FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Global Angel on June 29, 2012, 01:44:02 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 030
Post by: Global Angel on June 29, 2012, 01:44:02 PM
நிழல் படம் எண் : 030




இந்த களத்தின்

இந்த  நிழல் படம் THAMILAN அவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்....


உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/030.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: ஸ்ருதி on July 04, 2012, 06:30:23 AM
பிரிவினை இல்லாமல்
குறையேதும் தெரியாமல்
குறைவில்லா பாசத்தை
நிறைவாய்  தரும் உறவு
அன்னை  மட்டுமே....

மனிதருள் மட்டுமா
தாய்மையும் பாசமும்
வேண்டாம் சந்தேகம்
ஐந்தறிவு  ஜீவனும்
அறியும்
அகிலம்  போற்றும்
அன்னையின் பாசத்தை..

அழகான நாய்குட்டி
அணைத்து அடைகாக்கும் காக்கும்
அன்னை கோழி...
அழகாய் ஒரு காட்சி,,,

தாய் இழந்த துக்கமோ
பாசம் இழந்த பரிதவிப்போ
தாயை தேடியே
அலைந்து திரிந்து
அலுத்து போன
களைப்பில்
துக்கம் மறந்து
துயில் கொள்ளும்
மழலையோ??

சின்ன சிறு  கோழி குஞ்சு
பாசம் பகிர படுவதை
கண் முன்னே கண்டும்
கவலை இல்லாமல்
தற்காலிக பாசத்தை
தாய் இழந்த நாய்குட்டிக்கு
விட்டு தந்த சந்தோசத்தில்
அழகாய் அன்னையின் அருகில்


கல் கொண்டு
அடித்து துரத்தும்
மானிடரே....
பாசத்தை கொண்டாடும் நாம்
ஆறறிவு என நெஞ்சை நிமிர்த்து
அனைத்தும் தெரிந்த ஆணவத்தால்
ஐந்தறிவு உயிர்களில்
அல்லல்  அறியாமல்
அடுத்து துரத்துவது முறையா??

பணத்துக்காகவும் பதவிக்காகவும்
சொந்த, பந்தங்களை
சுயநலமாய் கொல்லும் உலகில்
பிரதிபலன் பாராது
பாசத்தை பகிர்ந்து
கள்ள கபடம் அறியாமல்
பொறாமை தீயில்
வெந்து சாகாமல்
சுயநல சூழ்ச்சிகள்
சூழாமல்
வாயில்லா உயிரினமாய்
பிறந்திருக்கலாமோ.... ;) ;) ;)
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: vimal on July 04, 2012, 10:23:53 AM
அன்னை!
மூன்றெழுத்தில் மூவுலகமும்
போற்றும் கண்முன்
வாழும், நம்மை வாழவைக்கும்
தெய்வம் அவள்!

அன்னையின் அன்பு!
ஈடு இணையற்றது,
எல்லையை கடந்தது,
அமிர்தம் போன்றது,
அவிழ்க முடியாதது,

ஜாதி,மதம்,இனத்தால்
பிரிவினை காணும் இவ்வுலகில்,
தனக்காக என்று சுயநலத்தோடு
சுற்றி  வரும் இவ்வுலகில்,
பிரிவினை,சுயநலம்
இல்லாமல் கிடைப்பது அன்பு ஒன்றே
அன்னையின் அன்பு ஒன்றே!

அன்பிற்கே அன்னையாக
திகழ்ந்த அன்னை தெரேசா ,
இவ்வுலகிற்கும்  அன்னையாக
திகழ்ந்தாள், கரு உண்டானதால?
இல்லையே கருணை உண்டானதால்,

என்ன பந்தமோ ,என்ன பாசமோ,
நான்கு கால்,இரண்டு கால்,
சிறிதும் ஒற்றுமை இல்லை,
ஆனாலும்,அடைகாக்கிறது
அன்னையாக,முட்டையிடாமல் !
வேற்றுமை காணும் மனிதர்களின்
செவிலிலே அறைகிறது இக்கோழி!
இக்கோழியும்  ஒரு தெரேசாதான்!

ஏய் மனிதர்களே!
கடவுள் அனைவருக்கும் சமமாய்
கொடுத்தது அன்பு ஒன்றே
அன்பை அனைவருக்கும் அளித்து
வாழுங்கள் இல்லையேல்
இறந்து போங்களடா!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Global Angel on July 05, 2012, 03:15:57 PM
தாய் என்றால் பாசம்
தாய்மை என்பது வரம்
வரமாக கிடைத்த ஒன்றை
தன் மகவுக்காய் தாரை வார்ப்பது தாய்மை
தன் மகவுக்குமன்றி
தாய்மை தேடும் எவுயிர்க்கும்
தயங்காத பாசத்தை கொடுப்பது தாய்மை ...
தாய்மை தன் பாசத்தை
பகிர்ந்தளிப்பது புதுமை அன்று ...


ஐந்து பிள்ளை பெற்றாலும்
அனைத்திலும் சமபங்கு கொடுப்பவள் தாய்
ஐந்துடன் கூட பிறந்தாலும்
அன்னை தனக்கென்று நினைப்பது மகவு ...
தாய் தாய்மையை பகிர்ந்தளிப்பது அதிசயமல்ல
தன் அன்னையை பகிர்ந்தளித்து விட்டு
அதிசமாய் அரவணைப்பாய்
அன்னையின் ஓரமாய்
அகம் கான முகம் நோக்கி
அண்ணாந்து பார்க்கும்
அந்த கோழி குஞ்சின் மனம்
எத்துனை பேர்க்கு வரும் ..`?


