு ரசாயனத்தைப் பயன்படுத்துவார்கள். பளிச்சென தரை சுத்தமாகிவிடும். கார், டூ வீலர் உதிரிப் பாகங்களையும் இதே ரசாயனத்தால் கழுவும்போது விடாது ஒட்டிக்கொண்டிருக்கும் அழுக்குகள் போய்விடும். அந்த அளவிற்குப் பயன்படுத்தப்படும் ரசாயனம், அரிக்கும் தன்மை கொண்ட அழுக்கு நீக்கி. அந்த ரசாயனத்தின் பெயர்தான் எஸ்.எல்.எஸ். எனப்படும் சோடியம் லாரைல் சல்பேட்.

நாம் பயன்படுத்தும் எல்லா பேஸ்ட்டுகளிலும் இந்த அழுக்கு நீக்கி பயன்படுகிறது. நாம் நம்முடைய பற்களை தினமும் இந்த ரசாயனம் கொண்டுதான் கழுவுகிறோம். ஹெர்பல் பேஸ்ட்டுகளிலும் ரசாயனங்களோடு, ரசாயனமாக எஸ்.எல்.எஸ். கலந்திருக்கிறது.உணவுகளைப் பற்றிப் பேசும்போது எதற்கு டூத்பேஸ்ட்டுகளைப் பற்றிப் பேச வேண்டியிருக்கிறது? காரணங்கள் இருக்கின்றன! உணவுகளில் கலந்திருக்கும் ரசாயனங்களைப் பற்றி நாம் தொடர்ந்து பேசலாம். ஆனால் அதைத் தாண்டிய ஒரு ஆபத்து, டூத் பேஸ்ட் விஷயத்தில் இருக்கிறது!

உதாரணமாக ஐஸ்க்ரீம் பற்றி நாம் தெரிந்து கொள்கிறோம் என்றால், அது நம் தினசரி உணவு இல்லை. எப்போதாவது விருப்பப்படும்போதோ, விருந்துகளின்போதோ மட்டுமே சாப்பிடுவோம். ரசாயனங்கள் கலக்கப்பட்டிருந்தாலும் கூட, மிக அரிதாகப் பயன்படுத்தும் பொருட்களால் உடல் அதிகம் பாதிப்படைவதில்லை. ஏனென்றால், உடலின் எதிர்ப்பு சக்தி தேவையற்ற ரசாயனப் பொருட்களை எதிர்த்து வெளியேற்றி விடும்.

ஆனால் சிறிய அளவில் உடலை பாதிக்கும் ரசாயனம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள உணவில் இருந்தால் கூட ஆபத்து. அது தினம் தினம் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் சேர்ந்து, நம் உடலை விஷத்தின் கருவறை ஆக்கிவிடும். அதன் பாதிப்பு வெளிப்படும்போது மிகப்பெரியதாக இருக்கும். இப்படியான அன்றாட உணவுகளைப் போலவே டூத் பேஸ்ட்டில் உள்ள ரசாயனங்களும் உடலுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அன்றாட உணவை விட அதிகப் பயன்பாட்டில் உள்ள ஒரு பொருள்தான் பேஸ்ட்.

சாதாரணமாக தினமும் ஒரு முறையாவது பல் துலக்கும் பழக்கத்தை நாம் கடைப்பிடிக்கிறோம். சில தீவிர பாதுகாப்புணர்வு உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இருமுறை கூட பல் துலக்குகிறார்கள். ஒரு நாளைக்கு இரு முறை என்று தினமும் பல்துலக்கும்போது நம் உடலில் சேரும் ஃபுளூரைடு, எஸ்.எல்.எஸ். போன்ற ரசாயனங்களின் பாதிப்பு மிகப் பெரியது.

பேஸ்ட்டுகளில் இன்னொரு அதிர்ச்சியான கலப்படத்தை 2011ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் இயங்கும், அரசுக்குச் சொந்தமான டெல்லி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பார்மசூட்டிகல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் (DIPSAR) என்ற நிறுவனம் கண்டுபிடித்தது. நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான பேஸ்ட்டுகளில், மூலப்பொருட்கள் பட்டியலில் குறிப்பிடப்படாத பொருள் ஒன்றும் கலந்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அது என்ன தெரியுமா? ‘சிகரெட் பிடித்தால் புற்றுநோய் வரும்’ என்று நாம் அறிந்திருக்கிறோம். அந்த புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று, நிகோடின். இந்த நிகோடின்தான் நம் பேஸ்ட்டுகளில் கலந்திருக்கிறது.

