Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 342  (Read 1582 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 342

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline Sun FloweR

மைதானங்களே சொர்க்க பூமி..
அடி ,அடி என்ற சொல்லே தாரக மந்திரம்..
சிக்ஸர்களும் பவுண்டுரிகளுமே
லாட்டரி பரிசுகள்..
நோபால், ஒயில்டு என்ற வார்த்தைகளே ரட்சகர்கள்..

மகிழ்ச்சியில் தள்ளாடவைப்பதும்,
துக்கத்தில் தொண்டை அடைப்பதும் அவுட் என்ற ஒற்றை வார்த்தையால்..
மழையை ஏசுதலும், மழையைப் போற்றுதலும் டிரா என்ற வார்த்தையால் இங்கு தான்  அரங்கேறும்..

சென்னை 28 ஆக இருந்தால் என்ன?
மதுரை 18 ஆக இருந்தால் என்ன?
லயோலாவாக இருந்தால் என்ன?
மெஜிராவாக இருந்தால் என்ன?
எல்லா இடங்ககளையும் தனக்குள் வளைத்து போட்டுக் கொண்ட ஆக்ரமிப்பு விளையாட்டு..

விளையாடுபவர் மட்டுமல்ல
பார்ப்பவரையும் வெறி கொள்ள வைக்கும் மாய விளையாட்டு..
சிறுவர் முதல் பெரியவர் வரை மோகம் கொண்ட விளையாட்டு..

பதின்ம வயதுகளில் இது ஒரு லட்சிய விளையாட்டு...
நரை விழுந்த காலத்தில் இது ஒரு கனவு விளையாட்டு...
பொழுது போக்காய் நுழைந்து
பொழுதை கரைக்கும் தந்திர விளையாட்டு..
ஆண், பெண் பாகுபாடு அற்று தன் பின்னால் அலைய வைக்கும் மந்திர விளையாட்டு.

இங்கு பறப்பதும், அடி வாங்குவதும் பந்துகள் தான்..
ஆனால் வலியும், மகிழ்ச்சியும் பார்ப்பவர் மனங்களில்..
இங்கு மட்டைகளும், பந்துகளும் இணைந்தே இருக்கும் ஆனால் ஒன்றுக்கொன்று எதிரிகளாய்...

கில்லி தாயின் மடியில் பிறந்த மகவு இது..
எல்லா நாடுகளும், எல்லா மக்களும் ஏற்றுக் கொண்ட பிள்ளை இது..

இதில் சிக்கி மீள முடியாமல் தவிப்பதும், மீள விரும்பாமல் தவிப்பதும் இளைஞர்கள் மட்டுமல்ல.. அவர்களின் அப்பாக்களும்,
அப்பாக்களின் அப்பாக்களும்..

Offline Kavii

மைதானம் ஒளிரும் வெளிச்சம், பந்து வீசும் பரபரப்பின் துளிச்சம், பேட்டின் பாய்ச்சலில் பறக்கும் சந்தோஷம், விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரரின் கைத்தலம்.
பந்து பறக்க, பேட் பாட, வீரர்கள் விளையாடும் நாடகம்,,
சீருடையில் சிறக்கும் சிங்கங்கள், களத்தில் கலைஞர்கள், விக்கெட்டுகள் வீழ்த்தும் வீரம், பேட்டின் பாய்ச்சலில் பெருமை.
காற்றில் கலந்த கையோடு கால்கள், ஓட்டம் பிடிக்கும் உற்சாகம், சிக்ஸர் அடிக்கும் நிமிர்ச்சி, விக்கெட் காப்பாற்றும் காவலன்,

அணியின் ஆன்மாவில் அமைதியின் அழகு, வெற்றியின் விதையாய், கிரிக்கெட் எனும் கீதம், காலம் காலம் வாழ்க.

