FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதை நிகழ்ச்சி - ஓவியம் உயிராகிறது => Topic started by: Forum on January 17, 2018, 01:51:59 AM

Title: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: Forum on January 17, 2018, 01:51:59 AM
ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....


**இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக  )..

***தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .

**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

.


நிழல் படம் எண் : 171
இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team  சார்பாக     வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...

.

உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்

(http://friendstamilchat.org/newfiles/OVIYAM UYIRAAGIRATHU/171.png)
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: JeGaTisH on January 17, 2018, 02:40:06 AM
இனம்  புரியா என் காதலை
இணைத்திட நீ வருவாயா
இனம் புரியா  உணர்வு உன் மேல்
அதை உணர்த்தவும் வழி சொல்வாயா

கண்ணீர் வழிகிறது  உனக்காக
ஆனால் அதன்  வலி  எனக்குள்ளே

உன் கரம் பிடித்திட கனவுகள் கண்டேன்
உன்னை மறக்க நேரிடும்  என  அறியாமல்...

காதலும் வாழ்க்கையும்  உன்னோடு  வேண்டும்
நீயில்லாமல்  இது இரண்டும் ஏது ...

உன் விழியில்  என்  முகம் பார்த்தேன்
ஆனால் அது கானல் நீர் என அறியாமல்.

காதலை சொல்லத்  துடித்தவனிடம்
காதலை நிருபிக்க சொன்னால் என்ன செய்வேன்.

காதல் கடிதம் பல நூறு வண்ணமாய்  வடித்தேன்
வடித்த கடிதத்தை படித்துரைக்க  வந்தேன் .
விதியின்  மகன் உன் காதலனாவதை கண்டேன்
வடித்த கவிதையும் வார்த்தைகளும் வறண்டு போனதுவே.

உன்னை  எண்ணி  என் இதயம் உருகுவதை
என் கண்களால் வடியும் கண்ணீரில் கண்டேன்

பின்பு  உணர்ந்தேன்  காதல் செய்தது என் தவறல்ல
அதை உனக்கு உணர்த்தாமல் சென்றதே என் தவறென்று.

காதல் செய்யும் நண்பர்களே நீங்கள் காதல் செய்தால்
அதை அந்த பெண்ணிடம் முதலில் தெரியபடுத்துங்கள்
இல்லா விட்டால் என் கானல் நீர் போல் உங்கள் காதல் ஆகிவிடும்..


         அன்புடன் ரோஸ்மில்க் தம்பி ஜெகதீஸ்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: thamilan on January 17, 2018, 06:58:33 AM
உள்ளுக்குள்ளிருந்து உயிர்வதை செய்பவளே
உன் பிரிவால் நான்
உயிர் துறக்க எண்ணியது
தவறென்று இன்று உணர்ந்து கொண்டேன்

காதலில் நான் பட்ட காயத்தால்
நான் இன்று கவிஞன்
உன் இதயத்தைக் கொடுக்காமல்
என் இதயத்தை எடுத்துக்கொண்டவள் நீ

உனக்கொன்று தெரியுமா
இதயத்தை தொலைத்திட்ட எனக்கு
மாற்று சிகிச்சை மூலம்
மற்றொரு இதயம்
அதிலும் நீ

உன் இதயத்தில்
நான் ஒருவன் மட்டும் தான் என்று இறுமார்த்திருந்தேன்
உன் இதயம் ஒரு வாடகை வீடு
இதை உணர்த்திவிட்டாய் நீ எனக்கு

புன்னகையில் வென்று
இதயத்தைக் கொன்று
நீ நடத்திய வேள்வியில்
எரிந்து சாம்பலானது என் இதயம்

காதல் பொய்யா
நீ காதலித்தது பொய்யா
நான் சிந்திய கண்ணீர் ஒன்றே உண்மையானது

என் கற்பனையிலும் நீ
கருவாக ....
நீ பிரிந்தாலும் - என்
பேனா அழுகிறது உன்னையெண்ணி

நீ என் காதலை
காகிதமாக எண்ணி கத்தரித்து விட்டாய்
நீ கத்தரித்தது என் இதயத்தை
என்று நீ  எப்போது உணரப் போகிறாய்

