FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: MysteRy on December 16, 2017, 11:04:35 PM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: MysteRy on December 16, 2017, 11:04:35 PM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 168
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக    வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/168.jpg)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: thamilan on December 17, 2017, 02:11:35 PM
இறைவன் படைத்திட்டான் உலகை
அதை அழகு படுத்தியது இயற்கை
மரம் செடி கொடிகள் 
ஆறு ஏரி அருவி மலைகள் என
உலகை அழகு படுத்திட்டான் இறைவன்

ஒன்றில் இருந்து இன்னொன்றை
மனிதனது தேவைக்கேற்ப உருவாக்கினான்
மரத்தை படைத்தான் அதன் மூலம்
காற்றையும் மழையையும்
அந்த மரத்தில் இருத்த்து
மனிதன் பசியாற கனிகளையும் படைத்திட்டான்

மேகத்தைப் படைத்து அதன் மூலம்
மழையை பொழிவித்தான்
அந்த மழை நீர் கொண்டு
பயிர்களை செழிவித்தான்

நம்மை பெற்றெடுத்து அன்னையே என்றாலும்
நாம் தவழ்ந்தது
இயற்கை அன்னையின் மடியில் அல்லவா
அன்னை நமக்கு சில வயது வரை
பால் ஊற்றி வளர்த்தாள்-
 அதன் பிறகு
நம்மை வளர்த்தது இயற்கை அன்னை அல்லவா

வளர்ந்த மனிதன்
தன தேவைகளுக்காக தன சுயநலத்துக்காக
இயற்கையை அழிக்கத் தொடங்கினான்
தான் பால் குடித்த மார்பகத்தையே அறுத்து
அதன் மேல்
கட்டிடங்கள் கட்டினான்

ஆறுகள் குளங்கள் எல்லாம்
கட்டிடங்களாக மாறின
தொழிற்சாலைகள் மாசு நிறைந்த புகையை கக்கி
சுவாசிக்கும் காற்றை சூறையாடின

அணு உலைகள்  இரசாயன தொழிற்சாலைகள்
என ஆலைகளின் வெப்ப அதிகரிப்பினால்
விழுந்தது ஓசோன் படலத்தில் ஓட்டை
இந்த ஓட்டையால்
வெப்ப அதிகரிப்பு அதிகமாகி
மரங்கள் வயல்கள் எல்லாம் காய்ந்து
உலகில் வறுமையும் பஞ்சமும்
தலை விரித்தாடுகிறது

குளங்கள் ஏரிகள் ஆறுகள் எல்லாம்
கட்டிடங்களாக மாறி
மழை நீர் தேங்க இடமில்லாமல்   
ஊரெல்லாம் வெள்ளம் பெருக்கெடுக்கிறது

மரங்களை வெட்டினான் மலைகளை அழித்தான்
மழை நீர் இன்றி
வானம் பார்த்து வாழ்வதே வாழ்க்கையானது 
உழவர்கள் வாழ்வு
கிணறுகளும் இருக்கும் ஒரு சில ஆறுகளும்
வற்றி போய் குடிநீருக்கே திண்டாடும்
மனித இனம் இன்று

இயற்கையை அழிக்கும் மனிதா
உனக்கு நீயே சவக்குழி தோண்டுவதை
நீ அறியாயோ
உலகம் தானே அழியாது
இயற்கையை அழிப்பதனால்
உலகை நீயே அழிகிறாய் 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: NiYa on December 17, 2017, 04:11:39 PM
இயற்கை என்னும் மங்கையே
உன்   அமங்கல கோலத்திற்கு கரணம் என்னவோ
உன் எழில்கோலம் 
கலைய காரணம் யாரோ

பெண் என்பவள் வசப்படுபவள்
அதேபோல் வசப்படுத்துபவளும் கூட 
இயற்கை  என்னும் மங்கைக்கும்
இது விதிவிலக்கா என்ன

அழகான எழில்கோலம் கொண்டு
மானிடர் எம்மை வசப்படுத்தினாய்
மனித செயற்பாட்டால்  இப்போது
அவன் உன்னை வசப்படுத்திவிட்டான் 
இருந்தாலும் அவ்வப்போது உன்கோபத்தை
காட்டியபடியே இருக்கிறாய் நீ

