FTC Forum

தமிழ்ப் பூங்கா => கதைகள் => Topic started by: SarithaN on April 13, 2017, 03:36:14 AM

Title: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: SarithaN on April 13, 2017, 03:36:14 AM
தோழியுடன் தொலைபேசியில் 04 

எமது இருப்பிடங்களிடையே..... இடைவெளி பத்து கட்டைதான்..... 
இருவரது இல்லங்களின் திறப்பும் இருவரிடமும் உண்டு.....

செவ்வந்தியிடம் சென்றேன்.....
இன்னமும் நல்லிரவும் ஆகவில்லை.....
திறப்பு இருந்தும் கதவை திறக்கவில்லை.....
செவ்வந்தி படுக்கை ஆடையில் இருக்க கூடும்.....

இரவு உணவுக்கு பின்னர் அத்தியாவசியம்
ஏற்பட்டாலன்றி சந்திப்பதில்லை.....
கைப்பிள்ளையும் கட்டத்துரையும் இட்ட கோடுபோலல்ல.....
செவ்வந்தி நிதிலன் உறவு.....

கதவை தட்டினேன்.....
பலமாகவுமில்லை.....  பதுமையாகவுமில்லை.....
வலிமை இழந்த குரல் ஒலி..... யாரென்றது.....
வழக்கம் போலவே சோகங்கள் நெஞ்சத்தை
நிறைத்தாலும்.....
சிறு சிறு சீண்டலில் ஒன்றுதான்.....   

மௌனமாய் நின்று மறுபடி தட்டினேன்.....
நினைத்தபடி பாரதிகண்ட புதுமைப்பெண்ணின்
தொலைபேசி அழைக்கிறது.....
என் தொலைபேசியும் ஒலிக்க.....

சட்டென திறந்தாள் கதவை.....
திறந்தவளிடம் எழுந்த ஒலியை..... சொல்ல வார்த்தை இல்லை..... 
என்னால் உணரமுடிந்தது.....

முதல் முறையாக.....
தாவி அணைத்தாள்.....
செய்வதறியாது நின்றேன்..... பாவம் பேதை .....

கனமே இல்லா மெய்.....
செவ்வந்தியின் அன்புக்குண்டான கனம்...
மெய்யில் இல்லை..... காகிதம் போலிருந்தாள்..... 

அணைத்தமேனி வழுவாமல்.....
வார்த்தைக்கு இடமின்றி.....
மௌனத்தின் துணையோடு.....
இணையில்லா கண்ணீரால் நீராட்டிணாள்.....

ஐந்து ஆண்டுகளாய் தேக்கிவைத்த மரண சமர்ப்பணம்.....
அழட்டுமே வலிகள் மறைய.....
இடை ஒடிந்திடாது... இடது கையால்  தாங்கி.....
வலக்கரத்தால் பிரடியை தடவிக் கொடுத்தேன்.....

விழிகளின் பிரவாகம் ஓய்வதாய் இல்லை.....
அழுதே மாள்கிறாள்.....
அவள் கொண்ட அன்பை அளவிட விஞ்ஞானம் போதாது.....
என் இதயம் இரும்பென இன்னமும் எப்படி நடிப்பது.....

வேறுவழியில்லை.....
இனியும் அழுதால் மயங்கிடுவாள்.....

அவள் இரு கன்னங்களையும்.....
என் இரு உள்ளங்கைகளால் தாங்கி.....
செவ்வந்தியின் வதனத்தை.....
என் விழிகளைக்காண உயர்த்தினேன்.....

இரும்பு இதயம் கண்களில் கசிந்ததை.....
கண்களால் கண்டாள்.....

விரல்கள் பின்ன அணைத்திருந்த பிடியை விலக்கி.....
என் விழியோரம் தன் விரல்கொண்டு துடைத்தாள்.....
விரல் பதித்தாள் செவ்வந்தி.....

செவ்வந்தியின் வீங்கிய வதனத்தில்.....
சிவந்த கண்கள்.....
வலிகள் கடந்தோடிய சுவடுகள் தாங்கிய கன்னங்கள்.....

எதுவுமே...
என் மார்பில் முகம் புதைந்திருந்தவரை தெரியவில்லை.....
விக்கி விக்கி அழுகையில் உணர்ந்திட முடிந்தது.....

முகத்தை கழுவி.....
ஆடையை மாற்றலாமே என்றேன்.....
எப்போது இதை செல்வேனென காத்திருந்தாளோ.....

கணம் மாறுமுன் கடந்துவிட்டாள்.....
அரைமணிப் பொழுதுகடந்து மீண்டும் வந்தாள்.....