நீ எழுதிய காகிதங்களை
தீயிலிட்டேன்
தீயிலிட்ட காகிதங்களை அணைத்து விட்டேன்
எரிகிற நெருப்பில் தெரிகிறது
உன் முகம்
கேட்கிறது உன் குரல்

உன்னால் என் காதலை அழிக்க முடிந்தது
என்னால் உன் காகிதங்களைக் கூட
அழிக்க முடியவில்லை

உன் காதல் வேள்வியில்
எரிந்தது நானாக மட்டும் இருக்கட்டும்
இன்னொரு இதயத்தையும் எரித்து விடாதே 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: Ms.SaraN on January 17, 2018, 09:00:39 AM
காதலுக்கு இலக்கணமாய்  இருந்தோம்
இப்போது பிரிவுக்கு பொருளானோம்
உன்னையும் என்னையும் பார்த்து
ஏங்கிய உள்ளங்கள் பல
இப்போது நான் உன் நினைவுகளில்
வாடுவதை கண்டு காதலை வெறுக்கின்றன

எப்பாவமும்  அறியாத என் இதயத்தை  ரணமாக்கினாய்
சுடு சொற்கள் பேசி பல நாள்
என்னை தலையணை நனைக்க செய்தாய்
உனக்காக நான் இருப்பேன் என்று சொல்லி
உன் அருகாமை தேடும் போதெல்லாம்
 நீ வேறொருவள் மடியில் சுகம் கண்டாய்
இதையும் தாண்டி உன்னுடன் வாழ ஆசைப்பட்டேன்
கானல் நீராய் மாறி போனது என் ஆசைகள்

உன்னை  நினைத்து கனவுலகில்
மிதந்த நாட்கள் பல கோடி
உன் கைகள்கோர்த்து நடந்த
சாலைகள்  அனைத்தும் இப்போது
வெறிச்சோடி கிடக்கிறது நாதி அண்டாமல்
எங்கோ தூரத்தில் நான் நின்றிருக்க
நீயும் அவளும் காதல் லீலையில்

என் விரல்கள் இங்கு  அநாதையாக இருக்க
உன் விரல்கள் இன்னொருள்வள் கையில்
உன் விரல் பிடிகளின் அழுத்தத்தில் தெரிகிறது
உன் மனதில் உள்ள என் நினைவுகளின்  ஆழம்
உன் லீலைகள் அனைத்தும் நான் அறிவேன்
இருந்தும் நெஞ்சம் ஏங்குகின்றது உன் அருகாமைக்கு

நீயும் அவளும் இணையும் நேரம்
என் வாழ்வின் இறுதி நாள் போல்
நெஞ்சம் கதறி அழுகின்றது
உன் அருகாமைக்கு ஏங்கி 
ஏதும் செய்வதறியாது நான் இங்கே
ஏனோ தெரியவில்லை மனம்
உன்னை என்றும் வெறுக்கவில்லை
என்றும் உன் நினைவுகளுடன் நான்
[/b][/right][/left][/b][/size][/color]
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: MaSha on January 17, 2018, 05:41:53 PM
என் காதல் புத்தகத்துக்கு
நீ தான் முன்னுரை எழுதப்போகிறாய்
என நினைத்து
என் இதயப் பக்கங்களை
உனக்காக ஒதுக்கி வைத்தேன்
ஆனால் நீயோ
முன்னுரைக்குப் பதிலாக முடிவுரை
எழுதப் பார்க்கிறாய்

உன்னுள் ஒரு இதயம்
இதமாக உறங்கும் போது
என் இதயத்துக்கு ஏன்
தாலாட்டுப் பாடினாய்

உன்  துரோக தாலாட்டில்
உறங்கவில்லையடா என் இதயம்
உன்னால் அது
உயிரற்றுப் போனது

உன் மனம் ஒரு பறவை போல
இன்று ஒரு மரத்தில் தங்கும்
நாளை இன்னொரு மரத்துக்கு தாவும்
நானோ உன் அன்பினால்
செழித்து வளர்ந்தேன் இன்று
உன் பிரிவால் பட்டுப்போய் நிற்கிறேன்

