Recent Posts

Pages: 1 [2] 3 4 ... 10
11
ஆன்மீகம் - Spiritual / Re: Bible Verse of the Day
« Last post by MysteRy on May 13, 2024, 05:15:09 PM »
12
மைதானம் ஒளிரும் வெளிச்சம், பந்து வீசும் பரபரப்பின் துளிச்சம், பேட்டின் பாய்ச்சலில் பறக்கும் சந்தோஷம், விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரரின் கைத்தலம்.
பந்து பறக்க, பேட் பாட, வீரர்கள் விளையாடும் நாடகம்,,
சீருடையில் சிறக்கும் சிங்கங்கள், களத்தில் கலைஞர்கள், விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரம், பேட்டின் பாய்ச்சலில் பெருமை.
காற்றில் கலந்த கையோடு கால்கள், ஓட்டம் பிடிக்கும் உற்சாகம், சிக்ஸர் அடிக்கும் நிமிர்ச்சி, விக்கெட் காப்பாற்றும் காவலன்,

அணியின் ஆன்மாவில் அமைதியின் அழகு, வெற்றியின் விதையாய், கிரிக்கெட் எனும் கீதம், காலம் காலம் வாழ்க.

பவுண்டரிகள் தாண்டி பறக்கும் ஆசைகள், பந்தின் பறப்பில் கனவுகள், மிட் விக்கெட் மீது மின்னும் நம்பிக்கை, கையில் கேட்ச் பிடிக்கும் மகிழ்ச்சி,
பவுலரின் பந்துவீச்சில் பந்து பதுங்கும் தந்திரம்,
பேட்ஸ்மேனின் திறமையில் சாதனை,
கூட்டணியின் கூட்டுச் செயலில் காணும் வெற்றி,
அணியின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கும் அசுரன்.
மைதானத்தின் மன்னனாய் மிளிரும் கேப்டன், அவனது திட்டமிட்ட வியூகத்தில் தெரியும் ஞானம்,

ரசிகர்களின் உள்ளம் கவரும் உற்சாகம், கைகள் தட்டும் கோலாகலம், வீரர்களின் வியர்வையில் விதைக்கப்படும் புகழ்,
காலங்கள் கடந்தும் காணாத கலைஞர்கள், 
அணியின் அன்பின் அடையாளம், அவர்களின் அசைவில் அழகு, வீரர்களின் வெற்றியின் வெளிச்சம்.

மைதானத்தின் மகுடம் சூடும் மகாராஜாக்கள்,
விளையாட்டின் விதிகளை வெல்லும் வித்தைக்காரர்கள்,
விளையாட்டின் விதிகளை விருத்தியாக்கும் வித்தகர்கள், போட்டியின் பொழுதுகளில் புதிய பக்கங்கள் சேர்க்கும் புத்திசாலிகள்,
விளையாட்டின் வெளிச்சத்தில் விளங்கும் வீரம்,
கிரிக்கெட் எனும் காதலில் கரையும் நாடுகள்,

இதயங்களை தொடும் இந்த விளையாட்டின் காவியம், வீரர்களின் வியர்வையில் விதைக்கப்படும் புகழ், காலம் காலமாக காத்திருக்கும் கதைகளில், கிரிக்கெட் எனும் காதல் காவியம் கலந்து வாழ்க!

இந்த ஓவியம் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுகளையும், அதில் உள்ள வீரம், உற்சாகம், திறமை, மற்றும் கலையின் அழகையும் பிரதிபலிக்கிறது.
13
மைதானங்களே சொர்க்க பூமி..
அடி ,அடி என்ற சொல்லே தாரக மந்திரம்..
சிக்ஸர்களும் பவுண்டுரிகளுமே
லாட்டரி பரிசுகள்..
நோபால், ஒயில்டு என்ற வார்த்தைகளே ரட்சகர்கள்..

மகிழ்ச்சியில் தள்ளாடவைப்பதும்,
துக்கத்தில் தொண்டை அடைப்பதும் அவுட் என்ற ஒற்றை வார்த்தையால்..
மழையை ஏசுதலும், மழையைப் போற்றுதலும் டிரா என்ற வார்த்தையால் இங்கு தான்  அரங்கேறும்..

சென்னை 28 ஆக இருந்தால் என்ன?
மதுரை 18 ஆக இருந்தால் என்ன?
லயோலாவாக இருந்தால் என்ன?
மெஜிராவாக இருந்தால் என்ன?
எல்லா இடங்ககளையும் தனக்குள் வளைத்து போட்டுக் கொண்ட ஆக்ரமிப்பு விளையாட்டு..

விளையாடுபவர் மட்டுமல்ல
பார்ப்பவரையும் வெறி கொள்ள வைக்கும் மாய விளையாட்டு..
சிறுவர் முதல் பெரியவர் வரை மோகம் கொண்ட விளையாட்டு..

பதின்ம வயதுகளில் இது ஒரு லட்சிய விளையாட்டு...
நரை விழுந்த காலத்தில் இது ஒரு கனவு விளையாட்டு...
பொழுது போக்காய் நுழைந்து
பொழுதை கரைக்கும் தந்திர விளையாட்டு..
ஆண், பெண் பாகுபாடு அற்று தன் பின்னால் அலைய வைக்கும் மந்திர விளையாட்டு.

இங்கு பறப்பதும், அடி வாங்குவதும் பந்துகள் தான்..
ஆனால் வலியும், மகிழ்ச்சியும் பார்ப்பவர் மனங்களில்..
இங்கு மட்டைகளும், பந்துகளும் இணைந்தே இருக்கும் ஆனால் ஒன்றுக்கொன்று எதிரிகளாய்...

கில்லி தாயின் மடியில் பிறந்த மகவு இது..
எல்லா நாடுகளும், எல்லா மக்களும் ஏற்றுக் கொண்ட பிள்ளை இது..

இதில் சிக்கி மீள முடியாமல் தவிப்பதும், மீள விரும்பாமல் தவிப்பதும் இளைஞர்கள் மட்டுமல்ல.. அவர்களின் அப்பாக்களும்,
அப்பாக்களின் அப்பாக்களும்..
14
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 13, 2024, 08:26:33 AM »
15
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 342

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

16
https://media.tenor.com/QkSIVhUyA_4AAAAM/shibacapital-mother-day.gif இரு ஐந்து திங்கள் என்னை கருவிலே சுமந்தாய் 42ஆண்டுகளாய் மடியில் தவழ்ந்தேன் மீண்டும் உன் கருவறைக்குள் இடம் வேண்டும்
17
நான் பார்த்த முதல் முகம் நீ
நான் கேட்ட முதல் குரல் நீ
நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

நான் வாழ்ந்த முதல் அறை நீ
நான் வரைந்த முதல் படம் நீ
நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே







18
19
Birthday Wishes,Special & Festival Wishes - LATEST / Happy MOTHERS Day 2024
« Last post by Forum on May 12, 2024, 10:16:59 AM »
20
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on May 12, 2024, 08:44:25 AM »
Pages: 1 [2] 3 4 ... 10