FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on September 24, 2017, 10:48:10 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: Forum on September 24, 2017, 10:48:10 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 160
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/160.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: JeGaTisH on September 24, 2017, 06:45:31 PM
கண்ணும் கருத்துமாய் சேயை வளர்ப்பவள் தாய்
அறிவூட்டி நல்ல மாணவனாய்  செதுக்கி எடுப்பவர் குரு .

கல்வி என்னும் கனியை பறிக்க
தேவை ஆசான் என்னும் ஏணி.

என் கரம் பிடித்து  எழுத்தூட்டிய ஆசானுக்கு
அவர் கரம் பிடித்து உதவிட வரமொன்று  கிடைத்திடுமோ ...

வாழ்க்கையை புரிய வைக்கும்  கடவுள்கள் பல இருப்பது உண்டு.
கண்ணுக்கு தெரிந்து வாழ்க்கையை புரிய வைக்கும் கடவுள் குரு ஒருவனே .

ஒரு மாணவன் ஆசான் ஆகா கனவுகண்டால்..
அக் கனவு உருவாக்க காரணமாக இருப்பவனும் ஒரு ஆசானே ஆவார்.

உலகம் போற்றும் ஒரு தலைவன் உண்டாக
உண்டுகோலாக இருப்பவரும் ஒரு குருவே ஆவார்

காசு பணம் ஈடு இல்ல ....குரு
அவர் சொல்லி தந்த கல்விக்கு ஈடா

ஆசான் என்பவன் அகிலத்தில் ஓர் அங்கமாய் வாழ்கின்றார்
குருவே ...இக் கவி ...உன்பாதம் சரணம்...


(முதன் முறையாக எழுது கோல் எடுத்து. எழுத வைத்த அணைத்து உள்ளங்களுக்கு நன்றி.
பிழை இருப்பின் திருத்தவும்
கழை கவியை போற்றவும்
கவிதைகள் தொடரும் .....)

Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: KaBaLi on September 24, 2017, 07:18:21 PM

அம்மா கையை விட்டு
உன் கையை பிடித்து
உள்ளே கூட்டிட்டு போனாய்
சிலேட்டு பலகையில்
விறல் பிடித்து  எழுத வைத்தாய்  :)

கரும்பலகையையும், சுண்ணாம்பையும் வைத்து
உலகத்தின் வரலாற்றையும்,
மாணவர்களின் வருங்காலத்தையும்
ஒருங்கே எழுதும்
உலகத்தின் வடிவமைப்பாளர்கள் அவர்கள் :-*

 தோளில் உட்கார வைத்து
அணைத்து ஊரையும் காட்டினார் தந்தை :-*
நான்கே சுவற்றுக்குள் உட்காரவைத்து
உலகம் காட்டினார் ஆசிரியர்   :-*
 
முதல் பீரியடு பிளேடுடா தூக்கம் வரும்… ‘கட்’ அடிச்சுருவோமா…?
என்று வகுப்புக்கு மட்டம் போடும்  காலம் அக்காலம் !  :)

பெண் ஆசிரியரை சைட் அடித்தோம்
வகுப்பறையில் அணைத்து சாப்பாடு பெட்டியை திருடி சாப்பிட்டோம்

மிஸ் -இன் தலையில் என்னால் வீசப்பட்ட ராக்கெட்டுக்கள்
பின்பு என் தலையில் பிரம்பு ராக்கெட்டுகளாக வந்து விழுந்தன

எத்துணை பொய்கள் எத்துணை மன்னிப்பு கடிதம்
எத்துணை அடி உங்க அடியா எங்க அடியா !
வகுப்பறையே சிரிக்க வைத்தார் !

அடிமக்காக இருந்தேன்  :(
அறிவாளியாக மாற்றினார் 

அடி பின்னும் பிரம்பில்
அறிவு பின்னும் வித்தை,
அவர்களுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது!

எழுத படிக்க தெரியாத என்னை  :'(
எழுத்துபோட்டியிலும் மற்றும் பட்டப்படிப்பில்  பரிசும் வாங்க வைத்தாய்
மதிப்பேனோ குறைவு தான்; உன்னால் நான் பெற்ற மதிப்பை
அளவிடுகையில் !

ஒன்னுக்கு வருது "மிஸ்",
என சொல்பவர்களில்,
எவனுக்கு உண்மையிலேயே
ஒன்னுக்கு வருகிறது
என அவர்களுக்கு மட்டுமே தெரியும்!  :-*

30க்கும்  34க்கும் இடையே
முக்கி, முனகி, முட்டியவனையெல்லாம்,
அவர்கள் இரக்கப்பட்டு
35ஐ முட்ட வைத்ததால்,
விண்ணை முட்டும்
பெரும்பணியில் இருக்கிறான்!

