Author Topic: சில்லி தோசை  (Read 357 times)

Offline kanmani

சில்லி தோசை
« on: April 16, 2013, 06:56:34 PM »
தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை குடைமிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தோசை மாவுடன் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து, நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளி, உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்த்து 1 நிமிடம் கிளறி, அதனை தோசை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

 பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் தேய்த்து, கலந்து வைத்துள்ள தோசை மாவை வைத்து, தோசை ஊற்றி, எண்ணெய் சேர்த்து, மொறுமொறுவென்று சுட்டு, குழந்தைகளுக்கு பரிமாறவும்.

இப்போது சுவையான சில்லி தோசை ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.