பவுண்டரிகள் தாண்டி பறக்கும் ஆசைகள், பந்தின் பறப்பில் கனவுகள், மிட் விக்கெட் மீது மின்னும் நம்பிக்கை, கையில் கேட்ச் பிடிக்கும் மகிழ்ச்சி,
பவுலரின் பந்துவீச்சில் பந்து பதுங்கும் தந்திரம்,
பேட்ஸ்மேனின் திறமையில் சாதனை,
கூட்டணியின் கூட்டுச் செயலில் காணும் வெற்றி,
அணியின் அடித்தளத்தில் அமர்ந்திருக்கும் அசுரன்.
மைதானத்தின் மன்னனாய் மிளிரும் கேப்டன், அவனது திட்டமிட்ட வியூகத்தில் தெரியும் ஞானம்,

ரசிகர்களின் உள்ளம் கவரும் உற்சாகம், கைகள் தட்டும் கோலாகலம், வீரர்களின் வியர்வையில் விதைக்கப்படும் புகழ்,
காலங்கள் கடந்தும் காணாத கலைஞர்கள், 
அணியின் அன்பின் அடையாளம், அவர்களின் அசைவில் அழகு, வீரர்களின் வெற்றியின் வெளிச்சம்.

மைதானத்தின் மகுடம் சூடும் மகாராஜாக்கள்,
விளையாட்டின் விதிகளை வெல்லும் வித்தைக்காரர்கள்,
விளையாட்டின் விதிகளை விருத்தியாக்கும் வித்தகர்கள், போட்டியின் பொழுதுகளில் புதிய பக்கங்கள் சேர்க்கும் புத்திசாலிகள்,
விளையாட்டின் வெளிச்சத்தில் விளங்கும் வீரம்,
கிரிக்கெட் எனும் காதலில் கரையும் நாடுகள்,

இதயங்களை தொடும் இந்த விளையாட்டின் காவியம், வீரர்களின் வியர்வையில் விதைக்கப்படும் புகழ், காலம் காலமாக காத்திருக்கும் கதைகளில், கிரிக்கெட் எனும் காதல் காவியம் கலந்து வாழ்க!

இந்த ஓவியம் கிரிக்கெட் விளையாட்டின் உணர்வுகளையும், அதில் உள்ள வீரம், உற்சாகம், திறமை, மற்றும் கலையின் அழகையும் பிரதிபலிக்கிறது.
« Last Edit: May 13, 2024, 01:56:38 PM by Kavii »

Offline ThookuDurai

காவல் துறை சாலையில் வைப்பது பேரி கேட்,
காலத்தால் என்றும் அழியாத ஒன்று கிரிக்கெட்.
கிரிக்கெட் என்றால் தமிழில் மட்டை பந்து என்பார்கள்.
அன்றைய காலகட்டத்தில் ஆர்வமாக இளைஞர்கள் விளையாடினார்.
இப்போது எல்லாம் மைதானத்திற்கு வந்தாலே அது ஆச்சரியம் தான்.

கிரிக்கெட் சூதாட்ட மா மாரி பல வருடங்கள் ஆகிவிட்டது.
 சின்ன வயதில் கையில் கிடைத்த உருட்டு கட்டை வைத்து
 கிரிக்கெட் ஆடிய நினைவுகள் எல்லாம் மறக்க முடியாத அனுபவம்.
சாதாரணமாக விளையாடிய விளையாட்டு
ஒரு சில நேரங்களில் பந்தயம் வைத்து விளையாடினார்.

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் இருந்த நேரத்தை விட
மைதானங்களில் இருந்த நேரம் அதிகம்.
நண்பர்களுடன் சிரித்து பேசி ஒன்றாக
விளையாடியது எல்லாம் நமக்கு ஒரு உற்சாகம் நிறைந்தது.
மைதானங்களில் விளையாடிய காலம் போய்
இன்று மொபைலில் விளையாடுகிறனர்.

இப்போது எல்லாம் கிரிக்கெட் கூட
சினிமாவில் தான் அதிகம் பார்க்க வேண்டியது இருக்கு.
கிரிக்கெட் என்றால் ஆண்கள் மட்டுமே விளையாட வேண்டும் என்று இருந்தது,
ஆனால் இப்போது பெண்களும் விளையாடுகின்றனர்.
11 பேர் கொண்ட கிரிக்கெட் டீம்,
அதில் ஆல்ரவுண்டர் ஆக இருக்கும் வீரர் ஆட்டநாயகன் என்று கூறுவர்.

