FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: AshiNi on June 10, 2018, 07:51:52 AM

Title: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 10, 2018, 07:51:52 AM
இறைவன் ஆசிகள் என்றும் பொழிய நீண்ட ஆயுளும் நல்லாரோக்கியமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வீராக...
 -இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்-
       "GAB தலைவா"


FTC குடும்பம் சார்பில் உங்களுக்காய் இந்த சகோதரி வழங்கும் ஓர் கவி.....


இறைவன் தரணியில்
  வந்துதிக்கச் செய்த ஆண்மகனே
முதலில் நீ ஓர் நல் உள்ளம்...

தாய் தந்தையின் அன்பை
  காலத்துக்கும் வெல்பவனே
ஞாலத்தையும் வெல்லத் துணிவான்!
  அவ்வகையில் பெற்றோருக்கு
நிச்சயம் நீ ஓர் சிறந்த புத்திரன்...

சொந்தங்களை தாண்டியும்
  உண்மை உறவுகளை தேடி அலையும்
ஏக்கங்களுக்கு,
  "என்னோடு வாருங்கள்" என கரம் தந்து
அன்பு உறவுகளை அறிமுகம் செய்து
  உணர்வுகளுடன் கலக்கச் செய்வதில்
நீ ஓர் உறுதியான உறவுப் பாலம்...

இரத்தப்பந்தம் போல
  உடன் பிறப்பின் பிரதியாக
கட்டித்தழுவும் கைகள் தேடினோர்க்கு
  நீ ஓர் இனிய சகோதரன்...

நட்பின் அர்த்தமும் ஆழமும்
 தெரியா மானிடர்க்குள்ளும்
நட்பின் கீதத்தை ஒலிக்கச் செய்த
  நீ ஓர் நட்பின் இலக்கணம்...

முகமறியா நபர்களின்
  மனங்களை கோர்த்து
நட்பு எனும் எல்லையில்லா மாலையாக்கி
  மணம் வீசச் செய்யும்
நீ ஓர் அதிசயப் பிறவி...

தடைகள் பல வந்திடினும்
  மலைகள் பல கண்டிடினும்
உன் பின்னே வருவோர்க்கு
  நட்பின் பாதையை
சீராக்கி கூட்டிச் செல்லும்
  நீ ஓர் உன்னத வழிகாட்டி...

நீ பிறந்த நாளாம் இன்று...
  ஆர்ப்பாட்டங்கள் வேண்டாம் என
நீ எண்ணிடினும்,
  நண்பர்கள் இணையத்தள
அரட்டை அரங்கத்தின்
  ஒவ்வொரு உள்ளமும் உன்னை
கொண்டாடி மகிழ்கிறது...

இறைவனின் துணை கொண்டு
  நீ கண்ட பெரும் வெற்றி
"நண்பர்கள் இணையத்தள அரட்டை அரங்கம்"

தமிழரின் நட்புக்காய்
  நீ அமைத்த சிம்மாசனம்
"நண்பர்கள் இணையத்தள
அரட்டை அரங்கம்"

நீ இல்லையேல் அன்று,
  FTC குடும்பம் இல்லை இன்று!

உனக்காக இக்குடும்ப உள்ளங்கள்
  சமர்ப்பிக்க எண்ணும்
அனைத்து வாழ்த்துக்களும்
  இக்கவிக்குள் அடக்கம்...

எதிர்ப்புக்கள் வந்தாலும் எதிர்கொண்டு
  தன்னை நேசிப்போரை காப்பவன்
வீரன் என்றால்,
  பிரளயங்கள் கண்டாலும் கலங்காது
FTC குடும்பத்தை உன் குடும்பமாய் தாங்கும் நீயும்
  "எம் தமிழ் வீரனே...!!!"


Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: SaMYuKTha on June 10, 2018, 11:36:05 AM
"எதிர்ப்புக்கள் வந்தாலும் எதிர்கொண்டு
  தன்னை நேசிப்போரை காப்பவன்
வீரன் என்றால்,
  பிரளயங்கள் கண்டாலும் கலங்காது
FTC குடும்பத்தை உன் குடும்பமாய் தாங்கும் நீயும்
  "எம் தமிழ் வீரனே...!!!"

