Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 311  (Read 1912 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 311

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

Updated on 26 Oct 2020:

நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும்   அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


Offline தமிழினி

இந்த தனிமையும் ஓர் இனிமையாகவே தெரிந்தது...

ஆட்கள் அற்ற சுற்றுச்சூழல் .

யாழிசையையும் மிஞ்சிடும் ..

குயில்கள் தன் குரல் சத்தம்..
மாசில்லா தூய காற்று...

குறுகிய வரப்பு வழி பாதையில் உன் கரம் பிடித்து நடக்கின்ற நொடி ...

அப்படியே இக்கணம் உறைந்து போனாலும் பரவாயில்லை...


எதற்காக இப்படி கண் சிமிட்டாமல் என்னை பார்த்து கொண்டிருக்கிறாய் கள்வனே..


பேதை போல் பிதற்றுகிறேன் என்றா ??


மெளனம் கூட உன் பதில்தானே.. என் கண்கள் தன்னை கவனித்து பேசிட நீ நானம் கொள்ளும் போது..
எத்தனை அழகு என்னவனே உன் வெட்க்கம்...

மங்கையவள் என் நாணமே தோர்த்து போய்விடும் ..ஆண்மகன் உன் நாணம் கான்கயில்...

விடிந்த பிறகே தெரிந்தது.. அந்தி பொழுது கனவு மட்டும் அல்ல ..
உன் நாணமும் நான் கண்ட அறிய காட்சி என்று..
« Last Edit: June 05, 2023, 05:17:45 PM by தமிழினி »
என்றும் அன்புடன்...❤

    தமிழினி..❤

Offline VenMaThI

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 183
  • Total likes: 789
  • Karma: +0/-0
  • Gender: Female
  • hi i am Just New to this forum


❤️❤️❤️❤️❤️❤️❤️

உனக்கென நானும்
எனக்கென நீயும்
நொடியும் நீங்காமல்
நெடுந்தூரம் செல்வோம்
வழிப்பயணமாய் அல்ல
வாழ்க்கைப்பயணமாய்....

நம் கைகளின்
விரல்கள் அனைத்தும் நம் நிறைகளாய்
விரலின் இடுக்குகள் அனைத்தும் நம் குறைகளாய்
என் குறைகளை உன் நிறைகளை கொண்டு நிரப்ப
நிரம்பியது நம் குறைகள் மட்டுமல்ல
நம் வாழ்க்கையும் தான்...

கரடு முரடான பாதையும்
களிப்புடன் கடக்க ஆசை
என் கண்ணாளனே நீ என்
வழிகாட்டியாய் வருகையில்...


வானில் பறக்கும் பறவைபோல்
வாழ்க்கையில் உயர உயர பறக்க ஆசை
என் சிறகாய் என்றுமே நீ இருந்தால்...

வாழ்க்கை எனும் கடலில்
நம்பிக்கையை மட்டுமே நங்கூரமாய் விதைத்து
படகாய் மிதக்க ஆசை
மாலுமியாய் நீ இருந்தால்...

உயரப்பறக்கும் பறவையோ
சிறகொடிந்த பறவையோ
கரை சேரும் படகோ
கரை காணாப்படகோ
எதுவாகிலும் அதன் காரணகர்த்தா நீ மட்டுமே என்பதை நினைவில் கொள்...

உனக்கென நானும்
எனக்கென நீயும்
ஈருடல் ஓருயிராய்
என்றுமே ஒன்றாய் வாழ்க்கையை வெல்வோம்.....

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️.



Offline mandakasayam

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 368
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
அனைவருக்கும் முத்தான முதல் வணக்கங்களும்(RJ& DJ )  எனது முதல் பதிவும்.
அமைதியான பூஞ்சோலையில் உன்னுடன் பயணம் செய்கிறது இருவரின் நினைவுகள் மட்டும் பேரிரைச்சலுடன். உனது இன்முக சிரிப்பால் உதிர்ந்த சருகும் கூட உயிர்பெறும்
.
மாலை  நேரப்பொழுதில் ஆனந்தமாய் இவ்வுலகை ரசிக்க கரம் பிடித்தேன் உன்னை.
மென்னையின் உச்சம்!! .மெய் சிலிர்த்தேன்

உனது விரல்களில் உரசி வரும் வீணை ஓசையும் புன்னகை கலந்த இமைகளை கண்டேன் இயற்கையின் இசையில் ஒன்றானது.. 


