Author Topic: புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன் வரலாறு  (Read 2707 times)

Offline Darth Vader

  • Jr. Member
  • *
  • Posts: 50
  • Total likes: 73
  • Karma: +0/-0
  • Gender: Male
  • ''Do or Do Not There is No Try''
வாழ்க்கை குறிப்பு


இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர் புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்என பெரும்பாலும் அறியப்படும் பாரதிதாசன். தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய கவிஞர் என்றால் அது மிகையாகாது. தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்ப  தமிழெங்கள் உயிருக்கு நேர் என்ற தேன் சுவை சொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர். தூங்கும் புலியை பறை கொண்டெழுப்பினோம், தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினோம், தீங்கு பகைவரை இவனின்றி நீக்குவோம். செந்தமிழ் உணர்த்திக்கொண்டு தாக்குவோம் .இப்படி அவரின் வீர வரிகள் மூலம் தமிழரை தமிழ் கொண்டு எழுப்பினார் பாவேந்தர் பாரதிதாசன்.
பிறப்பு : ஏப்ரல் 29,1891

தந்தை : கனகசபை

தாய் : இலக்குமி அம்மையார்

பிறந்த இடம் : பாண்டிச்சேரி

இயற்பெயர் : கனகசுப்ரத்னம்

புனைபெயர் : பாரதிதாசன்

நாடு : இந்தியன்

தொழில் : தமிழாசிரியர் ,கவிஞர் ,அரசியல்வாதி

இனம் : தமிழர்

இயக்கம் : திரவிட இயக்கம்

இறப்பு : 21,ஏப்ரல் 1964

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்று மட்டும் அல்லாமல் வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா மகராசர்கள் உலகாளுதல் நிலையாம் எனும் நினைவா உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா போன்ற சமுதாய சீர்திருத்தம் பாடல்கள் மூலம் நாட்டின் சீர்கேட்டை சமாதான கொள்கையால் வைக்க முடியாது.

கொலைவாளினை எடுத்து தீமை கொண்டோரை தீர்த்திட வேண்டும் என்ற எண்ணம் உள்ளம் துடித்து உயிர் மூச்சு தீயாக மாறும் ஆவேசம் அவரது படைப்பை தெரிந்தது.

சாதியும் சமயமும் போன்ற பல புரட்சிகர பாடல் எழுதுவதில் வல்லவர். இவர் கவிஞர் மட்டுமல்ல தமிழாசிரியர், அரசியல்வாதி திரைக் கதாசிரியர்,எழுத்தாளர் என பல வடிவங்கள் இவருக்கு உண்டு.


பாரதிதாசனின் பிறப்பு

சாகித்ய அகடாமி விருது பெற்ற தலை சிறந்த படைப்புகளுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையும் உண்டு. பாவேந்தர் பாரதிதாசன்பாரதிதாசன் இவரின் இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.

இவர் 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி புதன்கிழமை புதுச்சேரியில் கனகசபை முதலியார் இலக்குமி அம்மையார் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் அவரது தந்தை அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார்.

அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை தன்னுடைய பெயரில் இணைத்து கனகசுப்புரத்தினம் என்று அழைக்கப்பட்ட தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்று உடையவராக திகழ்ந்த இவர் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப இளமையிலேயே கதி இயற்றும் திறமை பெற்றிருந்தார்.

புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி நடைபெற்றது. அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார் 1899 ஆம் ஆண்டு அவர் ஆசிரியர் திருப்பதி சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி பயின்றார்.

அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார்.

சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை எழுதும் திறனை பற்றி அவருக்கு தமிழ் மொழியிலும் பள்ளியில் சேர வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமான தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார்.

பாரதிதாசனின் பள்ளி படிப்பு

பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர் தனது 16 வயதில் 1907 ஆம் ஆண்டு புதுவை மகாவித்வான் பெரியசாமி பிள்ளை அவர்களிடமும் பங்காரு பத்தர் அவர்களிடமும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார்.

புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும் அவரது தமிழ்ப் புலமையையும் விரிவுபடுத்தினார்.

தமிழறிவு நிறைந்தவராகவும் அவரது விடா முயற்சியால் தேர்வில் முழு கவனம் செலுத்தியதால் மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார்.


பாரதிதாசன் அவர்களின் திருமணம் வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள் தமிழாசிரியராக பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு சரஸ்வதி வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர் ஒருமுறை புதுச்சேரியில் சூறாவளி காற்றில் சிக்கி 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டார் பாவேந்தர்.