மண்ணில் பிறந்த எல்லா
பெண்களும்  தினம் தினம்
எதோ ஒரு சவாலை
எதிர்கொள்ளத்தான்  செய்கிறார்கள்

பெண் அடிமைத்தனம்  பெண் துஷ்பிரயோகம்
இன்னும் பல இருக்கத்தான் செய்கிறது
இதுபோல் இயற்கை அன்னை கூட
இதற்கு விதிவிலக்கு அல்ல

நகரமயமாக்கம் காடழிப்பு என்ற பேரில்
அவள் தினம் தினம் துகில் உரியப்படுகிறாள்
தொழில்சாலை மாசுவாயுக்கள் அவளது
அழகை அணுஅணுவாய் உருகுலைகின்றது

எப்போதும் பெண் அவள் பொறுமை காட்டவும்மாட்டாள்
அவ்வப்போது பொங்கி அழித்து கொண்டுதான் இருக்கிறாள்
அழிவு நேர்ந்த பின் மட்டும்
பூமி தாயே உன் கோபம் என்னவோ - என
புலம்பாமல் இன்றே சீர்செய்வோம்

இயற்கை எமது தாய் என்ற உணர்வுடனே
அதை பேணுவோம்
அவள் எழில் கோலத்தில் எம்மை
வசப்படுத்துவோம்
 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: JeGaTisH on December 18, 2017, 01:56:21 AM
அழகிய சூழலை இறைவன் வரமாய் கொடுத்தான்
மானிட சமூகமோ  அதை மாசு படுத்துகிறது

ஆறறிவு கொடுத்தும் மனிதன் யோசிக்க மறந்துவிட்டான்
முன்னேற்றம் என நினைத்து  பின்னோக்கி செல்கின்றான்

மரங்களை அழித்து  பலமாடி  கட்டிடம்கள்
பூமி தாங்கும் பாரத்தை விட சமநிலை அற்ற மாடி வீடுகள்
சமநிலைக்கு பூமி அசைந்தால்  அழிவு மனிதனுக்கே

மனிதன் தொழில்நுட்பதில் விண்ணை தொட்டாலும்
அவன் உண்ணும் உணவு பூமியில் மட்டுமே உருவாகும் .

அண்டத்தில் மனிதர் வாழும் ஒரே இடம் பூமி
அதை அழித்து எங்கே வீடு கட்ட பாக்கிறாய்

குடிக்கும் தண்ணீருக்கு பணம் கொடுத்து குடிக்கிறாய்
கொட்டும் மழை உனக்காக கொடுகிறது என தெரியாமல்

வீசும் இயற்கை  காற்றை  விட்டுவிட்டு
செயற்கை  காற்றை  பணம் கொடுத்து சுவாசிக்கிறான்.

அடிக்கும் மின்னலை யாராலும் பிடித்திட முடியாது
ஓடும் நீருக்கு அணை கட்டிட முடியாது
இயற்கையை அழித்து இன்புற நினைத்தால் இறப்பு நிச்சயம்.
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: MaSha on December 18, 2017, 12:16:37 PM
இயற்கை அன்னையே
ஏன் கோபம் உன்
குழந்தைகளாம் மனிதர் எம்மேலே
உன்னை அன்னையாகத் தானே
நாங்கள் பூஜிக்கிறோம்

ஆனால் நீயோ.......
கடல் அன்னையான நீ
கடற்கரையில் குழந்தைகள் கட்டிய
மணல் வீடுகளைக் கூட
காலால் உதைக்க மனம் வராதே
ஆனால் நீயோ
சுனாமி என்ற பெயரில்
கையில் கிடைத்ததெல்லாம்
வாரி வாயில் போட்டுக் கொள்ளும்
பிஞ்சிக் குழந்தைகளையும் கூட
வாரி .... சீ
நீயும் ஒரு தாயா
உன் ஈரமெல்லாம்
வெறும் வெளிவேஷம் தான்

எங்கள் சுவாசக்காற்றாய்
மனிதரை உயிர் வாழ வைக்கும் நீயோ
புயல் காற்றாய் மாறி
மனித குலத்தையே சூறையாடுவதும் ஏன்

எல்லாம் மனிதர்கள் செய்வதின் பலன் தான்
எமக்குப் புரிகிறது
ஒரு சில பணம்படைத்தவர்களும் பலம்படைத்தவர்களும்
செய்யும் தவறுகளுக்காக
ஒன்றும் அறியா பாமர மக்களையும்
பழிவாங்குவது சரி தானா