மக்கள் சிலர் பயன் படுத்தும் ஒன்று கோல் கேட்,
சுங்க சாவடிக்கு ஆங்கிலத்தில் டோல்கேட்,
சுறுசுறுப்பாக ஆடும் விளையாட்டு கிரிக்கெட்,
அதில் முக்கியமான எடுக்க வேண்டும் விக்கெட்.
வாழ்க்கையில் வெற்றி பெறவும் ஒடனும்,
கிரிக்கெட்டில் வெற்றி பெறவும் ஒடனும்.

நாட்டுக்காக நடக்கும் கிரிக்கெட் என்பது ஐபிஎல்,
 நமக்காக நடக்கும் கிரிக்கெட் என்பது எப்ஃபிஎல்‌.
அன்று முதல் இன்று வரை அனைவரும் ரசிக்கும்
ஒரு விளையாட்டு என்றால் அது கிரிக்கெட் தான்.
சுற்றி அமர்ந்து கொண்டு பார்க்கும் ரசிகர்கள்
விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகம் தரும் வகையில்
விசில் போட்டு ஆடி பாடி இன்னும் பல கூட இருக்கலாம்.

கிரிக்கெட்டில் போராடி பெரும் தோல்வி கூட
நமக்கு சந்தோஷம் தரும்.
முதுகுக்கு பின்னாடி இருக்க பேருக்காக இல்லாமல்,
நெஞ்சுக்கு முன்னாடி இருக்கும் ஊருக்காக விளையாட வேண்டும்.
« Last Edit: May 14, 2024, 07:18:38 AM by ThookuDurai »

