Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 274  (Read 2171 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 274

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

« Last Edit: August 29, 2021, 11:52:03 AM by Forum »

Offline Mr Perfect

  • Jr. Member
  • *
  • Posts: 58
  • Total likes: 296
  • Karma: +0/-0
  • 🥰UnNaI NeSi unnidam unmaya iruparvagalaum NeSi🥰
மகள் 💟

ஆயிரம் உறவுகள் எனக்கு நிழலை தந்தாலும் 💞

உன் நிழலை போல் எனக்கு கிடைக்குமா அம்மா 💞

எத்தனை காலங்கள் எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும் உன் அன்பு மட்டும் என்றும் குறையுமா அம்மா 💞

 ஒவ்வொரு உறவுக்கும் ஒரு எதிர் பார்ப்பு ஒன்று இருக்கும் அம்மா 💞
 
  ஆனால் உன் உறவுக்கு மட்டும்தான் எந்த எதிர் பார்ப்பும் இல்லை அம்மா 💞
 
   நீ மண்ணில் எருவாகி மறைந்தாலும் கூட உன் ஆத்மா என்னை கவனித்து கொண்டே தானே இருக்கும் அம்மா 💞
 
   நீ வாழ்க்கையில் தோற்று கொண்டே இருந்தாலும் என்னை நீ ஜெயிக்க வைத்து கொண்டே தானே இருப்பாய் அம்மா 💞
   
    நான் நோய் என்று படுத்துவிட்டால் அந்த நோய்க்கே சாபம் விட்டவள் நீதானே அம்மா 💞
   
    ஆயிரம் சாமிகள் என் கண்ணனுக்கு தெரிந்தாலும் என் முதல் சாமி நீதானே அம்மா 💞
 
     நான் எத்தனை முறை கீழே விழுந்தாலும் என்னை தூக்கிவிட ஓடோடி வருபவள் நீதானே அம்மா 💞
   
     நீ உன் பிறவியை எனக்காக தியாகம் செய்ய துணிந்து விட்டாய் உனக்காக நான் என்ன செய்ய போகிறேன் அம்மா💞


அம்மா🤱🏻

🥰பத்து மாதம் கருவறையில் உன்னை சுமந்தேன்🤱🏻

🥰கண்ணுக்குள் கண்ணாய் உன்னை காத்தேன்🤱🏻

🥰உனது ஒவ்வொரு வளர்ச்சியையும் அனு அனுவாய் ரசித்தேன்🤱🏻

🥰உன் மழலை பேச்சு கண்டு மயங்கினேன்🤱🏻

🥰என் கருவறையில் உன்னை சுமந்தது என்னவோ பத்து மாதம்தான்🤱🏻

 🥰ஆனால் என் இதய அறையில் காலம் உள்ளவரை சுமப்பேன் இதுதான் தாய்க்கும் மகளுக்கும் உள்ள பந்தம்🤱🏻

     
  -இப்படிக்கு பாசப்பிணைப்புகள் 🤱🏻
« Last Edit: August 22, 2021, 11:38:38 AM by Mr Perfect »

Offline AgNi

  • Full Member
  • *
  • Posts: 141
  • Total likes: 655
  • Karma: +0/-0
  • பெண்மை வெல்க !



மடியில் சுகமாய் அமர்ந்து ...
மழையை ரசிக்கும் மகளே!
இந்த பூமி பந்தில்
புரியாதும் புரியாத
வாழ்க்கை புதிர்களை
காதோரம் ரகசியமாய்
சொல்வேன் கேள்!

கண்ணீருக்கும் பன்னீருக்கும்
சம்பந்தம் இல்லை என்று
வெந்நீர் தான் சாட்சி சொல்லுமா?
இல்லை இந்த வெள்ளிசாரல்
வந்து விளக்கம் கொடுக்குமா?

கடந்து போன காலங்கள் திரும்பி வரும் வழிகளை...
காணாமல் அலையும் காற்றுதான்
கண்டு சொல்லுமா? இல்லை..
கரைந்து கலைந்த  மழைமேகங்கள்தான்
தேடி கொண்டு வருமோ?