அதன் பின் ஒரு நாள் முழுவதும் அலைந்து திரிந்து பிறகு வீடு வந்து சேர்ந்தார்.  இந்த அனுபவத்தை காற்றும் கனக சுப்புரத்தினம் என்ற கட்டுரையாக வடித்தார் பாரதி.

அதேபோல் பாவேந்தரின் வாழ்க்கையில் மற்றொரு சம்பவம் கொலை வழக்கில் தொடர்புடைய மாடசாமி புதுச்சேரி வந்த போது அவரை போலீசுக்கு தெரியாமல் கட்டு மரத்தில் ஏற்றி நடுக்கடல் வரை கொண்டு சென்று வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார். சாதியை முற்றிலுமாக வெறுத்தார் .

புதுச்சேரி கடற்கரையில் அம்மட்டமீன்  என்ற பெயர் விற்கப்பட்டு வந்த மீனை வாங்கி உண்ணும் மாட்டாராம். அப்படி உண்டால் அது சாதி இழிவுக்கு அடையாளம் என்று கருதினார். ஒரு நாள் முற்றுயிட்ட சிறுமியிடம்  ஒரு கேள்வியை எழுப்பினார்.

அதாவது சேரி  முட்டை வேகாதே என்ன செய்ய என்று குறும்பாக கேட்டுள்ளார். அதனால் அந்த சிறுமியும்  அதை உண்மை என நம்பி திகைத்ததையும் சொல்லி பாட்டாகப் பாடி இருக்கிறார்.

அந்த பாட்டில் அந்த சிறுமி முட்டை விற்கிறாளே தவிர அதை ஒரு நாளும் வேகவைத்து உண்டவும்  இல்லை .

அதனால்தான் அது வேகுமா வேகாத  என்பதைக் கூட சொல்லத் தெரியாமல் திகைத்தாள் என்பார். இவரது காலத்தில் நவீன எழுத்தாளர்களின் வேடன்தாங்கல் ஆக மணிக்கொடி இதழ் இருந்தது.

அப்போதைய நவீன எழுத்தாளரான பாவேந்தர் பாரதிதாசன்1930ஆம் ஆண்டுகளில் அந்த கவிதைகளாக பாரதிதாசனின் கவிதைகள் இடம்பெற்றன.

அவரது காலத்திலேயே பலரையும் எள்ளி நகையாடி விமர்சிக்கும் எழுத்தாளர்தான் புதுமைப்பித்தன். அவரே பாவேந்தரின் கவிதைகளை கொண்டாடி மகிழ்ந்தார்.

அவரின் அந்த பாராட்டு வார்த்தைகள் யாப்பு அறிந்த பலரிடம் கவிதை இருப்பதில்லை. இவர் கவிதைகளில் புதுமையான சொற்பிரயோகங்கள் ஆச்சரியம் மூட்டுகின்றன.ர் மனிதர் தமிழ் மீது வைத்திருக்கும் பற்று மகத்தானது என்றெல்லாம் பாவேந்தரை பாராட்டினார்.


போராட்டங்களில் ஈடுபட்ட பாவேந்தர் பாரதிதாசன்

பாரதிக்குப் பிறகு பாவேந்தரை கவர்ந்தவர் ஈவேரா பெரியார். பாரதியாரின் மறைவிற்கு  பிறகு பெரியாருடன் பழகும் வாய்ப்பு பாவேந்தர்க்கு  கிடைத்தது.

1920 ஆம் ஆண்டு ஈவேரா பெரியாரின் சுயமரியாதை கருத்துக்கள் பாவேந்தரை கவர்ந்ததால் அதன்மூலம் பெரியாருடன் தொடர்பு கொண்டான் பாவேந்தர் பாரதிதாசன்சுயமரியாதை இயக்கத்தின் ஒப்பற்ற பாவலர் என்ற பாராட்டைப் பெரியாரிடம்  பெற்ற இவர் பெரியாரைச் சந்தித்த நேரத்தில்தான் சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியது. பெரியாரின் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டனாக மாறினார்.

அதனால் தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார்.