தொலைதூரத்தை கடக்க என் மனம் தேடிய தோரணை உனது நாணம் !!
உன்னுடன்சேர்ந்து  தொடுவானத்தை தொட்டுபார்க்க ஆசை தொலைந்துவிட்டேன்!  மீள நினைத்தேன் இயலவில்லை??
 
 ஊதக்காற்று உன்னை தீண்ட உன் தேகசிலிர்ப்பும் நாவிதழ்களின் நடனத்தை கண்டு அந்த கார்மேகமும் கரைந்துவிடும்!!
இயற்கையின் இன்னொரு படைப்பு நீதானே!!!
இருதி வரை இருவரும் சேர்ந்தே பயணிப்போம் ...
அன்புடன் மண்டகசாயம்
« Last Edit: June 06, 2023, 08:32:38 AM by mandakasayam »

Offline HiNi

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 168
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
கார்மேகங்கள் சூழ
பூத்து குலுங்கும் சோலைவனத்தில்
அழகிய தருணத்தில்
உன் கரம் கோர்த்து நான்!!!

சிறகுகளை விரித்து பறந்து எங்கே செல்கிறோம்
என்று போகும் பாதை அறியவில்லை!!!

எங்கே வசிக்கிறோம் என்று நிகழ்காலமும் தெரியவில்லை

உன்னோடு இப்பயணம் எவ்வளவு நீளமானது என்றும் புரியவில்லை

மனதில் தோன்றும் வார்த்தைகளை தயக்கத்தில் கோர்க்க முடியவில்லை

உன் உடல் அசைவையும்
சிரிக்கும் அழகையும்
என் விழி பதிவு செய்வதை தடுக்க இயலவில்லை

சுற்றத்தை மறந்து உன்னை மட்டுமே ரசிப்பதை நிறுத்த முடியாமல் தத்தளிக்கிறது என் மனம்!!!

ஆனந்தத்தில் நடனம் ஆடும் நாணத்தை எங்கே கொண்டு ஒளித்து வைப்பேன்!!

தன்னவன் அருகில் இருக்கும் ஒவ்வொரு கணமும்
மயில் இறகு போல் பெண்மை மென்மையாகிறதோ!!!

மணமேடையில் கரம் பிடித்த இருவரும்
தொடர வேண்டும் பயணத்தை சவப்பெட்டியிலும்
என என்னவனிடம் சபதம் பெற்றதோ சொல்லாமலே என் கண்கள்!!!

இருவரின் அன்பு பரிமாற்றத்தைக் கண்டு
ஆனந்த கண்ணீர் துளிக்க
கண் திருஷ்டி கழிப்பதற்க்கு
கருமை போற்றிக் கொண்டதோ மேகங்கள்!!!😍
 


Offline MoGiNi

நினைவுகளைப் போல்
எதுவும் நம் உணர்வுகளை
புரட்டிப் போடுவதில்லை 

ஒர் சமவவெளியின்
சமாந்தரங்களாக
நாம் இருந்த பொழுதும்
நினைவுகள் ஏனோ
ஒர் பசுமைத் திடலில்
 ஜோடிப் பறவை என
கை கோர்த்து பறக்கிறது..


அதன் இறக்கைகளின்
மயிர்த்துளைகளில்
இன்னும் அந்த
மிதமான வெம்மையை
அது உணர்கின்றது..

வாழ்க்கை முழுமைக்குமான
பயணம் ஒன்றை
இந்த ஒற்றை உலாவில்
கடந்துவிட
உயிர் துடிக்கின்றது...

தூரத்துப் பச்சைகளென
திட்டுகளாக தெரிந்த
பசுமையை நோக்கி
தாகம் நிறைந்த
பறவையென பறந்து
கனக்கிறது மனது..

அடி வானத்தின்
செம்மைகளை
நீ என் வெம்மைகளோடு
உவமித்த நினைவுகளோடு
மனம் பயணிக்கின்றது..

கைரேகைக்குள்
கசிந்து நின்ற
வேர்வைத் துளிகளின்
வாசனையை
இன்னும் இந்தமனம்
யாசித்துக் கிடக்கிறது..

வா வந்துவிடு
உன்னோடு ஒரு
உலா வேண்டும்
அந்தி வானத்தை
ரசிக்க.. ருசிக்க...

