Author Topic: உப்பு  (Read 2460 times)

Offline kanmani

உப்பு
« on: October 29, 2012, 12:58:31 PM »
இந்த பதிவுல நாம் தெரிஞ்சுக்கப் போறது உப்பு பத்திதான்.  சாதாரண, முக்கியத்துவமில்லா எந்த விஷயத்தையும் 'உப்புசப்பு' இல்லாத மேட்டர்னு நாம அடிக்கடி சொல்வேன்.

உப்பில்லா பண்டம் குப்பையிலே அப்படினு கூட நம்ம முன்னோர் சொல்லியிருக்காங்க.

நம்மளோட உடம்புல 65 சதவீதம் நீர் இருக்குங்க. ஆனால் ஒவ்வொரு உறுப்புக்குத் தகுந்தமாதிரி அது வித்யாசப்படுதுங்க..

மூளை 70 சதவீத நீரும், சிறுநீரகம் 83 சதவீதமும், ஈரல் 70 சதவீதமும் இப்படி ஒவ்வொரு உறுப்பும் அதற்கு தகுந்த நீரைக் கொண்டுள்ளது.

இருங்க இருங்க மேட்டருக்கு வந்துட்டேன்.

நீர்ன்னு நான் சொன்னது முழுவதும் நீர் இல்லீங்க... அதுல உப்பும் கலந்து இருக்கு. (உங்க டூத் பேஸ்ட்ல உப்பு இருக்கா விளம்பரம் மாதிரி..!)

சரி.  எப்படி நம்ம உடம்புல உப்பு வந்தது?

('அடேய்.. இது கூட எங்களுக்குத் தெரியாதா? அப்படீங்கிறீங்களா?')

நாம உணவுல எடுத்துக்கிற உப்பினால் தான். அப்படீன்னு மட்டும் நீங்க நெனச்சா அதுதான் தப்பு.. ஆதியில முதல்முதல்ல உயிரினம் எங்க தோன்றியதுன்னு தெரியுமா?  கடல்ல தாங்க.. அதனால்தான் இன்னியவரைக்கும் பூமியில் இருக்கிற ஒவ்வொரு உயிரினத்தில் ஏதாவது ஒருவகையில் உப்பு இருக்கு.. அந்த உப்பு குறையாம இருக்கிறதுக்காக நாம் சாப்பாட்டுல உப்பு சேர்த்துக்கிடறோம்.

மாமிசம் சாப்பிடறவங்கள் குறைஞ்ச அளவே உப்பு எடுத்துட்டாப் போதும் ஏன்னா? அவங்க சாப்பிடற அந்த மாமிசத்துல நிறைய உப்பு இருக்கிறதாலதான்.


    பூமியில் வாழ்ற ஒவ்வொரு உயிருக்கும் உப்பு அதிகம் தேவை.
    அந்த காலத்துல எல்லாம் உப்பை சாமியா நெனச்சு கும்பிட்டாங்க.
    ஐரோப்பாவுல கூட உப்பை சம்பளமா குடுத்திருந்திருங்காங்க..
    salory அப்படிங்கற ஆங்கில சொல்லுக்கு லத்தீன் என்ன அர்த்தம் தெரியுங்களா?
    'உப்பு' ன்னு தான் அர்த்தமாம். அந்த காலத்துல பண்ட மாற்று முறையில கூட உப்பத்தான் பயன்படுத்தியிருக்காங்க.
    உப்பைக் களைக் கொல்லியாக்கூட பயன்படுத்தலாம்.. பத்துசதவீத உப்புக்கரைசல் களைகளை கொன்னு போட்டுடும்.
    நம்மூரு கடல்நீரில் 6 சதவீதம் உப்பு இருக்குங்க.
    அதேமாதிரி தாவரங்கள் உடலில் 70 சதவீதம் நீரும், இலைகளில் 50 முதல் 60 சதவீதம் நீரும் இருங்குங்க.
    ஆனால் தாவரங்களுக்கு உப்பு அவ்வளவா சரிபட்டு வராதுங்க. 5 சதவீதம் உப்பு இருக்கிற மண்ணுல செடிங்க,புல், பூண்டு எதுவும் வளரவே வளராது.
    உப்புல எந்தவிதமான தாதுபொருளும் இல்லை.  ஆனால் இது ஒரு மறைமுகமான உரம். இது மண்ணுல இருக்கிற பொட்டாஷ், அப்புறம் தாவரங்களுக்கு தேவையான ஊட்டத்தை பிரிச்சு கொடுக்க உதவிசெய்யுது.
    நம்ம இலங்கையில்  ஒவ்வொரு  தென்னை மரத்திற்கு 500 கிராம் உப்பு போடறாங்கன்னு பார்த்துங்களேன்...!!



என்னைக்கும் உப்பு உப்பு தாங்க.. அளவோட இருக்கிறவரைக்கும்..!!