FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on March 08, 2014, 10:58:50 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 073
Post by: MysteRy on March 08, 2014, 10:58:50 PM
நிழல் படம் எண் : 073
இந்த களத்தின்இந்த  நிழல் படம் Maranஅவர்களால்  வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM%20UYIRAAGIRATHU/073.jpg)
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: thamilan on March 11, 2014, 01:51:51 PM
சிறகில்லா பட்டம் பூச்சிகள்
குழந்தைகள்
பூமியில் பூத்த அழகிய மலர்கள்
குழந்தைகள்
பூமியில் மின்னும் விண்மீன்கள்
குழந்தைகள்

குழந்தையும் தெய்வமும்
ஒன்றென்பர்
இல்லையென்பேன் நான்
குழந்தைகள் தெய்வத்தை போல
மனிதனை சோதிப்பதில்லை

ஓம் என்ற ஓங்கார ஒலி அதுவே
உலகின் ஆதாரம் அந்த
ஓம் என்ற ஒலியை
உள்ளடக்கிய உன்னதமான சொல் அம்மா
அம்மா எனும் அற்புத பாக்கியத்தை
பெண்ணுக்கு வழங்குவது குழந்தை

குழந்தையின் அழுகையை
மிட்டாய் கொடுத்து நிறுத்திவிடுகிறோம்
குழந்தையின் சிரிப்பை
காலம் அதுவாகவே நிறுத்திவிடுகிறது

படிப்பால் தலைநிமிர்ந்த
குழந்தைகளை விட
புத்தகப்பையை சுமந்து கூன் விழுந்த
குழந்தைகளே அதிகம்

விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது
குழந்தைகள் உலகம்
அவர்களை விமர்சனம் செய்யும் தகுதி
நம் ஒருவருக்கும் இல்லை
என்பதே உண்மை
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: PiNkY on March 12, 2014, 01:33:16 AM
அழகான மழலை சிரிப்பில் ..
இயற்கை கூட தன் அழகை இழக்கிறது ..!

பசும் பச்சை நிற புல்வெளி கூட ..
மழலைக் குழந்தையின்
முகம் பார்த்து பொறமை கொள்ளும்..

புல்லின் மேல் பனித்துளி கூட..
மழலையின் சிரிப்பில் தன்னை கரைக்கும்..

களங்கமற்ற குழந்தை தனம் மீண்டும் எனக்கு
திரும்ப வேண்டுகிறேன்..
சிறுவயதில்  ஒவொரு நாளும்
நான் ரசித்து பார்த்து சிறு விளங்கினன்களோடு
விளையாடிக் கழித்த புல்வெளிகளில்..!!

இறைவா இறைவா .!
எனக்கு நீ வரம் தருவாயானால்.!!
நூறாண்டு கால வாழ்வு வேண்டாம்..!!
என் மழலையின் இனிய நாட்களை மீண்டும் தர வேண்டுகிறேன்..!!
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: bharathan on March 13, 2014, 10:23:03 AM
இயற்கையை ரசிக்கிறாள் பெண்குட்டி
பெண்குட்டியை ரசிக்கிறான் முயல் குட்டி
பெண்குட்டியோ முயல் குட்டியோ 
இரண்டும் இயற்கை அன்னையின் தங்க குட்டிகள் !

Ps: Mokkaiyaga irunthal mannithu vidungal
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: NasRiYa on March 20, 2014, 08:13:24 PM
மலர்ந்தது ஒருநாள்...
ஒவ்வொரு நாளும் மலர்ந்ததுபோல்
எத்தனையோ புன்னகை நிறைந்த
மலர்களாய் மகிழும் உன்  சிரிப்பு......
உன் அழகின் மென்மை விரல்கள் பற்ற
ஆடி தவழும் உன் கைகளை பற்ற
என்ன வரம் செய்தேனோ...

அழகாய் நடமாடும் தங்க சிலையே,
கடலில் கிடைத்த முத்தே,
மண்ணில் கிடைத்த வைரமே,
வானில் தோன்றிய வானவில்லே,
சில்லென்ற மழையே என் இல்லத்தின்
குட்டி தேவதை நீ....


உன்னை பார்க்கும் போதெல்லாம்....
உன் விரலிடுக்கில் ஒளிந்து கொள்ள
என் கரம் துடிக்குதடி சின்னப் பெண்ணே!
இயற்கையின் தழுவலில் ஒரு சுகம்
பூக்களின் அழகினில் தனிவிதம்
முயல் குரலின்  இன்னிசை ஒரு விதம்
இயற்கையின் பரிசை உணர்ந்து
சிரித்திடு கண்ணே ....!!!
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: MaJeStY on March 30, 2014, 09:32:17 PM
பச்சை பசேல் என்ற புற்களின் நடுவே
நாணத்துடன் பூத்திருக்கும்
புத்தம் புதிய பிஞ்சு ரோசா அவள்


பசிக்காக புற்களை உண்பதா அல்லது
நாணத்துடன் அமர்ந்திருக்கும் இந்த
புத்தம் புது ரோசாவை ரசிப்பதா
என்ற குழப்பத்தில் முயல்!!
Title: Re: Re: ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
Post by: காமினி on April 09, 2014, 06:07:53 PM
குழந்தையும் முயலும்

அணு சக்தி என்ற பெயரில் ,
அணு பிளந்து ஆள் கடல் புகுத்தி
எங்கள் மரபணு பிளந்தவன் மனிதன்

மதம் பிடித்து ஆடும் மானிட யானைகள்
வதம் செய்வதோ ஒன்றும் அறிய பாமரனை

எழதுகோல் ஏந்தும் கைகளில் எந்திர துப்பாக்கி
ஏந்தி எந்திரமாய் மாறிப்போன ஏன் மாணவ சமுதாயம்

காடுகள் எரித்து நாடுகள் நங்கள் செய்யவில்லை
மாறாக நரகங்கள் செய்துவிட்டோம்
அதனால்
வீட்டை எழந்த நீஉம் நாட்டை துறந்த நானும்
சேர்ந்து புதியதோர் உலகு செய்வோம் கேட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்