பூஞ்சோலை பூவுக்குள்.....
பூநாகமும் உண்டு என்று
பூந்தென்றலும் காட்டிக்கொடுக்குமா? இல்லை..
பூகம்பமாய் புரட்டி‌போடும்
புயலும்  உண்டு என்றுதான்  அறியாமல் அறிவிக்குமா?

மண்ணில் பதியும் காலடிச்சவடுகள்
மறைந்தே போனாலும்
கடந்து போன தடங்கள்
தடயங்கள் ஆகுமா? இல்லை..
காயங்கள் மறைந்த வடுகளாய்
கல்சுவடுகளாய் நிலைத்துவிடுமா?

தலைமேல் இடியே வீழ்ந்தாலும்
தளராமல் சிகரம் ஏறும்
போராட்டமே வாழ்க்கை என்பதை..
அந்த மலைதான் சொல்லுமா?
அன்றி தவறி விழாமல் காக்கும்
அந்த சிறு குச்சி தான் சொல்லிதருமா?

ஆனாலும் மகளே!
நீ என்பதும் நான் என்பதும்
நாம் என்று ஆனாலும் ..
நாளையின் கையில் ..
விளையாடும்   பொம்மைகள்
நாம் என்று அறிவாயா?

« Last Edit: August 23, 2021, 09:23:41 AM by AgNi »

Offline DuskY

  • Jr. Member
  • *
  • Posts: 64
  • Total likes: 239
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Be happy in this moment this sec is our life
பிறக்கும் உயிருக்கு முதல் உறவு தொப்புள் வழி உறவே
அதன் பின்னே மற்றவர் உறவு...
தாயின் இதமான உடல் அரவணைப்பு பிஞ்சு மழலையின்
பசியை மட்டுமல்ல பல நோயையும் எதிர்க்கவல்லது...


எத்தனை இடர் வந்தாலும் எத்தனை தூரம் சென்றாலும்
பெற்றவள் போல் மற்றவள் அன்பு கிடைக்காது.....
அன்னை அன்போடு தயார் செய்யும் உணவு போல்
எந்த ஆடம்பர உணவுகளும் சுவை தராது....


எந்த நிர்பந்தத்தாலும் தவறு செய்ய நேரிட்டால்
சிறு பார்வையின் ஆயுதத்தால் மிரட்டிடுவாள்...
அவ்வாறு நம்மை காயப்படுத்தும் கண்டிப்பு இருந்தாலும்
 மறுநொடி அரவணைப்பில் தணித்திடுவாள்....


உலகமே உன்னை நிந்தித்து பேசினாலும் உன்னை
முழுதாய் நம்பும் உயிர் அவள்....
உனக்கொரு துன்பம் நேரிடும் போது உனக்கு முன்
அதனைத்  தாங்கி காத்திடுவாள்....


வலியில் நாம் துடித்திடும்போது தனக்கே வந்ததாய்
எண்ணி நம்மைத்தேற்றிடுவாள்.....
அவளை ஏமாற்றி காரியம் செய்தால் பூமிபூகம்பம்
போல் மனம் கொதித்தெழுவாள்....


மற்றவரை விட திறமைகுறைவு என இகழ்ந்திடும்போது
உன்னை உயர்த்திப்பேசி மதித்திடுவாள்....
உன் முயற்சியில் நீ வெற்றி கண்டிடும் போது
உன்னுடைய தாய் எனபெறுமை கொண்டிருந்தாள்....


கடவுள் கடவுள் என இருக்கும் தெய்வத்தை விட்டு
இல்லாத தெய்வத்திடம் பலர் செல்கிறோம்...
நம்முடன் இருந்து நம்மைக் காத்து நல்வழிப்படுத்தும்
தெய்வம் ஒருவர் யாரெனில்....
                 அவள் அன்னையாகிய தாய் மட்டுமே...