கண்ணீரை நிறுத்தி விட்டேன்.....
எப்படி சிரிக்க வைப்பது.....
வழி தெரியவில்லை.....
இதுவரை அவள் எதுவுமே பேசவில்லை.....
நாவன்மை இழந்தாளோ.....
பேசிப்பார்க்கலாம்.....

சாப்பிட்டாயா...?
என்ன சாப்பிட்டாய் என்றேன்.....
பொய்சொல்லாள்..... பதில் இல்லை.....
எனக்கு பசிக்கிறது ஏதும் உண்டா என்றேன்.....

விசம் இருக்கு என்றாள்..... பழைய கோவம்.....
நல்லதுதான் தா என்றேன்.....

எத்தனை காலம் காத்திருந்தாளோ.....
தலையில் தானே அடித்துக்கொண்டாள்.....
எனக்கு வலித்தது.....
சரி விடு விடு... விடு என்றேன்.....

பசிக்கிறது.....
வெளியில் இருந்து ஏதும் வாங்கலாமா.....
மறுத்தாள்.....
என்ன வேணும் என்றாள்.....

இது உன் வீடா.....
இல்லை உணவு விடுதியா என்றேன்.....
போடா லூசு என்றவள்.....

சிரித்தாள்..... சிரித்தாள்..... சிரித்தேன்.....
எப்போதாச்சும்.....
போடா... லூசு... பைத்தியம்... முட்டாளென...
சிறு சிறு வார்த்தைகள் சொல்வாள்.....
அப்போது எனக்கு புரியும்.....
நாணம் அவளை ஆட்கொண்டுள்ளதென.....

உணவகம்தான்.....
சரி  சொல்லன் என்ன வேணும் என்றாள்..... 
சிரித்தேன்.............................
சிரிக்கின்றேன்.............................
சொன்னேன் உன் கண்களும் மூக்கும் சிந்திய
அன்பின் ஈரங்கள் ஆடையை நனைத்தது.....
இதயத்தையும் உலுக்கியது.....

இப்போது மடிந்தால்...
மகிழ்ந்தே மாழ்வேன் என்பதுபோல
ஒரு கோரமான நோக்கு.....
சிந்தையை திருப்பியாகணும்.....
சிரிக்கச் செய்யும் முயற்சிகள் கனக்கவே செய்கிறது.....

அப்பாவுக்கு அனுப்ப வாங்கிய சட்டை இருந்தால்.....
கொடு என்றேன்.....
வெட்க்கம் கொண்டு அறையில் புகுந்தவள்.....
வருவதாய் இல்லை.....
என் சட்டையை நனைத்த நாணம்.....

சிறிது தாமதமாய் எட்டிப்பார்த்தாள்.....
அப்பாவுக்கு வாங்கியதை அனுப்பி விட்டேன்.....
வேண்டும் என்றால் இதை போட்டுக்க என்றவள்.....
எனக்கென வாங்கி வைத்திருந்ததை..... கொடுத்தாள்.....
போட....... லூச........ என்றாள் மெதுவாய்..... சிரித்தேன்..... 
வெட்க்கத்தோடு பார்க்கிறாள்.....  


பசிக்குது என்றேன்.....
சரி  சொல்லுங்க என்ன வேணும்.....
பிடித்ததை தருகிறேன் என்றாள்.....

என்ன வேணும் என்றாலுமா.....
ம்ம்ம்ம்ம் என்கிறாள்.....
முத்தம் கிடைக்குமா.....

திரையுலகில் கற்பனை பெருத்து
கனவுலகம் செல்வதுபோல் செல்லவில்லை.....
தப்பா யோசிக்காதீங்க.....

பழைய சாப்பாடு குளிர்ப் பெட்டியில் தூங்குகிறது.....
ஆப்பு இருப்பதை அறியவில்லை.....

எதுவானாலும் பரவாயில்லை என்றேன்.....

இல்லை இல்லை.....
விரும்பி கேட்பதை தருகின்றேன் சொல் என்றாள்.....
தோசை என்றேன்.....

தங்கச் சில்லறைகள் வெண்கலத்தில் விழுந்தாற் போல் ஒலியெழ..... 
நெடு நேரம் சிரித்தாள்.....
மூச்சு வாங்கும்வரை சிரித்தாள்..... மகிழ்ந்தேன்.....
நான் எதை கேட்பேனென உணர்ந்தவள் அல்லவா.....