ஏன் மனம் சிதைந்து
நெருப்பு சுவாலையாய்
நெஞ்சிக்குள் எரிகிறது
நெஞ்சிக்குள் உலவும் நெருப்பு மேகங்கள்
இன்று கண்ணீர் மழையாகப் பொழிகிறது

உன் தடாகத்தில் நீந்தும் மீனாக
என்னை நினைத்திருந்தேன்
உன் தடாகத்தில் இன்னும் பல
தாமரைகளை மலர்ந்திருப்பது தெரியாமல்
இன்று தரையில் தூக்கிபோட்டாய்
தவிக்கின்றேன் நான்

செவிடரிடம் கதை சொல்லி
ஊமைகளிடம் விமர்சனம் கேட்டவனை போலவே
உன்னிடம் காதலை சொல்லி
கண்ணீரோடு காலத்தைக் கழிக்கிறேன்

உன் பார்வைத் தழும்புகள் பட்ட
எனது முகத்தை
கண்ணீரால் கழுவிட்டேன்
இன்னொரு முறை
காயப்படுத்தி விடாதே
காயத்தை ஆற்றவும்
முகத்தைக் கழுவவும்
எனது கண்களில் நீர் இல்லை

காதலனே
நம் காதல் வாழ்க்கையின்
கடைசி அத்தியாயம்
என் கல்லறையில் முடியப் போகிறது
அங்கேயும்  உன் கண்ணீர் அஞ்சலி ஒன்றுக்காகவே
காத்திருப்பேன் நான்
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: AnoTH on January 18, 2018, 04:29:30 PM
மெல்லிடை நடையாலே
என் மெல்லினமாகியவள்
மென்னகையின் அழகாலே
என் மேனகை  ஆனவள்

புன்னகை மொழியாலே
பொன்நகை அணிபவள்
என் பொன்னான வாழ்வை
கொடுத்த  பொன்மகள்

மண்ணிலோ  பல நூறு
பெண்களே
ஆனால் எந்தன்  கண்ணிலோ
அவள் ஒருத்திதானே

வாழ்க்கையே நீ என்ற போது
வாழ்விலே சாதிக்க நினைத்தேன்
சாதித்த நாட்கள் கடந்தோட
வார்த்தையொன்றை   சொல்ல
தவித்தேன்

காலமெல்லாம் காதலோடு
காவிய தாலாட்டுப் பாட
நினைத்தேன்
காதல் சொல்ல வந்தபோது
காயத்தோடுதான் நின்றேன்

சொல்ல வந்த காதலோ 
என் முன்னாள் ஆடுதடி
சொல்ல மறந்த வார்த்தையால்
என் மனதோ வாடுதடி
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: SweeTie on January 18, 2018, 10:05:50 PM
நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா
என் கண்ணை விட்டு மறையாதே
சொல்லத்  துடிக்கின்றேன்
துணிவின்றி  தவிக்கின்றேன்

காதலை தேடி  வந்த தேவதையே
உன் கண்கள்  கொட்டிய கண்ணீர்த்  தாரைகள்
தோற்றுவிடும் கங்கையும் காவிரியும்
மதிகெட்டேன்   உனை இழந்தேன்

பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்
ஆண்  எனும்  அகந்தை   தலைக்கனம்
பாறாங்கல்லாய்  போனது என் இதயம்
உன் கண்ணீரால்  கரையவில்லை

பேதை  நீ  கெஞ்ச வேண்டும்
மங்கை  நீ மன்றாடவேண்டும்
கன்னி நீ கண்ணீர் சிந்தவேண்டும்
இவை என் அடிமனதின்  ஆணாதிக்கம் 

கெஞ்சினாய்  குளறினாய்  விம்மினாய்
 என் இதயக்கோட்டை  திறக்கவில்லை 
மிஞ்சினேன்   வஞ்சி  உனை  நிந்தித்தேன் 
விஷம் கொண்ட நச்சுப்பாம்பானேன்

உன்னை சொல்லி குற்றமில்லை
பொறுமைக்கும் எல்லை உண்டு 
என் ஆணவம்  உன்னை எள்ளி நகைத்தது 
இன்று  என் நிழல் என்னை   கைகொட்டிச் சிரிக்கிறது

மாறினாய் மாற்றான்  கைப்பிடித்தாய்
மனைவி எனும்  அந்தஸ்து  பெற்றாய்
உன்னை நினைக்கும்  பாக்கியம் இனி இல்லை
கண்கெட்ட பின்னே  எனக்கு காதல்  ஒரு கேடா.....