இருப்பவருக்கு மட்டுமே புரியும் இந்த கடவுளின் அருமை..
இல்லாதவருக்கோ கடவுள் இல்லா கோவில் அவர் இல்லம்..
இயன்றளவு அவளை மனம்‌ நோகாமல் வரம் கேட்போம்..
« Last Edit: August 23, 2021, 12:31:56 PM by Arasi »

Offline Dear COMRADE

  • Newbie
  • *
  • Posts: 22
  • Total likes: 174
  • Karma: +0/-0
  • Gender: Male
  • என் இனிய தனிமையே✍️
இயற்கையின் அழகை
ஈன்றெடுத்த சேயோடு
ஆத்தோரமாய் அமர்ந்து
தன் மடி என்னும்
அரியாசனம் தனில் அமர்த்தி
தாமரை இலை தனை கொண்டு
தன் இளவரசிக்காய்
குடை பிடித்து- ஓராயிரம்
கதைகள் சொல்லும்
அன்னையின் அன்புக்கு
ஈடு ஏது இவ்வுலகினில்........

பெண்ணாய் பிறந்த
பொன்னான தன் குழந்தை
கயவர்கள் கை தீண்டா - இக்
கலியுகம் தனை தாண்டி
புதுயுகம் படைத்திடும்
புதுமைப்பெண் ஆவாள் என்று
கனாத் துளிகளில்
தாயாய் அவள் கற்பனை.....

மறுபுறம்,
இணையில்லா அம்மாவின்
அரியாசனம் தனில் அமர்ந்து
தான் ஆளப்போகும்
அளப்பரிய இராச்சியங்களின்
அரசி நானே என்று
பிஞ்சி இளம் நெஞ்சினிலே
பிள்ளையாய் இவள் கற்பனை....

                                            அன்புடன் : Hunter

Offline Ninja

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 376
  • Total likes: 854
  • Karma: +0/-0
  • Fitter, healthier, happier
பருவத்தின் முதல் மழை நாளொன்றில்
உன் கை பற்றி மழை ரசித்து அமர்ந்திருக்கிறேன்.
குடையில்லா தினங்களின் மழையை விடவும் அழகாய் இருக்கிறது
மழை நனைத்த உன் பிஞ்சு விரல்கள்.

குளிருக்கு அடங்கும் சிறு பறவையாய்
என் முந்தானை போர்வையில்
முகம் மறைத்து சிரிக்கிறாய்,
மழையின் ரீங்காரத்தை விடவும்
பேரழகாய் இருக்கிறது 
உன் தெற்றுப்பல் சிரிப்பு

விழிகளிடையே வழியும் சிறு துளி மழை நீர்
உன் நாவை வந்தடைய வித்தை காட்டுகிறாய்,
உன்னில் என்னை காணும் இந்த காலம் தான் இப்படியே உறைந்துவிடாதா?

சின்னஞ் சிறிய உன் கூந்தல் முடிப்பில் காற்றின் அசைவில் எங்கிருந்தோ 
வந்து விழுகிறது ஓர் இறகு
மகுடம் ஏறியிருக்கும் இறகை உதிர்த்த பறவை
இப்பொழுது மகிழ்ந்திருக்கும் தானே?

சாரலில் நனையாதிருக்க உன் தலை மறைத்திட்ட இலை அறிந்திருக்குமா
இந்த குட்டி இளவரசிக்கு குடையாய் வாய்த்த பேறை?
உன் மென்பஞ்சு கைகளால்
நீயும் எனக்கு குடை விரிக்கிறாய்,
பெய்யென பெய்யும் பெருமழையும்
அடங்கிப் போகிறது
குடை விரிக்கும் உன் சிறுவிரல்களின் முன்.

மழைக்கு அழகு மண் வாசனை என முகம் சுருக்கி வாசனை நுகரும்
நீ மழையதிகாரம் எழுதுகிறாய்
மின்னல் வெட்டி சிரிக்கும்
உன் பேரன்பின் மழையில்
நான் மீண்டுமொரு முறை நனைந்து
மகளதிகாரம் எழுதுகிறேன்...
« Last Edit: August 24, 2021, 08:37:24 AM by Ninja »

Offline MoGiNi

நினைவு தெரிந்து
புன்னகையே
எனக்கு
பரிசாக தந்திருக்கிறாள்...

கைபட்டு
இல்லை
வாய்தொட்டு
சிதறிய சோற்றுப்
பருக்கைகளில்
அவள் வயிறு நிறைந்திருக்கிறாள்..

கன்னக் குளிகளில்
தங்கி வழியும்
நீர்த் திவலைகளை
அமிர்தமென
அருந்தி மகிழ்ந்திருக்கிறாள்..