குறிப்பாக ‘மூலிகை தயாரிப்புகள்’ என பெருமிதத்தோடு விற்கப்படும் பேஸ்ட்டுகள் மற்றும் பல்பொடிகளில்தான் நிகோடின் அதிகம் உள்ளது. ஒன்பது சிகரெட்டுகளை புகைப்பதால் உடலுக்குள் செல்லும் நிகோடினைவிட குறிப்பிட்ட ஒரு பிராண்டின் ஹெர்பல் டூத்பேஸ்ட்டை உபயோகித்தால் அதிகம் நிகோடின் நம் உடலுக்குள் செல்கிறது.

டூத் பேஸ்ட் மற்றும் பல்பொடிகளில் நிகோடின் கலப்பது, சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். ஆனால் இதுபற்றி அவர்கள் கவலைப்படவில்லை. டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கூடத்தால் வெளியிடப்பட்ட இந்த பட்டியல் பெரும்பாலான ஊடகங்களில் வெளிவரவில்லை. இணையதளங்களில் தேடினால் எந்தெந்த நிறுவனத்தின் பேஸ்ட்டில் என்ன அளவில் நிகோடின் கலக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம்.

அப்படியானால், எந்த பேஸ்ட்டைப் பயன்படுத்தி பல் துலக்குவது என்று நீங்கள் மறுபடியும் கேட்பீர்களானால், இதே கட்டுரையை மறுபடியும் ஒரு முறை முழுமையாக வாசியுங்கள். எந்த பேஸ்ட்டையுமே பல் துலக்குவதற்கு என்னால் பரிந்துரைக்க முடியாது. காரணம், அதன் ரசாயனக் கலப்பு.அப்படியென்றால் பல் துலக்க என்ன செய்வது?
வேம்பு குச்சி கலையே உபயோக படுத்தி கொள்ள வேண்டும் போல . ::) ::) ::)
Title: Re: நாம் உபயோக படுத்தும் டூத் பேஸ்ட் களின் மர்மம்
Post by: Maran on July 25, 2015, 09:17:21 PM



மிக அழகான இன்றைய சூழலுக்கு ஏற்ற விவாதம் நன்றி நண்பரே...

உங்கள் கருத்துக்களில் நானும் உடன்படுகிறேன் உண்மையில் சொல்லப்போனால்  ‘பற்பசை’ எனப்படும் ‘டூத் பேஸ்ட்’, கிட்டத்தட்ட நூறு இருநுறு ஆண்டுகளுக்குள் புழக்கத்தில் உள்ளது. அதை ஒரு டியூப்பில் அடைத்து விற்கலாம் என்பதை 1892-ல் வாஷிங்டன் ஷெப்பீல்டு என்ற பல் மருத்துவர் கண்டுபிடித்தார். அதற்குமுன் ஆலும், வேலும், அரசமர குச்சி, சுடவைத்த மண் செங்கல் மண்ணுமே பயண்பாட்டில் இருந்ததாக சொல்லப்படுகின்றது. 

சில மரக் குச்சிகளினால் பல் துலக்குபவர்கள், எங்காவது தேடினால் ஒரு நூறு பேராவது இருப்பார்கள் என்றாலும் காலையில் முதல் வேலையாக நாம் பயன்படுத்துவது வேதிப்பொருள்களினால் உருவாக்கப்பட்ட பேஸ்ட்டைதான்.

நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வேதிப்பொருள்களைக் கொண்டே துவங்குகிறோம் என்பதைக் குறித்துக் கொள்வோம். பிறகு நாம் குளிக்க உபயோக படுத்தும் சோப், துணிகளை சுத்தப்படுத்த சோப் என்று வேதிப்பொருள்கள் நம் தினசரி வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

என்ன செய்ய?... சிபி நண்பா...!  இந்த அவசர விஞ்ஞான அறிவியல் உலகில் இப்படித்தான் வாழவேண்டி இருக்கிறது.


இந்த விவாதத்தில் சின்ன டிப்ஸ் கலர் பாத்து டூத் பேஸ்ட் வாங்குங்க ...

நாம வாங்கற டூத் பேஸ்ட்ல , கீழ பட்டையா கலர் கோடு ஒன்னு இருக்கும் . பச்சை , ப்ளூ , சிவப்பு, கருப்பு போன்ற கலர்களில் இருக்கும் ..


அந்த கலர்களின் அர்த்தம் ,

பச்சை - இயற்கை

ப்ளூ - இயற்கை + மருத்துவ குணம்

சிவப்பு - இயற்கை + ரசாயன கலவை

கருப்பு - சுத்தமான ரசாயன கலவை .



Title: Re: நாம் உபயோக படுத்தும் டூத் பேஸ்ட் களின் மர்மம்
Post by: Nick Siva on November 08, 2015, 12:02:00 PM
ithaai padikum pothu ondru mattum purikirathu parkkal thulakkuvathum thavaru , parkkal thulakkathathu kuda thavaru,,, oru manishaan enna dhaan pannuvaaan