Author Topic: ~ பற்களை எப்படி துலக்க வேண்டும்? ~  (Read 263 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218365
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பற்களை எப்படி துலக்க வேண்டும்?




தற்ப்போது குழந்தைகளுக்கு விதவிதமான பேஸ்ட்டு வருகிரது.

 அவைகள் ஆரோகியம் தானா சற்று சிந்தியிங்கள். ஒரு வெப் தளத்தில் வெளி வந்த நல்ல தகவல். எல்லோருக்குமே
வெண்மையான பற்கள் மீது ஆசைதான். ஆனால், பற்களைச் சரியாகப் பராமரிக்காமல் இருந்தால், அவை மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கும். சிகரெட் பிடிப்பவர்கள், போதை பாக்குகளைப் பயன்படுத்துபவர்கள், வெற்றிலை போடுபவர்கள் போன்றவர்களின் பற்களைப் பார்த்தால் கறைபடிந்து காணப்படும்.

அதோடு வாய் துர்நாற்றம் வேறு. பற்களை முறைப்படி துலக்காதது, ஒரே பிரஷ்சை வருடக் கணக்கில் பயன்படுத்துவது, கண்ட கண்ட பேஸ்ட்டை உபயோகிப்பது போன்றவையே இதற்குக் காரணமாகும். உங்கள் பற்களும் முத்துப் போல் வெண்மையாக ஜொலிக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்:

பிரஷ்ஷில் பேஸ்ட் வைக்கும்போது பிரஷ் முழுவதும் வைக்க வேண்டிய அவசியமில்லை. பாதி அளவு வைத்தால் போதுமானது. அந்தந்த நேரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு பேஸ்ட்டைப் பயன்படுத்தாமல்,தொடர்ந்து தரமான பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.

பல் துலக்கும் போது, கண்ணாடி முன்னால் நின்று மேல்வரிசைப் பற்களை கீழ்வரிசைப் பற்களுடன் ஒட்டாமல் லேசாகத் திறந்து வைத்துக் கொண்டு (ஒரு விரல் அளவுக்கு) துலக்க வேண்டும்.

பற்களைச் சேர்த்து வைத்து துலக்கும்போது, பற்களில் உள்ள உணவுத் துகள்கள் மற்றும் படலங்கள் வெளியேறாமல் மீண்டும் பல் ஈறுகளின் அடியிலேயே ஒட்டிக்கொண்டு விடும். பற்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு துலக்கும்போது உணவுத் துகள்கள், படலங்கள் வாய்க்குள் சென்றுவிடும். பின்னர் வாய் கொப்பளிக்கும்போது அவை வெளியேறி விடும்.

பற்களைத் துலக்க ஆரம்பிக்கும்பொழுது, முதலில் கடைவாய்ப் பற்களில் இருந்து ஆரம்பிக்கலாம். இப்படிச் செய்வதால், மொத்தப் பற்களையும் வரிசையாக பிரஷ் செய்த திருப்தி கிடைக்கும்.

மேல்வரிசைப் பற்களை மேலிருந்து கீழாகவும், கீழ்வரிசைப் பற்களை கீழிருந்து மேலாகவும் துலக்க வேண்டும்.

மென்மையான பிரஷ்ஷையே பயன்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுவது நல்லது.

பற்பொடியை விட பேஸ்ட் கொண்டு பல் துலக்குவதே சிறந்தது. ப்ளோரைடு கலந்த பேஸ்ட்கள் குழந்தைகளின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.

நாக்கில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற, டங்க் கிளீனருக்குப் பதிலாக,பிரஷ்ஷின் குச்சங்களைக் கொண்டே சுத்தம் செய்யலாம். ஏனெனில்,டங்க் கிளீனர் நாக்கில் உள்ள சுவை நரம்புகளை புண்ணாக்கி விடும்.

காலையில் எழுந்த உடனும், இரவு படுக்கப்போகும் முன்பும் என ஒருநாளைக்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

சிலருடைய பற்களுக்கு இடையே இடைவெளி காணப்படும். இவர்கள் இன்டர்டென்டல் பிரஷ் கொண்டு உணவுத் துகள்கள் மற்றும் படலங்களை அகற்றலாம்.

சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைக் குறைவாக சாப்பிட வேண்டும். இவற்றைத் தொடர்ந்து சாப்பிட்டால் விரைவில் பற்சொத்தை ஏற்படும். அதேபோல் அதிக குளிர்ச்சியான பானங்களை அருந்தக் கூடாது.

ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு இரண்டு, மூன்று முறை நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.

மவுத்வாஷை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து கொள்வது அவசியம்.