Offline Symphony

ஆடுகளம்
இந்த மட்டை பந்து ஆடுகளத்தின் ஓவியத்திற்கு உயிர் ஊற்ற வந்துள்ளேன்  நான் ஒன்றும் கவிஞன் அல்ல, சின்னஞ்சிறு பருவத்திலேயே விளையாடிய  11 உயிருள்ள ஓவியங்கள் விளையாடும் களமாம் இந்தக் களம், இக்காலமும்.. எக்காலமும்... மவுசு ஒன்றும் குறையாத பூங்காலம்!  ரன்கள் எடுக்க துள்ளி குதித்து ஓடும் மான்களும் நாங்களே ! தத்தி தாவி பந்தை பிடிக்கும் மந்தியும் நாங்களே, தென்னை மட்டையில் பேட் செய்து விளையாடிய  தருணங்கள் இன்றும் நெஞ்சில் நீங்கா நினைவலைகளாய் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, பள்ளி பருவத்திலே எப்பொழுது ஞாயிறு வருமென்று காலண்டரின் நாட்களை எண்ணியதும் மறந்திடுமோ, கிரிக்கெட் ஒன்றும் பொழுதுபோக்கு அல்ல எங்களின் உயிரில் ஒன்றாக கலந்து விட்டது, ஒன்று மட்டும்தான் இன்று வரை விளங்கவில்லை பள்ளி தேர்வு கல்லூரி தேர்வுகள் வரும் காலங்களில் மட்டுமே தான் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துகிறார்கள் போட்டியை பார்த்து விட்டால் எனது பிள்ளை பெயிலாகி விடுவானோ என்று டிவியை ஆப் செய்து விட்டு செல்லும் தந்தையின் செயலை பார்த்து விரோதி போல்பார்த்ததும் உண்டு.
பக்கத்து ஊரில் டோர்னமெண்ட்க்கும் பெயரை கொடுத்தாயிற்று.
வாகனம் ஒன்றும் கடன் வாங்கி சென்றது மறக்குமா,
முதலாக  பெற்ற வெற்றி  ஆனந்தத்தில் துள்ளி குதித்தோம்
திழைத்து வெற்றியின் களிப்பில் மகிழ்ச்சி அடைந்தோம் , அகவைகள் கடந்தாலும் இன்றளவிலும் இந்த மட்டை பந்து விளையாட்டு வீரர் என்ற பெருமிதம் கொள்வதில் நான் ஒன்றும் விதிவிலக்கல்ல, துள்ளித் திரிந்து விளையாட்டு விளையாடிய காலமும்  மறக்கத்தான் முடியுமோ, இளைஞர் முதல் முதியவர்கள் வரை விரும்பும் ஓர் விளையாட்டு தான் இது, குதூகலமாக வெளியில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் கமான் சிக்ஸர் சிக்ஸர் என்று கத்தும் சத்தங்களும் விசில் சத்தங்களும் காதுகளில் இருந்து நீங்காத நினைவலைகளாக தான் தோன்றுகிறது,  விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆரவாரம் செய்து  ஊக்கப்படுத்தியதை  கண்டு கர்வம் கொண்டு அவுட் ஆனதும்  மறக்க முடியுமா என்ன? எவ்வளவோ விளையாட்டுகள் இருந்தாலும் இந்த கிரிக்கெட்  பிடித்திருக்கிறது அடிக்கும் ரண்களும் எடுக்கும்  விக்கெட்டுகளும்  அடுத்த பந்தில் எப்படி என்ன மாறுமென்று கூற முடியா சுவாரஸ்யம் மிகுந்த ஓர் விளையாட்டு தான்!
ரன் எடுக்க ஓடி ஓடி வெற்றி கழிப்பை  அடையவும் நாம்  நம் பிள்ளைகளுக்கும் விதைகளை விட்டுச் செல்ல வேண்டும், ஆனால் சிறு பிள்ளைகளிடம் கணினியையும் செல்போனையும் கொடுத்துவிட்டு விளையாட்டு மைதானங்களை எல்லாம் பிளாட் போட்டு கட்டி விட்டு!
ஓடி ஆடி  விளையாட வேண்டிய குழந்தைகளை எட்டுக்கு பத்து அறையிலே அடைத்து விடுகிறோம்  நாம்!
ஊர்கள் தோறும் மைதானம் அமைப்போம்   பிள்ளைகளின்  மகிழ்ச்சியும் ,  கேம் சென்டர்களுக்கு அழைத்துச் செல்வதெல்லாம் வெற்று காகிதம் போன்றது தான்,
விளையாட்டு பருவத்தை கெடுத்து விட்டு என்ன சாதிக்கப் போகிறோம்,   இவன்(Symphony) இராஜூ மகிழ்வித்து மகிழ் வாழ்க வளமுடன்
« Last Edit: May 15, 2024, 01:10:22 AM by Symphony »
Raju

Offline mandakasayam

  சிறுபிள்ளைகள் முதல்  பெரியவர்கள்  வரை விரும்புவது மட்டை பந்து தான் ..மைதானத்தில்  நண்பர்களுடன் எவ்வித கவலைகளின்றி விளையாடினோம்  அன்று .!கட்டிடங்களும் மதில் சுவர்களும் மறைத்துவிட்டன பலரது இளம்வயது கனவுகளை

இரு அணிகளுக்குள் கோபம்,  மோதல்கள். ஆர்ப்பரிக்கும் இரசிகர் பட்டாளங்கள் பெரும் திருவிழாவையே  திணரடித்துவிடும் .!!

. வீரர்களின் கனவு ,இலட்சியம் அணியை  வெற்றியை பெற செய்ய ஆடும் வீயூகம்  பாராட்டுக்குரியது.

உலக நாடுகளின் நட்பை இன்றளவும் இணைத்து வைத்திருப்பதே மட்டைபந்து தான் சுவாரசியம் மிகுந்த மகிழுட்டும் தருணங்கள் நடப்பது மட்டைப்பந்தில் தான் ....

வெற்றியோ தோல்வியோ இறுதிவரை போராடுபவனே சிறந்த வீரன்   பலரால்  கேலி, கிண்டல், அவமரியாதை என சந்தித்த வீரர்கள் 1983- ல் இந்தியர்களை தலைநிமிர செய்த கேப்டன் கபில்தேவ்!!!! 