சாக்ரடீசில் இருந்து,
நியூட்டன் வரை
ஆசிரியர்களாய் இருந்ததாலேயே,
அறிவியல் உலகமும்,
அறிவு உலகமும்
ஓயாமல்  சுற்றிக்கொண்டிருக்கிறது!
இன்னும் சுற்றும்!

பள்ளிக்கூடம் என்றால் மாணவர்கள்
மாணவர்கள் என்றால் ஆசிரியர்கள் ! :-* :-*
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: VipurThi on September 24, 2017, 11:13:18 PM
அழகிய நாட்கள் பள்ளி மாணவியாய்
வலம் வந்தது இதோ என் கண் முன்னே  ;)

என் முதலாம் வகுப்பாசிரியர்
கனிவாய் கண்ணசைத்து சொல்லித்தந்த
வண்ணத்துப்பூச்சியின் வண்ணமயமான
பாடல்களை உச்சரித்த நாட்கள்

அனுதினமும் பாடவேளையில் தோழியுடன்
அரட்டையடித்ததற்காய் பிரித்து
வைத்த எங்களின் ஏக்க  பார்வையை
கண்டுகொண்டு மீண்டும் சேர்த்து
வைத்த வகுப்பாசிரியர்

புலமை பரிசில் பரிட்சைக்காய்
எங்களை புரட்டியெடுத்து
வெற்றிகள் பல பெறவைத்து
எங்கள் வெற்றிக்களிப்பில்
உள்ளம் குளிர்ந்த பாடசாலை சமூகம்

சிற்றுண்டிசாலையில் நடத்திய
வட்ட மேசை மாநாடுகள்
பரப்பி வைத்த உணவு பெட்டிகள்
பகிர்ந்து உண்ட பல கைகள்

இரசாயனவியல் கூடத்தில் செய்த
விஷம சேட்டைகள்
பாகுபடுத்தலுக்காய் பாசிக்குடா
சென்ற கால் நடை பயணங்கள்

அடிமேல் அடிவைத்து வந்த
தடைகளை தகர்த்து
வாழ்க்கையை நிர்ணயிக்கும்
உயர்தர பரிட்சைக்காய் உயிர்
கொடுத்து போராடிய தருணங்கள்

கால் வைத்து வெளியே சென்றாலும்
இன்றும் கல்லூரி நாளுக்காய்
ஒன்றும் சேரும் தோழி கூட்டம்
எத்துணை அழகிய தருணங்கள்


நல் வழி காட்டிய கல்லூரி சமூகம்
நல் வழிபடுத்திய நல்லாசான்கள்
என்றுமே மறக்க முடியா வாழ்வின்
மறையா ஒளிச்சித்திரங்கள்


                              **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: JeSiNa on September 25, 2017, 03:30:43 PM
பெற்றோர்களின் உதவியால்
குருவின் வழிகாட்டியால்
நம் முயற்சியால் அறிவை வளர்க்க
கல்வி என்ற வாகனத்தில் ஏறினேன்

அரைமணிநேர படிப்பு
அதிலும் அரட்டை சிரிப்பு
ஆசிரியர் வந்தால் நடிப்பு
பரீட்சை முடிவுகள் என்றல் துடிப்பு

பத்துவருடங்கள் பட்டம் பூச்சி போல்
சுதந்திரமாய் நண்பர்களுடன் சுற்றி
திரிந்த என் வாழ்க்கையில்
மாற்றத்தை ஏற்படுத்த வந்த ஒரு ஆசான்..

பிரம்பு கொண்டு துன்புறுத்தவும் தெரியாது
கோபத்தால் அடிமைப்படுத்தவும் தெரியாது
ஆலோசனை என்ற பெயரில்
கொல்லாமல் கொல்லவும் தெரியாது

அன்பு காட்டுவதில் அம்மா
அமைதியின் சிகரம்
என் மனதில் இடம் பிடித்த
மகாலட்சுமி ஆசிரியை.

என் ஆறாம் அறிவுக்கு கல்வி புகட்டி
கல்வியின் நோக்கம் தகவலை திணிப்பது அல்ல
கல்வியை காதலித்து அறிவின் தாகத்தை
தூண்டுவது ஆகும்
என உணரும் விதமாய்
வாழைப்பழத்தை உரித்து கொடுக்காமல்
ஊட்டி விட்டு அதை விழுங்குவதற்கு
உந்துகோலாக முயற்சி செய்ய
கற்று கொடுத்தவர்..

