Author Topic: காபி பாப்ஸ்  (Read 363 times)

Offline kanmani

காபி பாப்ஸ்
« on: August 08, 2013, 10:30:25 PM »
என்னென்ன தேவை?

காபி தூள்-2டீஸ்பூன்
ப்ரவுன் சர்க்கரை-1டீஸ்பூன்
தண்ணீர்-1கப்
கன்டென்ஸ்ட்டு பால்-3டீஸ்பூன்
காபி கப்-3
ஐஸ் பாப் குச்சி

எப்படி செய்வது?

தண்ணீருடன் காபி பவுடரை கலந்து கொதிக்கவிடுங்கள். அதனுடன் சர்க்கரையை சேர்த்து கலந்து கருப்பு காபியை உங்கள் சுவைக்கு தகுந்தாற் போல  தயாரித்துக்கொள்ளுங்கள். அதை காபி கப்பில் 1/4 என்ற அளவில் கருப்பு காபியை ஊற்றி குளிர்விப்பானில் ப்ரீசர் அறையில் எடுத்து  வைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள கருப்பு காபியுடன் கன்டென்ஸ்ட்டு பாலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை சூடு படுத்த  வேண்டாம். இனிப்பு சரியாக இருக்கிறதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

தேவையானால் சேர்த்துக்கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து ப்ரீசரில்  வைத்துள்ள காபியை எடுத்துகொள்ளவும். காபி கெட்டியாகி இருக்கும். இதன்மேல் கன்டென்ஸ்ட்டு பாலை ஊற்றி சிறிது துளையிட்டு ஐஸ் பாப்  குச்சிகளை சொருகி நிமிர்ந்த நிலையில் வைக்கவும். கவனமாக எடுத்து குறைந்தது நான்கு மணி நேரம் ப்ரீசரில் வைக்கவும். பின்னர் காபி பாப்ஸ்சை  சாப்பிடலாம்.