பல  ஆண்டுகளாக தவமாய் தவமிருந்தோம் உலககோப்பையை   கையில் ஏந்திடமாட்டாமோ என்று விளையாட்டை நேசிக்கும் பலரது கனவை நனவாக்கிய 2011 -   ஆண்டில் வெற்றிவாகை சூட்டினார் தலைவன் Ms தோனி..



நம் சாதனையை சமன் செய்ய இன்னொருவர் உருவாகின்றான் சரித்திரத்தை நிலைநாட்ட நம்மால் மட்டுமே முடியும்...
 


போராடி கிடைக்கும் தோல்விகள் கூட கொண்டாடப்படும் வெற்றிதான்.- எம்.எஸ்.தோனி
« Last Edit: May 15, 2024, 05:28:12 PM by mandakasayam »

Offline TiNu



அன்று,
ஓ.. விளையாடலே.. எனையாளும் கலையே..
உன்னை விரும்பாதவர் யாருமுண்டோ?
உன்னால் நாங்கள் அடையும் பயன்கள்.. ஏராளம்.
அது, எண்ணுக்குள்ளும் எழுத்துக்குள்ளும் அடங்காது..

உன்னை, சில மனிதர்கள்.. பொழுது போக்கு என்பர்.
இன்னும், ஒரு சிலர் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பர்..
ஆனால் நானோ.. ஒரு கடின வித்தையை ஒருவர் அறியாமல்
அவருக்கு நாம் எளிமையாக கற்பிக்கும் யுக்தி என்பேன்..

நீயோ! ஒரு நிகழ்வுக்கு வியூகம் அமைக்க.. கற்று தருகின்றாய்..
அவ்வியுகத்தை செயலாக்கும் நுட்பம் செதுக்க.. கற்று தருகின்றாய்.. ..
செதுக்கிய நுட்பத்தை செயலாகும்.. மனவலிமை கற்று தருகின்றாய்..
மனவலிமையோடு.. வேகம் விவேகத்தையும் கற்று தருகின்றாய்..

மேலும்,
உள்ளரங்க விளையாட்டு.. வெளி அரங்க விளையாட்டு..
தனிநபர் விளையாட்டு..., குழுக்களின் விளையாட்டு...
எல்லைக்குள் விளையாட்டு.. எல்லைகளில்லா சுதந்திர விளையாட்டு..
விதிமுறைகளின் கட்டுப்பாட்டில் நீந்த கற்று தருகின்றாய்..

இன்றோ, 
மட்டைபந்தே... உலகின் மாபெரும்.. இதய துடிப்பு என்கிறார்கள்..
அகன்ற ஓர் அரங்கில், ஆயிர கணக்கானோர் சுற்றி நிற்க...
ஒருவர் மட்டும் பத்துஎறிய.. அதை ஒருவர் தடுத்து ஆட..
மற்ற வீரர்கள் வேடிக்கைபார்க்க, நடந்தேரும் விளையாடல்.. அது..

இன்று,   விளையாட்டை விளையாட்டாக பார்க்க ஆளில்லை..
தனக்கு, பொருளீட்டும் தொழிலாக பார்க்கின்றது.. ஒரு கும்பல்..
தான், உருவாக்கிய பொருளை சந்தைப்படுத்துகிறது.. ஒரு கும்பல்..
கைகள் தட்டி கொண்டவந்தவர்களை.. சூதாடிகளாக மாற்றுகிறது..  ஒரு கும்பல்..

இன்றைய விளையாட்டுக்கள் எல்லாம்.. விளையாட்டாக இல்லையே..
மட்டைபந்திடம்.. தன் தன்மை மறந்து மயங்கி தடுமாறி கிடக்கின்றன..
பண்டைக்கால நம் பாரம்பரிய விளையாட்டுகள் எங்கே போயின?
நம்மை செதுக்கி சிற்பமாகிய நம்ம விளையாட்டை காத்து நிற்போமா?   