அந்த சமயம் அண்ணா நெடுஞ்செழியன் ,அன்பழகன் போன்ற திராவிட இயக்கத்தினரிடம் நட்பு கொண்டிருந்தார். திராவிட மேடைகள் தோறும் கவிஞரின் கவிதை வரிகள் பாடப்பட்டன.  அப்போதுதான் புகழ் பெற்ற புலவர்கள் மத்தியில் மட்டும் உலா வந்து கொண்டிருந்த பாவேந்தர் பாரதிதாசன்சாதாரண மக்கள் மத்தியில் உலா வரத் தொடங்கினார்.


திரைப்பட துறையில் கொடிகட்டி பரந்த பாரதிதாசன்

அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால் 1957 முதல் 1963 வரை 6 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தீவிரமாக ஈடுபட்டு அவர் பாலாமணி அல்லது பக்காத் திருடன் கவி காளமேகம் சுலோசனா 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வளையாபதி போன்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை உரையாடல் பாடல்களை எழுதியுள்ளார்.

மக்களிடையே கருத்துக்களை எளிதில் பரப்ப திரைப்படமே சிறந்த சாதனம் என்பதையும் உணர்ந்தார். பெரும் தலைவர்களான அண்ணாதுரை, மு கருணாநிதி மற்றும் எம் ஜி ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்தனர். தான் எழுதியதில் மற்றவர்கள் திருத்தம் செய்வதை விரும்ப மாட்டார்.

மானே என்ற வரி உதைக்கிறது என்றபோது வெகுண்டெழுந்தார். மான் உதைக்காதுடா மடப்பயலே கழுதைதான் உதைக்கும் என கிளம்பிப் போனவர்.

வளையாபதி  என்ற படத்தில் பாவேந்தர் பாரதிதாசன்எழுதிய பாடல் வரிகளை அவரைக் கேட்காமல் மாற்றியதற்கு கோபமடைந்தார். அதனால் மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற நிறுவனத்துடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்தார்.

பாரதிதாசன் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி பாண்டியன் பரிசு என்ற நூலை படமாக்க முயற்சித்தார்.

ஆனால் முயற்சி தோல்வியடைந்தது மகாகவி பாரதியார் என்ற தலைப்பில் பாரதியாரின் வாழ்க்கையை திரைப்படமாக விரும்பி அப்படத்தில் தாமே பாரதியார் ஆகவும் நடிக்க இருந்தார்.

திரைக்கதை உரையாடல்கள் எழுதி முடித்த நிலையில் போதிய பணம் இல்லை பண உதவி கிடைக்கப் பெறாததால் முயற்சி தோல்வியடைந்தது.


சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய பாவேந்தர் பாரதிதாசன்

பாவேந்தர் பாரதிதாசன்1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 5 ஆண்டுகள் செம்மையாக செயல் புரிந்த அவர் 1960 ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.

அந்த சமயம் செட்டிநாட்டுத் தமிழ் அறிஞர்களிடம் கவிஞர் தொடர்பு கொண்டிருந்தான் அவர்களின் நிதி உதவியுடன் சென்னை சாந்தோம் சாலையில் முத்தமிழ்மன்றம் நிறுவினார்.

அப்போது பெரும்பாலும் அறியப்படும் கவிஞர் சுரதா அந்தக் குழுவில் சேர்ந்து இருந்தால் அது மட்டுமில்லாமல் அவர் பாரதிதாசன் மீது பற்றுக்கொண்ட ராசகோபால் என்னும் தன் இயற்பெயரை அதாவது சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார் .


புரட்சி கவிஞராக புகழப்பட்ட பாரதிதாசன்

1946 ஆம் ஆண்டில் அறிஞர்களின் வாழ்த்து பாராட்டு கவிதைகள் கட்டுரைகள் கொண்ட புரட்சிக்கவிஞர் என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார். அதிலிருந்து இவர் புரட்சிக்கவிஞர் எனப்பட்டார்.

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ் மொழிக்கு வழங்கி இருந்தாலும் சாதி மறுப்பு கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அளிக்கும் விதமாக பல்வேறு படைப்புகளை வெளியிட்டார்.

சமூகத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் கல்வி வழங்க வேண்டும், பெண் கல்வி மூலமே வீடும் நாடும் சிறக்கும் என்பதனை கூறியவர் பாடப்புத்தகங்களில் அ அணில்  இருந்ததை அ அம்மா என்று மாற்றியவர்.


புரட்சி கவிஞர் பாரதிதாசனின் நூல்கள்

பல்வேறு புனைபெயர்களில் பாடல் கட்டுரை நாடகம் கவிதை தொகுப்பு கதைகளை எழுதி வந்தார். பாவேந்தரின் கவிதைகள் குடும்பவிளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் காதலா கடமையா, தமிழச்சியின் கத்தி, இளைஞர் இலக்கியம், இசையமுது முதலிய அரிய நூல்கள் கவிஞரின் படைப்புகள் .