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல
என்று பொறுமைக்கு உதாரணமாக
உன்னை சொன்ன வள்ளுவன் கூற்று பொய்யாகலாமா
நீ உண்மையில் அன்னையென்றால்
பிள்ளைகள் பிழைகளை பொறுத்தது
அன்பு காட்டு
உலகத்தை அழிவில் இருந்து காப்பாற்று
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: BlazinG BeautY on December 18, 2017, 09:05:29 PM
ஒன்பது கோலங்களில்
அழகிய மிக அழகியாய் பிறந்தேன்
இறைவன் படைப்பில் அதிசயமாய்
பெருமை கொண்டேன்..

தவழ்ந்தேன் மகிழ்ந்தேன்
பல பல கணங்களாய்
அப்போது இன்பமானேன்
இப்போது காணாமல் போனது

என் அழகை வதைக்கிறார்கள்
துடிக்கிறேன் வழிகளில்
அழுகிறேன் அழுகிறேன்
என் கதறல் கேட்கிறதா ..

மானிடர்கள்  தெரிந்தே
செய்யும் செயலால்   
என்னை அழித்தால்
அவர்களும் அழிவார்கள் என்று..
புரியாமல் சிரிக்கிறார்கள் ..

வெறுக்கிறேன் வெறுக்கிறேன்
அணுகுண்டு ஆயுதங்களை!
தீயவர்களால் நல்லவர்களும்
அழிகிறார்கள் அழிகிறார்கள்!

தன் வினை தன்னை சுடும்
இயற்கையும் மனித இனமும்
ஒன்றே !
அதை உணர்தல் இருவருக்கும்
வாழ்வு வரும் !
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: Ms.SaraN on December 19, 2017, 01:42:37 AM
அமைதிக்கே அமைதி சேர்க்கும் என்  பூமாதேவியே
உன் அழகை பறித்தெடுத்தது யாரோ
உன்னில் துள்ளி குதித்து திரியும்
உன் அழகு  குழந்தைகள் எங்கே தாயே

பொருளுக்கும் பணத்திற்கும் உன்னை சிதைத்தார்கள்
அழகென்றால் அதுக்கு மறு மொழியாய் இருந்த உன்னை
சூறையாடியது இந்த மானிடர் கூட்டம்
உனக்கு நடந்ததும் ஒரு கற்பழிப்பே..
எங்குதான் வாழ விடுவார்களோ நம் பெண் இனத்தை

அருவியாய் கொட்டி கொண்டு இருக்கும்
உன் கண்ணீர் கூட ஆனந்தமாய் எண்ணுகிறார்கள்
உன் துயரத்தை  துடைக்க நாதி அற்று நீ அங்கே
உன் கண்ணீரை பங்கு போட்டு
வாழும் மனித இனம் இங்கே

இதுவும் கடந்து  போகும் என்று நினைத்து
மனித குலத்திற்கு உன் கவலை மறைத்து
மழையாய் பூமிக்கு வரம் கொடுத்தாய்
செழிப்பாக உன் பிள்ளைகளை வளர்த்தாய் மரமாக
ஆனாலும் உன் அன்பை ஏற்க மறந்தது இவ்வுலகம்

எவ்வளவுதான்  நீயும் பொறுமை காப்பாய்

பொங்கி எழுந்தாய் கடல் அலைகளாக
நெஞ்சம் வெடித்து கதறினாய் பூகம்பங்களாக
வெறி பிடித்து ஆடினாய் சூறாவழியாக
உன் அக்னி விழிகள் வழிந்தோடியது எரிமலையாக
நீ கொடுத்த அனைத்தையும் நீயே பறித்தெடுத்துவிட்டாய்

போதும் தாயே உன் கோபங்கள்
மன்னித்து விடு எம் மானிடர்களை
உன் அரவணைப்புக்காக  ஏங்கி நிற்கும்
உன் குழந்தையில் ஒருத்தியான
என் வேண்டுகோளை ஏற்றுக்கொள்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: VipurThi on December 20, 2017, 05:18:19 PM
எழிலரசி இவள்
இயற்கையென பெயர் கொண்டவள்
எண்ணிலடங்கா உயிர்களை
தாங்கிடும் தாயவள்