 
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: பவித்ரா on January 19, 2018, 11:34:42 PM
பல நேர மௌனம்
சில நேர மெல்லிய புன்னைகை
அழகான நட்பின் துவக்கமே...

சுகதுக்கம் பகிர்கையில் 
பிறிதொரு நாளில்
இரு மனங்களின் சங்கமத்தால்
காதலாய் உருமாற ...!

ஒவ்வொரு  நிமிடமும்
வாழ்வே இவணென
கனவிலும் நனவிலும் 
காதலோடு காலங்கள்
பயணிக்கையில்
ஜாதி,மதம்,பணம்
பேதம் தெரியாது 
பெற்றோரோ தனையனோ
பார்க்காத வரை ....!

ஒன்றை பெற
இன்னொன்றை இழக்க
இது கைப்பொருள் அல்லவே...
என் ரத்த உறவை இழந்து
காதலை அடைந்து
எதனை சாதிக்க ?

பிரியா உறவுகளுடன்
சேர்ந்த காதலர்கள்
பாக்கியவான்கள்!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: gab on January 20, 2018, 01:21:34 AM
காத்திகை மாத கதிரவன் கண் விழிக்க
மெல்லிய தென்றல் காற்று மேனியை தீண்ட   
வானொலியில் இளையராஜாவின் இன்னிசையும் செவி சேர 
சுகமாய் பேருந்து பயணம் ...!

அடுத்த நிறுத்தத்தில்... யாரது ?
தேவதைகள் பூமியில் வாழுமென கேட்டதுண்டு
கண்கூடாக இன்று தான் காண்கிறேன்....!

சலனமில்லா குழந்தை முகம்
தளர்வாய் பின்னலிட்டு
பக்கவாட்டில் ஒற்றை ரோசா
அப்பப்பா அவள் அழகை சொல்ல
வார்த்தைகள் கடன் கேட்க வேண்டும்
கவிஞனிடத்தில்  ..!

பெயர் கேட்க திராணியற்று
மௌனமாய் மனதிற்குள்
அவளை சுமந்து அலுவலகம் வந்தால்
வசந்தம்  எதிரே நின்றது
ஆம் எனதருகில் என் தேவதை...
பணிமாற்றம் ஆகி வந்திருக்கிறாள்
யாருக்கு கிடைக்கும் தினம்தினம்
தேவதையின்  இனிய தரிசனம் ...!

காலங்கள் ஓட அவளின் சிநேகம்
எனக்குள் காதலாய்..
தேவதைகள் வாழும் இடம் சொர்க்கமாகுமாம்.
இவள் என் வாழ்க்கைக்குள் வந்து
என் நிலை மாறட்டுமே...
குடும்பத்தின் தலைமகன்
கடமைகளை பாதி முடித்து என் காதலை
சொல்ல காதலர் தினத்திற்காய் காத்திருந்து
இதோ செல்கிறேன் ...!

காதலை உலகமே கொண்டாடும்
பொன்னாளும் இன்னாளோ ?
அதோ நிற்கிறாள்..என் தேவதை
அருகே யாரிவன்? கண்களால்
காதலை வளர்க்கிறார்களே இருவரும்..
சற்றே தலை சுற்றுகிறது...
எனக்குள் பூத்த காதல்
என் மேல் அவளுக்குள் இல்லையா ?

நெருங்கி செல்லாதே நான் நொறுங்கிவிடுவேன்
என என் மனம் எரிமலையாய் குமுற..
தேவதையோடு இன்னொருவன்
கைகோர்ப்பதை காண திராணியற்று

காதலர் தினத்துக்காய் காத்திருந்த
என்னை நொந்து கனத்த இதயத்துடன்
மௌனித்து திரும்புகிறேன்.

காதலை சொல்ல எதுக்கு  நல்ல நேரம் ?
காதல் வந்ததும் உடனே சொல்லி தொலையுங்க பாஸ்.!!!!
Title: Re: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 171
Post by: Maran on January 20, 2018, 05:03:51 PM
(https://i.imgur.com/vTJbODs.png)