Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 78523 times)

Offline SanSa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #345 on: January 27, 2017, 01:05:41 PM »
(231) : ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

விளக்கம்:
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுக்குப் புகழோடு வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் உயிருக்கு ஊதியம் என்பது வேறு யாதும் இலலை.                                                           

............ நின்றாருள் .....................  ...................
நின்றாரின் .................. ......

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #346 on: February 15, 2017, 04:43:38 PM »
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

பிறனுடைய பொருளாயுள்ள மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறம், பொருள் ஆகியவற்றின் புகள் அறிந்தவர்களிடத்தில் இல்லை.


........   .......... ......... நான்கும்
இகவாவாம் ........ கண்.
Palm Springs commercial photography

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #347 on: February 16, 2017, 07:31:13 AM »
   
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

குறள் விளக்கம் :
பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கு குற்றங்களும் பிறன் மனைவியிடத்து நெறி தவறி நடப்பவனிடத்திலிருந்து நீங்காவாம்.

   எளிதென ...................... ................ஞான்றும்
விளியாது .................. ...............




Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #348 on: April 03, 2017, 09:58:26 AM »
குறள்:145
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.


குறள் விளக்கம்
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.


______  காதலம்  என்றேனா  _______
______ யாரினும் ______
« Last Edit: April 03, 2017, 11:26:21 AM by MyNa »

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #349 on: April 03, 2017, 12:19:18 PM »
kandu pidichiten teacher...thank u...!!! ;) ;) ;)

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

விளக்கம் :
காதலர் எவரைக் காட்டிலும் நாம் மிகுந்த காதல் உடையவர்கள் என்றேன்; அதற்கு அவள் நான் பலரையும் காதலிப்பதாகவும், அவர்களுள் இவள்மீது அதிகக் காதல் உடையவன் என்று சொன்னதாகவும் எண்ணி, எவளைக் காட்டிலும் எவளைக் காட்டிலும் என் மீது காதல் உடையீர் என்று ஊடினாள்.




.............. ஓம்பி .............. ............
தன்னுயிர் அஞ்சும் ..........


Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #350 on: April 03, 2017, 03:12:23 PM »
குறள் 244:
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர்
அஞ்சும் வினை.

விளக்கம் :
தன் உயிரின் பொருட்டு அஞ்சி வாழ்கின்ற தீவினை, உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளுடையவனாக இருப்பவனுக்கு இல்லை.

________ கொள்ளாதான் _________  கடைமுறை
________ துயரம் ______ .

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #351 on: April 04, 2017, 02:56:45 PM »
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்.

விளக்கம் : ஒருவருடைய பண்பு நலன்களையும், செயல்முறைகளையும் பலவாராக, பலநேரங்களில் நோக்கி, நன்கு ஆராய்ந்து, அவரைப் பற்றி தெளிந்தபின்னரே நட்பென்று கொள்ளாதானுடை நட்பு, முடிவிலே தாமே இறந்து மடியக்கூடிய துன்பங்களை விளைவித்து, அவற்றால் துயரத்தையும் தந்து, மரணத்தையும் தந்துவிடும். இக்குறளும், கடந்த குறளும் ஆராயாமல் கொண்ட நட்பால் விளையும் கேட்டினைக் குறித்தமையின், வள்ளுவர் நட்பாராய்தலின் இன்றியமையாமையை முதலிலே வலியுறுத்துவது தெளிவு.


........... .............. செயினும் .................
................ யாமை  தலை.


Offline MyNa

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #352 on: April 04, 2017, 07:41:30 PM »
குறள் 852:
பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

விளக்கம்
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை செய்யாதிருப்பது சிறந்த குணம்.

________ உயிரைத் துறப்பர் _________
________  _________ பவர்.

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #353 on: April 14, 2017, 12:02:58 AM »
                     குறள் எண்: 1017

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.


குறள் விளக்கம்:
               நாணத்தை தமக்குரிய பண்பாகக் கொள்பவர் நாணத்தால் உயிரை விடுவர்,
உயிரைக் காக்கும் பொருட்டாக  நாணத்தை விட மாட்டார் .


        ------------------- --------------- உண்மையால் ------------- ----------------------- இரப்பவர்  --------------- வது
                   

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #354 on: April 14, 2017, 07:56:53 AM »
கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.


குறள் விளக்கம்
ஒருவர் முன் நின்று இரப்பவர் அந்த இரத்தலை மேற்கொள்வது, உள்ளதை இல்லை என்று ஒளித்துக்கூறாத நன்மைகள் உலகத்தில் இருப்பதால் தான்.



........................ ............ ................ நிரப்பிடும்பை
தானேயும் ................  .............


Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #355 on: April 14, 2017, 11:49:15 AM »
( குறள் எண் : 1060 )

    இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.


   குறள் விளக்கம்:-
   
                                         இரப்பவன் எவரிடத்திலும் சினம் கொள்ளாதிருக்க வேண்டும், அவன் அடைந்துள்ள வறுமைத் துன்பமே அவனுக்கு அறிவு புகட்டும் சான்றாக அமையும்.


............. மன்னோ .............. ..............
................. மன்னோ .............

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #356 on: April 14, 2017, 01:13:16 PM »
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

குறள் விளக்கம்
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

................... .............. அறிந்ததன் கண்தங்கிச்
....................... செல்லாதது .................


Offline EmiNeM

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #357 on: April 24, 2017, 02:43:56 PM »
   
ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

குறள் விளக்கம்
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.



இன்னாது ............. வாழ்தல் ........
இன்னாது ..........   ...........

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #358 on: April 29, 2017, 06:54:01 AM »
   
இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு

குறள் விளக்கம்:
இனத்தவராக நம்மேல் அன்புடையார் இல்லாத ஊரில் வாழ்தல் துன்பமானது, இனியக் காதலரின் பிரிவு அதை விடத் துன்பமானது.

................ அமைந்தார் ..............   மற்றவர்
நீங்கின் ................. ...............




Offline EmiNeM

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #359 on: May 01, 2017, 12:13:22 PM »
ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.


குறள் விளக்கம்
காத்துக் கொள்வதானால் காதலராக அமைந்தவரின் பிரிவு நேராமல் காக்க வேண்டும், அவர் பிரிந்து நீங்கினால் மீண்டும் கூடுதல் அரிது.


............ என்றவர் நீப்பின் ..........
............. உண்டோ ..........