Author Topic: ~ உங்கள் mouse-ல் மறைந்திருக்கும் ரகசிய வித்தைகள்…! ~  (Read 533 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218399
  • Total likes: 23073
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
உங்கள் mouse-ல் மறைந்திருக்கும் ரகசிய வித்தைகள்…!

கணினியுடன் இணைக்கப்பட்டிருக்கும் Mouse ஆனது கணினியை பயன்படுத்துவதற்கு இன்றி அமையாத ஒரு சாதனமாகும். மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் கூட Touch Pad இற்கு பதிலாக பிரத்தியோக Mouse ஒன்றினை இணைத்து பயன்படுத்துவதும் உண்டு.

கணினி பயன்படுத்தும் ஒவ்வொரு தடவையும் Mouse பயன்படுத்தினாலும், இதில் இருக்கும் சில வசதிகளை நாம் சரியாக அறிந்ததில்லை. அவ்வாறான சில வசதிகளை கீழே பார்க்கலாம்.

கணனியில் உள்ள அல்லது இணையத்தில் இருக்கக்கூடிய எழுத்து வடிவில் அமைந்த ஆவணங்களில்/பதிவுகளில் உள்ள ஒரு சொல்லினை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் நாம் அவற்றினை Mouse மூலம் Click செய்து தெரிவு செய்வோம். ஆனாலும், குறிப்பிட்ட சொல்லினை Double Click செய்வதன் மூலம் மிக இலகுவாக தெரிவு செய்து கொள்ள முடியும்.

அதே போல், எழுத்து வடிவில் அமைந்த ஒரு ஆவணத்தில்/பதிவில் உள்ள ஒரு வசனத்தினை அல்லது பந்தியினை தெரிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் குறிப்பிட்ட வசனத்தின் அல்லது பந்தியின் ஆரம்பம் தொடக்கம் இறுதி வரை Mouse மூலம் Click செய்தவாறு தெரிவு செய்வோம். ஆனாலும் இதனை பின்வரும் வழிமுறையிலும் மேற்கொள்ளலாம்.

அதாவது குறிப்பிட்ட வசனத்தின் அல்லது பந்தியின் ஆரம்ப இடத்தினை Mouse ஆள் Click செய்து விட்டு அதன் இறுதிப்பகுதியை Shift Key ஐ அழுத்தியவாறு Click செய்ய வேண்டும்.

இணையத்தில் இருக்கும் ஒரு இணைப்பை, புதியதொரு தாவலில் (Tab) திறக்க வேண்டும் எனின் நாம் பொதுவாக அந்த இணைப்பினை Right Click செய்து Open Link in New Tab என்பதனை சுட்டுவோம். இருப்பினும் குறிப்பிட்ட இணைப்பினை Mouse இன் Scroll Wheel மூலம் சுட்டுவதன் மூலமாக அதனை புதியதொரு தாவலில் திறந்து கொள்ள முடியும்.