Author Topic: ~ முகத்தை பளபளப்பாக்கும் இயற்கையான ஃபேஷியல் ~  (Read 259 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218366
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
ஃபேஷியல் என்றதும் ஏதோ ப்யூட்டி பார்லர் விடயம் என்று நாம் ஒதுங்கிவிடத்தேவையில்லை




காலத்திலிருந்தே ஃபேஷியல் வீடுகளில் செய்து கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனால் ஃபேஷியல் என்ற பெயரை உபயோகப்படுத்தாமல் அது ஒரு பழக்கவழக்கமாக இருந்தது. ஃபேஷியலைப் பற்றி சாதாரணமாக சொல்வது என்றால் வாரம் ஒரு முறை முகத்தில் நன்றாக எண்ணெய்த் தேய்த்து, பாசிப்பருப்பு மாவு தேய்த்து குளிப்பதை சொல்லலாம்.

ஃபேஷியல் செய்வதால் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீக்கப்படுகின்றன. முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முகத்தின் துளைகளில் தங்கும் அழுக்குகள் நீக்கப்பட்டு பருக்கள் உருவாகாமல் சருமம் பளிச்சென்று ஆகிறது.

ஏற்கனவே பருக்களினால் உண்டான வடுக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சருமத்தை பொலிவுறச் செய்கிறது. மேலும் பிளாக் ஹெட்ஸ்,வொயிட் ஹெட்ஸ் என்று சொல்லப்படும் கரும்புள்ளிகளும் நீக்கப்படுகின்றன.

இந்த பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் மூக்கு, தாடை (chin) போன்ற இடங்களில் உருவாகின்றன.

பழங்கள் ஃபேஷியல்:

பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் இவற்றை தலா இரண்டு துண்டுகள் எடுத்து கூழாக்கி, இந்த விழுதை முகத்தில் மாஸ்க் போட்டு 15 நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.

பழங்களின் தோலை வீணாக்காமல் இதேபோல் ஃபேக் போடலாம். பழங்களில் உள்ள ஆன்டிஆக்சிடென்ட் மற்றும் ஈரப் பதம், சத்துக்களை சருமம் கிரகித்துக்கொள்ளும்.

கிர்ணி, தர்பூசணி, சப்போட்டா, மாதுளை, மாம்பழம், திராட்சை என எல்லாப் பழங்களிலும் இதேபோல், மாஸ்க் போட்டுக் கொள்ளலாம். ஒரு பழத்தில் மட்டுமே செய்யும்போது, சிறிது தேன் கலந்து நன்றாக மசித்து பயன்படுத்தலாம்.

காய்கறி ஃபேஷியல்:

காரட், உருளைக்கிழங்கு, வெள்ளரி, தக்காளி, பூசணி இவற்றை சிறுதுண்டுகள் எடுத்து அரைத்துக்கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் சிறிது பயத்தமாவைக் கலந்து முகத்தில் போட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவுங்கள்.

முகம் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். முகத்தில் உள்ள பருக்களைப் போக்கி, மேடு பள்ளத்தைச் சரிசெய்யும். தோலுக்கு அதிக ஊட்டச் சத்தையும் நிறத்தையும் கொடுக்கும்.

மூலிகை ஃபேஷியல்:

முல்தானிமட்டி, பயத்தமாவு, கடலைமாவு, கஸ்தூரி மஞ்சள், சந்தனத் தூள் இவற்றை சிறிது எடுத்து தேங்காய்ப் பால் விட்டு கலந்து முகத்துக்கு பேக் போடுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவுங்கள். பிறகு கற்றாழை ஜெல்லில் ஒரு சொட்டு எலுமிச்சைச் சாறுவிட்டுக் கலந்து முகத்தில் பூசிக் கழுவுங்கள்.

இப்படி தினமும் செய்துகொள்ளலாம். குளிர்கால பாதிப்பிலிருந்து முகத்தை பாதுகாக்கும். சந்தனத்தூள் முகத்தில் இருக்கும் அழுக்கை போக்கும். கஸ்தூரி மஞ்சள், முல்தானிமட்டி முகத்தை பொலிவாக்கும்.

தேங்காய்ப் பால் சேர்ப்பதால் சருமத்தின் மிருதுத் தன்மை கூடும். முகத்தில் பருக்கள் இருந்தால், கொஞ்சம் வேப்பந்தளிரை அரைத்துச் சேர்த்து பேக் போடலாம்.

இளநீர்:

சிலருக்கு 30 வயதிலேயே முகத்தில் சருமம் உலர்ந்து சுருங்கி வயோதிகத் தோற்றத்தைத் தந்துவிடும். அவர்கள், இளநீர் ஃபேஷியல் செய்துகொள்வது நல்ல பலனைத் தரும்.

இளநீரை பருத்தி பஞ்சில் தொட்டு முகத்தின் எல்லாப் பக்கமும் நன்றாக துடையுங்கள். சருமத்தைச் சுத்தமாக்கிவிடும். கடலை மாவு, மைதா மாவு இவற்றுடன் அரைத்த சந்தனம், தேன், இளநீர் கலந்து முகத்தில் பேக் போட்டு 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள்.

வெளிப்புறத் தூசுகளால் அழுக்கு படிந்து களையிழந்து, மங்கி போன முகம் அழகாக ஜொலிக்கும்.

நட்ஸ்:

பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட் இவற்றை தலா இரண்டு எடுத்து, அரைத்து இதனுடன் கற்றாழை ஜெல் கலந்து முகத்தில் தடவுங்கள். புரதச் சத்து சருமத்தை பஞ்சு போல் மிருதுவாக்கும். அன்று பூத்த மலராக முகம் பளபளக்கும்.