கண் செல்லும் இடமெல்லாம்
காட்சியாய் விரிபவள்
இன்று கண் கலங்கி
பேய் மழையாய்
கண்ணீருடன் கதறுகிறாள்

அன்னமிடும் புவனம் இவள்
வளமான மண்ணெல்லாம்
அகழ்ந்தெடுக்கும் பாவிகளால்
சீர் குலைந்தவள் இவளல்ல
நாமென்பதை உணரவில்லையே

கானகம் தான் வான் பொழிந்து
காய் நெல்லின் காரணமதை
கண்டறியா பேதைகளின்
காடழிக்கும் போதை தீர்க்க
சீற்றம் கொண்டாள் ஏனெனில்
இவளுமோர் அன்னையல்லவோ

ஆர்ப்பரிக்கும் கடலலையாய்
கொஞ்சி தினம் சிரிப்பவள்
வேங்கையென வேகம் கொண்டாள்
கோபமதை தீர்த்துக் கொண்டாள்

பறிமுதல்களின் பாவங்களால்
ஏமாற்றியவர் ஏழடுக்கு எல்லாம்
அரை நொடியில் அஸ்தமனமாக
பூமித்தாயிவள் பூமியதிர்சியாய்
வந்தாளே

அழிப்பதெல்லாம் இலகு
ஆக்குவதெல்லாம் கடினம்
சொல்லில் உணர்த்தாமல்
செயலில் காட்டிவிட்டாள்


தெளிந்தவர் பாதுகாப்பீர்
தெளியாதவர்களுக்காய்
மீண்டும் வருவாள்...


                               **விபு**
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 168
Post by: joker on December 22, 2017, 08:58:05 PM
என் வீட்டு பக்கத்தில் இருந்தது
மரம் இரண்டு
பேர் தெரியா மரம் ஒன்று
மாமரம் என்ற பேர் கொண்ட மற்றொன்று

யார் விதைத்த விதையில் மலர்ந்ததென்று
யாருக்கும் அறியேன்

வெயிலுக்கு இதமாய் நிழல் தரும் மரம்
பள்ளி சென்று திரும்புகையில்  யாரையோ
தொலைத்து தேடும் குயிலின் ஓசை
எனக்கு ஒரு வரவேற்பு கவிதை

பேர் தெரியா மரத்தில் இருந்தது
என் தந்தை கட்டி தந்த ஊஞ்சல்
தோழர்களுடன் கொஞ்சி அதில் விளையாடிய
நாட்கள் இன்னும் நிற்காமல் ஆடுகிறது
என் நெஞ்சில்

அதனால் அதற்கு பெயர் வைத்தேன்  ஊஞ்சல்மரம்,
இதுவும் காய் காய்க்கும், பழுக்கும் , தரையில் விழுந்து
அழுகும் தீண்டுவார் யாருமிலர்

பக்கத்தில் மாமரம் , இலை வேண்டி பலர் , காய் வேண்டி பலர்
கனி வேண்டி பலர் காத்திருக்கலாயினர்

ஓர் மாலை தொலைக்காட்சியில் எல்லை தாண்டியதாய்
சுடபட்ட மீனவர் செய்தி

ஆனால் இந்த மாமரம் தன் கிளையை பரப்பிஇருந்தது
ஊஞ்சல் மரத்தின் மேல்.  அதற்காய்  சண்டையிட்டதாய்
நினைவில்லை

இரவில் சூறாவளி காற்று வீசியது பயந்து அம்மாவின்
அரவணைப்பில் உறங்கி காலையில் கண் விழித்து பார்க்கையில்
ஊஞ்சல் மரம் வேருடன் தரையில் இருந்தும்
அதன் கிளைகள் மாமரத்தை விழாமல் தாங்கிருந்தது ..

வெள்ளம் வந்தபோது நம்மை பேர் தெரியா
அன்பு உள்ளங்கள் காத்தது போல

மரம் இருந்த சுவடு அகற்றப்பட்டது சில நாட்களில்
அதே இடத்தில் மீண்டும் துளிர்விட்டது  செடி

இயற்கை அழித்ததை இயற்கை உருவாக்குகிறது

மனிதா ,இயற்கையை அழிக்கும் நீ
அதை உருவாக்குவது எப்போது ?

****ஜோக்கர் ****