நள்ளிரவை நெருங்கையில் தோசை கேட்டதற்கு தண்டனை.....
மூன்று நாள் முன்னையது.....
நான் உண்ண ஆயத்தம்.....
அவள் தருவதாய் இல்லை.....
உடனே செய்தாள்.....
கூடவே இருந்தேன்.....
இன்றாவது என் முன் அவள்..... 
இரண்டு தோசை உண்ணட்டுமே.....
எனக்கல்ல.....
செவ்வந்திக்கு தான் தோசை அதிகம் பிடிக்கும்.....


சாப்பிடும் போது பேசக்கூடாது.....
மூத்தோர் முன்னறிந்த விஞ்ஞானம்.....
உண்டபின் தொடரும்...............
தோழியுடன் தொலைபேசியில் 05..........
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: MyNa on April 13, 2017, 10:15:30 AM
Unmaiyaana anbu konda rendu nenjangalukidaye evalavu periya mothalum maraiyatha kavalaiyum adangatha kovamum irunthalume orutharuku oruthar arugil irukarapo elame sooriyana kanda pani pola maranjidum nu azhaga solirukinga. Unmaiya anbu iruntha kovam kooda azhukaiya than velivarum..  kaaranam namma kovapadurathu veli aatkalukita ilaiye.. uyirin inoru paathikita thana.. valikathan seiyum kovapatalume.. oodaluku pin kaathal nu summava sonanga.. romba arumaiyana kathai sarithan.. adutha paagathukum aavalaodu kaathurukiren  :)
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: ChuMMa on April 13, 2017, 11:29:13 AM
என்ன கதை எழுதுகிறீர் தோழரே! ??

என் சிந்தை முழுவதும் அவர்கள்  வீட்டில் அல்லவா இருக்கிறது

நாணம், கோவம், அன்பு , வார்த்தை ஜாலம்

மனம் கனக்கிறது படிக்கையில் ,

என்ன ஜீவன் உடன் பயணிக்கிறது, காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயம் வரை


வாழ்த்துக்கள் தோழா


Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: VipurThi on April 13, 2017, 05:52:39 PM
Sari na:) adutha paguthiku waiting aarvamay:)
Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: SarithaN on April 14, 2017, 05:54:58 PM
வணக்கம் தோழி மைனா.....

கதையினை பூரணமாய் உள்வாங்கிய
கருத்துரை..... மிக்க மகிழ்ச்சி.....
உங்கள் கருத்துரை எனக்கே சிலவற்றை
சொல்லி தருகின்றது.....
கதையில் மேன்மைகள் சிறப்புக்குள் உண்டெனில்
எல்லாம் கடவுளுக்கே சமர்ப்பணம்.....

adutha paagathukum aavalaodu kaathurukiren
கவனத்தில் கொண்டுள்ளேன் தோழி.....
தோழனாய்... சகோதரனாய் நட்போடு.....
மிக்க மகிழ்ச்சி... நன்றிகள்...



Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: SarithaN on April 14, 2017, 06:02:02 PM
சும்மா சகோ.....

என்ன கதை எழுதுகிறீர் தோழரே! ??
இப்படி விழிப்பதை தவிருங்கள்.....

சகோதரா என்னும் உரிமையான வார்த்தையில்
மட்டுமே எனக்கு மகிழ்ச்சி.....

நீங்கள் சொல்லிய
மிக மிக பெரிய வார்த்தைகளுக்கு எனது எழுத்துக்கள்
பொருத்தமில்லாதவை.....
வாழ்வின் கடைசி காலங்கள் வேண்டுமானால் பெருந்தி
நின்றிட உழைப்பேன்..... மிக்க நன்றி சகோதரா.....

காத்திருக்கிறேன் அடுத்த அத்தியாயம் வரை
இதை நான் அவதானித்துள்ளேன்.....

எனக்காக செலவிடும் காலங்களுக்கு நன்றிகள்.....

Title: Re: தோழியுடன் தொலைபேசியில் 04
Post by: SarithaN on April 14, 2017, 06:12:01 PM
வணக்கம் விபூமா.....

கதைகளை... கவிதைகளை... நீ
ஆர்வமாய் படிப்பதும்.....
வாழ்த்துவதும்.....
பிறரை உய்விக்கும் செயல்.....

நான் எழுதுவதற்கு முன்னர்
பிறரை வாழ்த்துவதில் பெற்றிட்ட
மகிழ்ச்சியே...
கடவுள் எனக்கு அருளிய ஆசி.....

எனது எழுத்துக்கள் அழகென்றால்
அதுவே கடவுளின் ஆசி.....

தொடர்ந்து எழுது வாழ்த்துகின்றேன்..... நன்றி