என் மேனி தொடும்
மழைத் திவலைகளில்
அவள்
கரைந்ததை பார்த்திருக்கிறேன்..

என் முகத்தை தவிர
அந்தப் பௌர்ணமி நிலவை
அவள்
அன்னாந்து பார்த்து
அங்கலாய்த்ததை
நான் கேட்டதில்லை...

உலகின்
அத்தனை திருட்டுத் தனமும்
எனக்கு தெரிந்திருப்பதாய்
அலுத்துக் கொள்வாள்..

ஒற்றை முத்தத்துக்காய்
காலம் காலமாக
காத்திருப்பதாக
அவள் கண்கள்
பறைசாற்றும்...

எந்த
பூனையின் குட்டியோ
நாயின் குட்டியோ
என்னை
கொஞ்சிவிட கூடாதாம்
உரிமைப் போராட்டம்...

எனக்கு
என்னவெலாம் பிடிக்கும்
என்பதைவிட
அவழுக்கு பிடித்தது
எனக்கும்
பிடித்ததா எனும் தேடலை
அவளிடம் கண்டிருக்கிறேன்..

என்மீதான
அசைகளை
அவள் எனதாசைகளாக்கி
நிறைவேற்றி
பாரத்திருக்கிறேன்..
நானாகி நீயாகி
நானே நீயென
வாழும் ஒர் ஜீவனுக்காய்..

என்றும்
அவளாசையாகி
உன் மகள்
நான் எழுதும்
" அவளதிகாரம் " அம்மா.


Offline எஸ்கே

  • Hero Member
  • *
  • Posts: 609
  • Total likes: 1561
  • Karma: +0/-0
  • Gender: Male
  • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு


பத்து மாதம் என்னை சுமந்து!
ஈரேழு திங்கள் என்னை காத்து!
பெரும் வலி நோக என்னை பெற்று!
பூலோக பிறவி தந்தாய் எனக்கு நீயே!

ஈ எறும்பு என்னை தீண்டாமல்!!
உன் பசி பொறுத்து என் பசி தீர்த்து!!
உந்தன் கனவே நான்தான் என்றெண்ணி!!
உன் கனவை தொலைத்தாயே அம்மா!!

மழை வெயில் என்றும் பாராமல்!!!
எத்தனை துன்பங்களை நீ அனுபவித்து!!!
எனக்கு சந்தோஷம் மட்டுமே  நீ தந்தாய்!!!
என்னை காத்த என் அன்பு தேவதையே!!!

உந்தன் பாச மழையில் நான் நனையவே!!!!
உந்தன் அரவணைப்பில் நான் மகிழவே!!!!
எனக்காய் உன் வாழ்வை தியாகம் செய்யவே!!!!
பாச பிணைப்போடு என்றும் நாம் வாழ்வோம் !!!!



தொழிலாளர்களே இந்த சமூகத்தின் உண்மையான கடவுள் - பகத் சிங்

Offline Cholan



உன் மூச்சு என் சுவாசமானதடி
உன் பார்வை என் காட்சியானதடி
உன் வார்த்தை என் மொழியானதடி
உன் நடை என் வழியானதடி

உன் சிரிப்பு என் சந்தோசமானதடி
உன் உளறல் என் இசையானதடி
உன் சிணுங்கல் என் அழுகையானதடி
உன் கொஞ்சல் என் பூரிப்பானதடி

என்னுள் இருந்தாய் என்னவளானாயடி
வெளியே வந்தாய் பூரித்து போனேனடி
என்னவனின் நகலாய் நீயே வந்தாயடி
உன்னை கண்ட நொடி என்வாழ்வின் பிடி

உன்னை காண நொடி தவிப்பு
என் துளி கண்ணீர் இழப்பு
உன் மழலை சிரிப்பு
என் வாழ்வின் பொறுப்பு

என் செல்லமே என் உலகமே



« Last Edit: August 25, 2021, 03:31:37 PM by Nafraz »
           
நன்றி இப்படிக்கு இவன்.          நன்றி இப்படிக்கு இவன்.           நன்றி இப்படிக்கு இவன்.