என் பள்ளி படிப்பின் கடைசி வருடத்தில்
கல்வியை முழுதாக கற்றுக்கொண்டு
நாளைய  சமுதாயத்திற்கு
நல்ல மாணவியாக
பள்ளி கல்வி என்ற வாகனத்திலிருந்து
இறங்கியதை நினைவு கூர்கிறேன்..

                               
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: VidhYa on September 25, 2017, 09:18:30 PM
                                                 என் அன்பான ஆசிரியர்களுக்கு 

அன்புக்கலந்த வணக்கம் 

ஆசிரியர்களின்
ஆசிர்வாதம் இல்லாவிட்டால்
நான் கவிதை எழுந்திருக்க மாட்டேன்
பலசரக்கு கடையில் ...
கணக்குதான் எழுதிக்கொண்டிருப்பேன்

அவர்கள் இல்லையென்றால்
நான் ரசிக்கவும் ஆகியிருக்க மாட்டேன்
யாரும் ரசிக்கும்படியும் ஆகியிருக்க மாட்டேன்

அனுபவம்தான் கடுமையான ஆசிரியர்
புரட்சிக்கு பின்புதான் பாடம் கற்பிக்கிறது 

நமக்கு கற்றுகொடுப்பவரெல்லாம் ஆசிரியரல்ல
நாம் எவரிடம் கற்றுக்கொள்கிறமோ வாரிய சிறந்த ஆசிரியர்

எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள்  ஆனால்
நோக்கம் இலட்சியம் ஒன்றுதானே
என் மாணவன் முன்னேற வேண்டுமென்று

நான் வாழ நான் முன்னேற எனக்காக உழைத்தவர்கள்
நான் என்று இன்பம் காண அன்று
துன்பம் பெற்றவர்கள்


நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி  முத்து குளித்தவர்கள்
ஏன் இளம் வயதில் கண்டா
நடமாடும் தெய்வங்கள் என் ஆசிரியர்களே

நம் இரெண்டாம் பெற்றோர்கள் நம் ஆசிரியர்களே ஆவர்


                           அன்புடன் காதல் கவிக்குட்டி வித்யா
[/size]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: joker on September 26, 2017, 11:25:09 AM
ஐந்து  வயதில் என்னை வளைத்து
அழியாத கல்வியினை புகட்டிய
என் முதல் ஆசிரியை இன்றும்
மனதில் நிற்கிறார்

விளையாட்டில் மோகம் கொண்டு
சுற்றி திரிந்த வயதில் அழுது அடம்பிடித்தும்
சேர்த்து விட்டனர் பள்ளியில்

அம்மையும் அப்பனும் தான் என்னை அறிவர்
அன்பு தருவார்கள் என எண்ணிய என்னை
தன் மார்மோடு அணைத்து கல்வி அமுதம்
ஊட்டியவர் என் ஆசிரியை

பிஞ்சு மனம் அதில் அறிவு நீர்பாய்ச்சி
கை பிடித்து என் தாய் மொழி அரிச்சுவடி
எழுத கற்று தந்தவள் என் ஆசிரியை

சாதி மதம் பாராமல் ஏற்ற தாழ்வு காட்டாமல்
எல்லோருக்கும் ஒரே போல போதிப்பவள் என் ஆசிரியை

பள்ளிக்கூடம் எனும் ஓர்  இடத்தில் நீ இருந்தும்
உன்னிடம் படித்து உலகை வலம் வருகிறோம்
நாங்கள் உன்னை சுற்றி

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாணவர்கள்
எல்லோரிடவும் ஒரே போல தான் இருக்கிறது
உன் அணுகுமுறை

அளவு கடந்து எங்களின் விளையாட்டுக்கள்  எல்லை மீறும் போது
எங்களை நல்வழிப்படுத்த தண்டனையும் தருவாய்

கொடுக்க கொடுக்க பெருகும் ஒரே செல்வம்
கல்விச்செல்வம் கொடுத்து கொண்டே இருக்கிறார்
என் ஆசிரியர்

பள்ளியின் கடைசி நாள் எல்லாரிடமும் ஒரு கேள்வி கேட்டீர்கள்
படித்து முடித்து என்னவாக ஆசை என்று ?
ஒவ்வொருவரும்  கை தூக்கி  ஒவ்வொன்று சொன்னோம்
எவரும் சொல்லவில்லைஉங்களை போல் ஆசிரியர் ஆவேன் என்று !!