Offline KS Saravanan

அன்பே நீ ஒரு அழகிய பூந்தோட்டம்
உனதருகில் இருந்து உனை காக்கும்
தோட்டக்காரனாய் நான்..!

ஆருயிரே உன்னை நிழலாக
பின் தொடர விரும்பவில்லை
உன் கை கோர்த்து உன்னுடன்
சேர்ந்து வரவே விரும்புகிறேன்..!

இன்பமே, உன்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்..!

ஈடில்லா உனது புன்னகையில்
குறிஞ்சி பூக்களும் தோற்றிடுமே..!

உனதழகில் தொலைந்திடுவேன் என தெரிந்தும்
மீண்டும் தொலைந்திட எண்ணுகிறேன்..!

ஊன்றுகோலாய் நீ இருக்க அன்பே
உலகம் சுற்றுவேன் உன்னுடன்..!

எப்பொழுதும் நாம் இணைந்திருக்க
இறைவனிடம் வேண்டுவேனடி..!

ஏட்டில் எழுதப்படாத காவியத்தை
நம் வாழ்நாளில் படைப்போமடி..!

ஐம்பொன்களினால் செய்த சிற்பமடி
நீ எனக்கு..!

ஒன்றல்ல இரண்டல்ல அன்பே உன்னுடன்
ஈரேழு ஜென்மங்கள் வாழ வேண்டுமடி..!

ஓராயிரம் ஆண்டுகளும் போதாதென
பிரம்மனிடம் சண்டையிட தோணுதடி..!

புரியாத காதலும் இல்லை
புரிந்தால் அதில் சுவராஸ்யம் இல்லை..!
புரியாத புதிராக என்றும் புதியவளாய் நீ எனக்கு
புரிந்தும் புரியாமலும் என்றும் நான் உனக்கு..!
« Last Edit: June 07, 2023, 03:05:51 PM by KS Saravanan »


Offline TiNu

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 643
  • Total likes: 1786
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum


நீல வானமோ கூரையாக..
செந்நிற பூமியோ தளமாக...
பொன்னிற புற்களோ கம்பளமாக
விரிந்து கிடைக்கும் உலகினில்...

சில்லென தீண்டும்.. குளிர் காற்றில்..
வண்டுகளின் ரீங்காரம் நடுவே..
ஆளில்லா கழனியின் வரப்புகளில்..
பூப்போன்ற உன்விரல் பற்றுகையில்..

மண்ணுடன் கலக்கும்..  இச்சரீரம் அல்லாது.. 
என்னுள் துவண்ட..  என் உயிர் துளிர்க்குதடி..
நீ முழுதாய்..  என்னருகில் நடக்கையில்.
இப்பிரபஞ்சமே எனை வாரியணைக்குதடி..

இந்த  நீல வானமும் வேண்டாம்..
இந்த வயல் வெளியும் வேண்டாம்...
இந்த செடி கொடிகளும் வேண்டாம்..
இந்த மென் காற்றும் வேண்டாம்..

எனை ஈன்ற அன்னையும் வேண்டாம்..
கையில் ஏந்திய தந்தையும் வேண்டாம்..
உடன் வளர்ந்த தமக்கையும் வேண்டாம்..
இவ்வுலகில் எதுவுக்கே வேண்டாம்...

நீ என்னை மெதுவாக தழுவையிலே..
இவை அனைத்தும் எனை சேருமடி..
உன் கண்களின் பாச பார்வை போதுமடி..
என் கண்ணே.. நீ மட்டும் வேண்டுமடி..
 
பட்டேன் தலையில் ஏதோ ஒரு வலி..
திடுக்கிட்டு படபடக்க  கண்திறந்தே....
கோவம் கொப்பளிக்க.. விவசாயி....
கவனும் கல்லுமாக என் எதிரே..

கண்ணும் கருத்துமாக.. கவனமுடன்..
நீர் இறைத்து... வளர்த்த பயிர்களடா...
கண்களை மூடிக்கொண்டு.. மடையா..
என் பயிர்களை நாசமா செய்கிறாயா...

வயல்காரன் வேகமா என்னை துரத்த..
என் தலையில்.. நான் கோர்த்து வைத்த..
கற்பனை கவிதைகள் எல்லாம்.. சிதற..
தலைதெறிக்க ஓடினேன்.. என மனை  நோக்கியே..