இவை, ஆயக்கலைகளில் 64-ல் நம்மை களிப்பூட்டும் கலையிலும் சேராது.
இது, வீரம் செறிந்த போர்ப்பயிற்சி கலைகளிலும் அடங்காது...
நாம், விவேகவீரத்துக்கு விலைகள் பேசாது.. விலைகளுக்கும்  போகாது.. 
அதன்,  சிறப்புகளை..  மதிப்புகளை.. மங்காது மறையாது.. காத்து நிற்போம்...


« Last Edit: May 15, 2024, 11:34:57 AM by TiNu »

Offline VenMaThI



மட்டைக்கும் பந்துக்கும் ஆன உறவே
நமக்கும் நம் வாழ்க்கைக்குமான உறவு...
அடிகளை தாங்கும் மட்டையாய் நாமும்
நம்மை அடிக்க காத்திருக்கும் பந்தாய் நம் வாழ்க்கையும் ....

எவ்வளவு முறை அடித்தாலும்
திரும்ப திரும்ப நம்மை நோக்கியே வரும்
அடிக்க முடிந்த வரை அடிப்போம் ...
வெற்றியோ தோல்வியோ நிர்ணயிப்பது என்னவோ அது தானே ?

வெற்றியை இலக்காய் கொண்ட விடாமுயற்சி போராட்டம் ..
தோல்வி நம்மை தழுவிய போதும்
தோள்களை தட்டி நமக்கு நாமே கூறும் ஆறுதல் வார்த்தை
தோல்வியும் வெற்றியடா , ஆம் அதுவே வெற்றிக்கு முதரற்படியடா ...

நமக்காய் நம்முடன் நிற்க சிலர்
நம்மை எதிரியாய் கொண்டு எதிர்க்கவும் சிலர் ..
கை கொட்டி சிரிக்கவும் சிலர்
அய்யோ பாவம் என்று அழுகவும் சிலர்..

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்
என்ற கூற்று எங்கோ ஒலிக்கும் நொடியில்
தோள் கொடுப்பான் தோழன் என்ற கூற்றும்
காதுகளில் கணீரென கேட்கிறது ...

போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்
செவிமடுக்காமல் நம் இலக்கை நோக்கி போவோம் ...
வெற்றியோ தோல்வியோ என்றுமே நம் கையில்
வீழ்த்த நினைத்தாலும் விருட்சத்தின் விதையாய் முளைப்போம் ...


Offline Vethanisha

மைதானம் இறங்கவில்லைங்க 
கையில் பந்தை வீசவில்லைங்க 
மட்டையும் தூக்கவில்லைங்க 
ஆனாலும் ஆடினேன் தூங்காம 
நானும் ஒரு  Cricketங்க

Strikers, Shooters, blasters  தொடங்கி மொத்தம் எட்டு குழுங்க
 அட ஆறே நம்பர்குள்ள இந்த மொத்த gameum அடுக்கும்ங்க
Private le bowling போட்டு  main le அடிப்போம்  battingங்க
இதுதான் எனக்கு தெரிஞ்ச ஒரே ஒரு Cricketங்க 

 நம்ம  FTC வழங்கும் FPL   match தாங்க 😁

தங்கமான கேப்டன்
எங்க  strikers கேப்டன் வாணிஸ்ரீங்க
பயபுள்ள tossing time  மட்டும் போய்டுவாங்க
 out of coverage  ங்க
 ஜெயிச்சாலும் தோத்தாலும் செல்லமேனு கட்டி பிடிப்பாங்க
எல்லா வியாதிக்கும் சொல்வாங்க சரியான  நாட்டு வைத்தியம்ங்க

Tea Master போடுவாரா தெரில strong ar ஒரு டி ங்க
ஆனா மாஸ்டர் எப்போதுமே எங்க டீம் strong palyerங்க
அடிப்பாரு பாருங்க வரிசையா பல  sixerங்க
Game  தவிர மத்த நேரம் எல்லாம் சார் pvt le busyங்க

சரியான நேரம்  வந்தாரு  நம்ம நண்பன் balck pantherங்க
வரும்போதே போடுவாரு strong ar  ஒரு மந்திரம்ங்க
என்னடா bowling போடுறேனு tea master திட்டினாலுங்க 
அட போங்கய்யா இதுதான் என் கேம்னு
கெட்டியா நிற்பாருங்க , wicket ar எடுப்பாருங்க