சுயநலம் மிகுந்த தேசத்தில்
தன் நலத்திலும் பங்கு கொள்ளும்
ஐந்தறிவு ஜீவன் ...
அதை பார்த்தும் திருந்துமா
ஆறறிவு ஜீவன் ...?

தன் இனமன்றி பிற இனத்துக்கும்
தாய்மையை பங்கு கொடுக்கும்
கோழி குஞ்சும் நம் தேசத்தில்தான் ...
தன் நலத்துக்காய்
பிறரை எய்த்து பிழைக்கும்
மனித உருவில் தன் நலமிகளும்
நம் தேசத்தில்தான் ...

மனிதர் என்று சொல்லி
நம் மகிமையை போற்றுவதில் பயனில்லை
விளங்கினதிடம் நம் கற்று கொள்ளவேண்டும்
அதிலும் ஐயமில்லை ...
மனிதா நீ தயாரா ?
மாண்டு கொண்டிருக்கும் மனிதத்தை மீட்க ..?
 
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Dong லீ on July 05, 2012, 06:30:41 PM
ஓவியத்தை காணும் போதே
கண்களில் குளிர்ச்சி மைனஸ் டிகிரியில்

முட்டையை அடைகாக்கும்
இந்த அன்னை இக்கணம்
வேறு உயிரின குழந்தையின் அடைக்கலமாய்..

மனிதனை விட
ஓர் அறிவு குறைவுதான்
இருப்பினும் அன்பை கொட்டுகிறது
அருவியாய்..


இந்த உயிரினங்களின் நெஞ்சில் குடியிருக்கும்  அன்பு
பல மனிதர்களால் கை விடப்பட்டு நிற்கிறது
அனாதையாய் ..

ஆசை தான் ..
மனிதனும் இப்படி இருந்து விட மாட்டானா


இது போன்ற அன்னையின் அன்பை பெரும்
மனிதனோ அன்பை மறந்து
அடைகாப்பது
பணத்தை மட்டுமே ..


பணம் பத்தும் செய்யுமாம்
அட மூடர்களே
அன்பும் ஆயிரம் செய்யும்

அன்பிற்கு இனம் இல்லை
மொழி தேவை இல்லை
என்று மொழிகிறது
இந்த வாயில்லா ஜீவன்கள்

அதை உணர நம் நெஞ்சிலும்
குடிகொள்ள வேண்டும் மெய்யான அன்பு

கடவுள் மென்பொருள் பொறியாளராக
இருந்திருந்திருந்தாலாவது
அன்பை தவறில்லாமல்
மனிதனுக்குள் ப்ரோக்ராம்
செய்திருப்பாரோ என்னவோ

இல்லை ..அவன் மென்பொருள் பொறியாளன் தான்
இந்த ஓவியம் கூட
மனிதன் மனதில் அன்பை பதிக்கும்
மென்பொருள் தான் ...

என் மனதில்
பதிய துவங்கி விட்டது ..
இன்னும் மனதில் பதிவு பெறாத
மக்கு மனிதர்களே
உயிரினங்களை நேசிக்க
இந்த ஓவியம் தூண்டவில்லை எனில்
உங்களிடம் இந்த கோழியின் சார்பாக
நான் ஒன்று கேட்கிறேன்


" நீங்க எப்போதும் இப்படிதானா
இல்ல
இப்படித்தான் எப்போதுமேவா"


Quote
1000 தெரேசா வந்தாலும் முடியாது
Title: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: Thavi on July 05, 2012, 09:58:31 PM
பறவை இனத்துக்கு
இருக்கும் பாசம் கூட
ஆறறிவு கொண்ட
மனித குலத்திற்கு
இல்லையோ!!

பாசத்தை இந்த பறவை
பார்த்து கற்றுகொள் !
தன் பிள்ளைக்கு கிடைத்த
பாசம் வேற இனத்துக்கும்
காட்டுகிறது

ஆயிரம் உறவுக்குள்
ஓர் அர்த்தமுள்ள
உறவு அன்னை
அம்மா இல்லாமல்
பாசம் இல்லை !!

தாய் பாசம் இல்லாமல்
உலகமே இல்லை
இந்த ஐந்து அறிவு
பறவைக்கு உள்ள
பாசம் மனிதனுக்கு இல்லை !

விழித்திடு மனிதா
ஐந்து அறிவு உள்ள பறவை
அடுத்த உயிர் வாழும்
ஜீவனுக்கு பாசத்தை
கட்டுகிறது !

மனிதா சிந்தித்து பார்
நாம் என்ன செய்கிறோம்
என்று வாய் இல்லாத
ஜீவனை இறையாய்
உட்கொள்கிறோம் !

தான் பிள்ளையை
காக வைத்து
வேறு ஒரு இனத்திருக்கு
பாசத்தையும் ,தன் உணவையும்
பகிர்ந்து கொள்கிறது !!

சிந்தியுங்கள் பார்
இதை பார்த்தாவது
திருந்த கற்றுகொள்
தன் பிள்ளை தன்குடும்பம்
இல்லாமல் !!

உன்னை சார்ந்தவருக்கும்
உயிர் உள்ள பிரவிகள்கும்
உன்னால் முடிந்த உதவியையும்
பாசத்தையும் செய்ய இந்த
பறவை பார்த்து கற்று கொள் !