இதை தவிர்த்து எதிர்பாராத முத்தம், குறிஞ்சித்திட்டு ,குயில் ,பாண்டியன் பரிசு பாரதிதாசன் ஆத்திச்சூடி, பெண்கள் விடுதலை, பிசிராந்தையார், மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது, முல்லைக்காடு, கலைமன்றம் விடுதலை வேட்கை, போன்ற நூல்கள் மிகச் சிறந்த படைப்புகள் என்ற பெருமை பெற்றது .

நகைச்சுவை உணர்வு மிக்கவர் வந்து பாடுவார். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார் .  சிலம்பம் குத்துச்சண்டை குஸ்தி பயின்றார். வீடு என்று இருந்தால் கோழி புறா மூன்றும் இருக்க வேண்டும் என்பார் .

அவற்றைத் தானும் வளர்ந்து வந்தார்.  அறிவை விரிவு செய், அகண்டமாக்கு ,விசாலப் பார்வையால் விழுங்கு மக்கள்,  அணைத்துக் கொள், உன்னை தங்கம் உமக்கு மனித சமுத்திரம் நானென்று கூவு போன்ற இவரின் படைப்புகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை.


பாரதிதாசன் பெற்ற விருதுகள்

1946 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 ஆம் தேதி பாவேந்தரின் 55 ஆவது பிறந்த நாள் விழா நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற விழாவில் பேரறிஞர் அண்ணாவின் முயற்சி 25 ஆயிரம் ரூபாய் பணமுடிப்பு வழங்கப்பட்டது.
1950 ஆம் ஆண்டு பொன்னுசாமி பிள்ளை அவர்களின் முயற்சி அமைந்திருக்கும் மணி விழா நடைபெற்றது அவருக்கு பொன்னாடை போர்த்தி ஆயிரம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டில் புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார்.
1962 ஆம் ஆண்டு தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் ராஜாஜி அவர்கள் கவிஞருக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி பாராட்டினார்.
1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலிவுற்று பாவேந்தர். அதன் பின்னர் சென்னை பொது மருத்துவமனையில் அனுமதிபட்டார்.


புரட்சி கவிஞர் பாரதிதாசனின் மறைவு

தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வர் அழகின் சிரிப்பு பாடிவந்த நிலா 1964ஆம் ஆண்டில் ஏப்ரல் 21 ஆம் நாள் சென்னையில் இயற்கை எய்தினார். ஏப்ரல் 22 1964 ஆம் ஆண்டு அவரது உடல் மண்ணில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திராவிட பகுத்தறிவு கொள்கைகளை தனது பாடல்களில் புரட்சிகரமாக தமிழில் இயற்றி தமிழ் மொழிக்கு மிகச் சிறந்த சேவையாற்றிய மாபெரும் கவிஞர் பாரதிதாசனின் பெயரால் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகிறது.

இவ்விருது தமிழக அரசால் 1978-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் கவிஞர் ஒருவரைத் தேர்ந்தெடுத்து பாவேந்தர் பாரதிதாசன்பாரதிதாசன் விருது வழங்கப்படுகிறது.

முதன்முதலில் 1978 ஆம் ஆண்டு கவிஞர் சுரதா இவ்விருதைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பல கவிஞர்கள் இவ் விருதைப் பெற்றுள்ளனர் .
2017ஆம் ஆண்டில் விருதை திருச்சி ஜீவபாரதி பெற்றுள்ளார்.
காலத்தால் அழியாத பல பாடல்களுக்கு சொந்தகாரர். தமிழ் தமிழர் தமிழ்நாடு என்னும் முப்பரிமாணங்களில் பாரதிதாசனின் கவிதைகள் முத்தமிழையும் முழுமையாக வளம் வந்திருக்கின்றன.

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்த பாவேந்தர் பாரதிதாசன்என்றும் அவரின் சொற்பமான கவிதைகள் மூலம் தமிழ் புத்தகங்களிலும் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.


Taken From etamilulagam
« Last Edit: October 14, 2020, 01:26:19 PM by Darth Vader »

Offline Jack Sparrow

  • Jr. Member
  • *
  • Posts: 72
  • Total likes: 166
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
After so long i read again his story., Recalled., Nice Once Vader Machi :)..,,. Keep It Up