அன்று கனத்த இதயத்துடன் நீங்கள் வீடு சென்றீர்கள் ஆனால்
காரணம் அன்று புரியவில்லை எனக்கு

இன்று புரிகிறது எவ்வளவு மகத்துவம் மிகுந்தது உங்கள் பணி
என்று

மாத பிதா குரு மூவரும் வாழும் தெய்வங்களே !!


[highlight-text]--- என் ஆசிரியர்கள் அனைவர்க்கும் சமர்ப்பணம் ---[/highlight-text]

                    *****ஜோக்கர் ******
[/size][/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: பொய்கை on September 27, 2017, 02:30:45 AM
தாய்பாலின் மணம் என்னுள் தங்கி நிற்கையிலே
பொருட்பாலை என்னுள் புகட்ட வந்தவனே !
அன்னைமொழி புகட்ட அவள் அரும்பாடு பட்டுவிட்டாள்
என்னை நீ படிக்கவைக்க எவ்வளவு படுவாயோ ?

சட்டை பொத்தானை சரியாக போடலையே
பரட்டை தலை இன்னும் நான் ஒழுங்காக  வாரலயே
ஏட்டை தினம் புரட்டி தினம் எத்தனையோ நீ புகட்டி
வீட்டை நான் காக்கும்வகை எப்படித்தான் செய்வாயோ?

ஒரு பிள்ளை என் சேட்டை  பொறுக்கலேயே பெற்றோரால்
தெரு எல்லாம் என் பெயரை நித்தம்  வெறுக்கையிலே
கருவாக சுமந்தவளும் கண்ணீர் வடிக்கையிலே
குருவாக நீயும் வந்து என் குறைகள் களைவாயோ ?

முட்டி போட வைத்தாய் முழங்காலு வழித்ததப்போ
தட்டி கொடுத்தும்  வைத்தாய் , தடியால் அடித்துவைத்தாய்
உளி கொண்டு நீ செதுக்கி , இப்போ உருப்பெற்று நிற்கின்றேன்
பட்டமதை நீ வாங்க என் பக்கத்தில் வருவாயோ ?

அ கரத்தை நீ சொல்லி
ஆ காரம் பருக வைத்தாய்
இ ன்றும்  நினைவில்
ஈ சனை போல் தொழுகிறேன் !
உ ன்னை பாராட்ட
ஊ ர் கூடி அழைக்கின்றேன்
எ ன்றும் என் வாழ்வில்
ஏ ற்றம் காண உழைத்திட்ட
ஐ யா உன்  பெயரை
ஒ ருமுறை அழைக்கின்றேன்
ஓ டி நீயும் வந்திடுவாய் .....


Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 160
Post by: SweeTie on September 27, 2017, 07:57:26 PM
பள்ளிக்கூடம் என்றால் பாகற்காய் ஒரு  காலம் 
பனித்துளிகள் கண்ணீராய் புரண்டோட பள்ளி சென்றேன்
பிரம்போடு நிற்கும் ஆசிரியர் கண்டாலே குலை நடுக்கம்
எப்போது மணி அடிக்கும் வீட்டுக்கு போவதற்கு
காத்திருப்பேன்  ஆசையுடன் .

காலம் உருண்டோட  பள்ளியும்  தேனாகியதே 
நல்  ஆசான்  நல்  வழிகள்  அறிவுரைகள்    போதனைகள்  நண்பர்கள் 
கற்கை நெறிகள்  அறிவு கண்களை மெல்லத் திறக்கவே 
சொற்பதமும் சீராகி சிந்தனையும்  தெளிவுகொண்டு
விந்தை மனிதருக்குள்  சிந்திக்கும் சக்தி கொண்டேன்.

கற்றவரும் மற்றவரும் வாழும் இந் நல்லுலகில் 
நானும் தலை நிமிர்ந்து நிற்கும்  மதம் கொண்டேன் 
செந்தமிழால் சீராட்டி  கவிப்புலமை தானூட்டி
கண்டவரும் போற்றிடவே  சிறப்புடனே வாழ  வாழ்வளித்த
பெருமை அனைத்தும் சேரும் என் ஆசானுக்கே.

ஞாலத்தில் பெரும் செல்வம்
காலத்தால் அழியாத  கல்விச் செல்வம்
கோமகனும் குடிமகனும்  சரிசமமாய்
போற்றும்  பெரும் செல்வம்  தனை  ஊட்டும்
ஆசான்களுக்கு   இக் கவிதை சமர்ப்பணம்.