Author Topic: நடுநிசியிலெனது தேசம்...!  (Read 668 times)

Offline Yousuf

பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: நடுநிசியிலெனது தேசம்...!
« Reply #1 on: August 24, 2011, 05:26:11 PM »
இவை எல்லாம் இழந்தும்
இன்னுமேதும் இழக்க இல்லையா ..
கேட்டபடி இன்றும் கிளம்பிவிட்டதடா
கிரிஸ் பூதம் .....

தாயக கவிதைகள் கண்ணீரையே உறைய செய்யும் ... உவகை கொள்ள ஏதுமில்லை உணர்வு உள்ளவரை ....
யோசுப் இப்படியான கவிதைகள் நீங்க எங்கே இருந்து எடுத்து இங்கு பதிவு செய்தாலும் .. உங்கள் உணர்வினலாய் ஈழத்தவனாகவே காண்கிறேன் ....நன்றி உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்று தொடரட்டும் ...
;)