ரொம்ப ரொம்ப அழகான உண்மையான வரிகள் Ashini sis.. நீங்க எழுதியிருக்கும்  ஒவ்வொரு  வார்த்தையுமே மிகையில்லாத உண்மை.. FTCயின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்திருக்கும் உங்கள் கவிக்கு மிக்க நன்றிகள்...
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 10, 2018, 11:42:02 AM
Thank you Samyuktha sis
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: DoRa on June 10, 2018, 02:22:04 PM
முகமறியா நபர்களின்
  மனங்களை கோர்த்து
நட்பு எனும் எல்லையில்லா மாலையாக்கி
  மணம் வீசச் செய்யும்
நீ ஓர் அதிசயப் பிறவி.....Nice Kavithai Ashini Sis
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: JeGaTisH on June 10, 2018, 02:51:17 PM
 ;D ;D Nice ashini ss ....
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: thamilan on June 10, 2018, 02:51:46 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
GAB மச்சி
முகம் பாராது
முகவரி கேளாது
ஒரு சூடு சொல் பேசாது
எங்கிருந்தோ வந்த எம்மை
நட்பு என்றும் கயிற்றால் பிணைத்தித்திட்டவரே

நண்பனுக்கு நண்பனாக
தொண்டனுக்கு தொண்டனாக
ஆசானுக்கு ஆசானாக
எல்லோரையும் அரவணைத்து
FTC எனும் குடும்பத்தை கட்டியாளும் நீங்கள்

தீரா ஆரோக்கியத்துடனும்
தித்திக்கும் நல்வாழ்வும்
மாறா இன்பங்களும் பெற்று
இன்னும் பலப்பல ஆண்டுகள்
22  வயது மாறாமல்
என்றும் மார்க்கண்டேயனாக
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாய் வாழ்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறும்

தமிழன்
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: gab on June 10, 2018, 02:57:07 PM
நன்றி இனிய சகோதரி ..


அன்பு பாராட்டும் உறவுகள் கிடைத்தமைக்கு இறைவனுக்கு நன்றி .!!
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 10, 2018, 04:01:29 PM
Nanri Dora sis,  Jegatish thambi, Thamizhan anna and Gab anna
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: NiYa on June 10, 2018, 06:08:09 PM
jooper kavithai thangaaa
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 10, 2018, 07:45:59 PM
Thank you Niya akka
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: JoKe GuY on June 14, 2018, 11:25:37 PM

kavithai arumai.KAVITHAI NADAI MIGA ALAGU ashini keep it up
[/quote]
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 14, 2018, 11:34:24 PM
Mikka nanri Joke guy bro
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: ரித்திகா on June 15, 2018, 12:13:42 AM
Achuma ...epdi thangakutty...epdi...semma semma pinnitel achuma😘😘
🎂belated Happy Birthday Gab🎂
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 15, 2018, 06:23:57 AM
Haha
Thank you Rithi chellam
Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: joker on June 15, 2018, 11:40:26 AM
எவ்வளவு ஆழமான வரிகள் உண்மையும் கூட

சொந்தங்களை தாண்டியும்
  உண்மை உறவுகளை தேடி அலையும்
ஏக்கங்களுக்கு,
  "என்னோடு வாருங்கள்" என கரம் தந்து
அன்பு உறவுகளை அறிமுகம் செய்து
  உணர்வுகளுடன் கலக்கச் செய்வதில்
நீ ஓர் உறுதியான உறவுப் பாலம்...


அழகான தமிழில் படிப்பவர்களுக்கு மனதில் நினைத்ததை
கவி நடையில் எழுதியுள்ளீர்கள்

வாழ்த்துக்கள் கவிதை எழுதிய உங்களுக்கும்
கவிதையின் நாயகன் gab அவர்களுக்கும்



Title: Re: Gab தலைவனுக்காய்...
Post by: AshiNi on June 15, 2018, 11:48:31 AM
Mikka nanri nanri Joker anna