புது வரவு எங்க FCP Shanங்க
வந்த அன்னைக்கே எடுத்தாரு maximum runங்க
Game முடிஞ்சதும் மெயின் லே போடுவாரு கடலைங்க
 இருந்தாலும் !
இப்போதைக்கு எங்க  டீம் நம்பிக்கை நடிச்சதிரமங்க

எங்க டீம் Virat Terror ஆனா cute moonங்க
அவுங்களுக்குனு உண்டு  தனிபாணி ஆட்டடம்ங்க
எனக்கு எப்போதுமே அவுங்கதான் குருவுங்க
என்ன தோல்வினா மட்டும் மாமி
ஒரு நாள் மட்டும் தூங்க மாட்டாங்க

அன்பான  நண்பன் வசீகரன்ங்க
ஐயோ out  என்றாலும்  பாத்துக்கலாம்னு
தட்டி கொடுக்கும் தோழனுங்க
கடைசி நேரத்துலே draw எடுத்து team ar காப்பாத்துவாருங்க
எப்போதுமே இவர சுத்தி அதிக girls fansதாங்க

எல்லா டீமையும் கட்டி ஆழும் umpire தானுங்க
எட்டு குழு owners எங்க Spike  plus வெண்மதி தாங்க
எல்லாரையும் ஒன்னு சேர்க்க பாடுவாங்க படாத பாடுங்க
ஆளே சேர்த்ததே  கையில அருவாள் காட்டிதாங்க

கேம் ஆடும் ஒரு ஒருத்தரும் ஒவ்வொரு ரகமுங்க 
எல்லாரையும் முகம் சுளிக்காம சமாளிப்பாங்க
பொறுமையின் சிகரம்னா இவுங்க   தானுங்கே
எப்போதுமே உண்டு  என்னோட special சலாம்ங்க 

நண்பர்கள்  டீம் காக விழித்திருந்து கை தட்டும் போதுங்க
அவங்கே வெற்றியை நம்  வெற்றியாய் ரசிக்கும் போதுங்க
கூடுனது எல்லோர்கிடையும்  நல்ல   நட்பு தாங்க
கண்டிப்பா இதையெல்லாம்  இனி  மிஸ் பன்னுவேங்க

இதுதான் எனக்கு தெரிஞ்ச
ஒரே ஒரு Cricketங்க
 நம்ம  FTC வழங்கும் FPL   match தாங்க 😍
« Last Edit: May 16, 2024, 11:52:23 AM by Vethanisha »

Offline Tea Master

அன்பே மட்டைப்பந்து, கண்டு பிடித்ததோ இங்கிலாந்து இருக்கலாம் ஆனால் ரசிப்பதோ இந்தியர்கள்...
நாம் அனைவரையும் ஒன்றாக ரசிப்பது இதை தான் கிரிக்கெட் தான்.
கிரிக்கெட்க்கும் நமக்கும் ஒற்றுமை உள்ளது ஏற்றம், இரக்கம்.
நம்மை எப்பவும் சுறுசுறுப்பாக வைப்பது கிரிக்கெட் தான்
நம்மை எப்பவும் வலிமையாக இருப்பதும் கிரிக்கெட் தான்.
வெற்றி தோல்வி சகஜம் கிரிக்கெட்க்கு எப்பவும் மகிழ்ச்சி, உற்சாகம், சந்தோஷம்..
கிரிக்கெட் ஆடுபவர்கள் பதினோரு வீரர்கள் அவர்கள் ஆடுவதை ரசிப்பதோ பல்லாயிரம் கோடி மக்கள்.
நம்மை ஒருங்கிணைப்பது இந்த கிரிக்கெட் தான்
நம்மை எங்கேயும் போகாமல் கட்டுப்படுத்துவதும் கிரிக்கெட்தான் .
கிரிக்கெட்டை ரசிப்போம். போற்றுவோம்..