FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: HBK on July 22, 2017, 01:08:06 PM

Title: காதல்
Post by: HBK on July 22, 2017, 01:08:06 PM
எத்தனை முறை கேட்டிருப்பேன் என்னை நேசிக்கிறாயா என்று…. ஒரு முறை கூட சொன்னதில்லை உன் நேசத்தை… காலத்தின் சூறாவளி நம்மை எதிரெதிரே எறிந்தது…. இரண்டு மகாமகம் கழித்து இரவு நேர ரயில் பயணத்தில் எதிர்பாராமல் சந்தித்தோம்…. நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது… சிலர் வாழ்க்கையில் விளையாட்டு வினையாகும்… நம் வாழ்க்கையில் விதியே விளையாடியது… நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை…. ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது… இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று விடை கிடைத்தது… நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து உணர வைத்தது…..

Title: Re: காதல்
Post by: VipurThi on July 22, 2017, 01:34:12 PM
Welcome HBK ;D rmba azhagana kavithai :D vazhthukal :D
Title: Re: காதல்
Post by: JeGaTisH on July 22, 2017, 03:27:34 PM
super na ...enakku mikavum pidithadhu  :D :D :D :D

(ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின் ஓசைதான் அதிகமாய் கேட்டது)
Title: Re: காதல்
Post by: DeepaLi on July 22, 2017, 04:09:11 PM
Hi hbk.. ungalku nala pesa dha theirum nenchen haha paravala edho onuthula vilundhu elundhu dha vanthu irukinga... nice lines..

நேரெதிரே இருந்தும் கூட மவுனம் மட்டுமே நம் பாஷையானது…   
indha lines elarkum nadakara unmai dhane hmm keep wrtng:)
Title: Re: காதல்
Post by: HBK on July 22, 2017, 08:48:44 PM
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
 அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்
 உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
 அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்
Title: Re: காதல்
Post by: ரித்திகா on July 31, 2017, 10:28:46 AM
வணக்கம் HBK..

அழகான கவிதை சகோ ...
வரிகள் அருமை ..

''  நள்ளிரவு கடந்தும் கண்கள் மூடவில்லை….
ரயிலின் சப்தத்தைவிட உன் இதயத்துடிப்பின்
ஓசைதான் அதிகமாய் கேட்டது…
 இது நாள் வரை புரியாமல் இருந்த புதிருக்கு அன்று
விடை கிடைத்தது…
நீயும் என்னை காதலித்ததை காலம் கடந்து
உணர வைத்தது…..''

தொடர்ந்து எழுதுங்கள் ...
வாழ்த்துக்கள் சகோ ...

நன்றி ...
Title: Re: காதல்
Post by: HBK on July 31, 2017, 07:21:01 PM
MAGILCHI RITHIKA