இசைத்தென்றல் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி சகோதரி SanSa அவர்களுக்கு வணக்கம்.
நண்பர்கள் தமிழ் கருத்தாடு தளத்தின் பண்ணலை வாயிலாக நீங்கள் வழங்கி வரும்
இசைத்தென்றல் நிகழ்ச்சியை செவிமடுத்து வருகின்றேன்,
மிகவும் நேர்த்தியாக அதிக தேடலோடு இசைப்பிரியர்களை மகிழ செய்கின்றீர்கள், வாழ்த்துக்கள்.
இந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் வாய்த்ததில் மகிழ்ச்சி.
உங்களோடு இணைந்து இசைத்தென்றலை இதயத்தில் புகுத்தும் பணியை செய்கின்ற அனைத்து
கலைஞர்களுக்கும் தொழில்நுட்ட கலைஞர்களுக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்!
கேட்க விரும்பும் பாடல் இடம்பெற்ற திரப்படமும் அதன் சில தரவுகளும் இதோ.....
திரைப்படம்: பணக்காரக் குடும்பம்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
1 / பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
2 / பாடல்: அத்தை மகள் ரத்தினத்தை பாடியவர்: பி. சுசீலா
3 / பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
4 / பாடல்: வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி பாடியவர்: ? கடவுளுக்கு தான்வெளிச்சம்
5 / பாடல்: உன்னை நம்பினார் கெடுவதில்லை பாடியவர்: பி. சுசீலா
6 / பாடல்: பறக்கும் பந்து பறக்கும் பாடியவர்: ? கடவுளுக்கு தான்வெளிச்சம்
7 / பாடல்: இதுவரை நீங்கள் பார்த்த பார்வை பாடியவர்: பி. சுசீலா
8 / பாடல்: அத்தை மகள் ரத்தினத்தை பாடியவர்: பி. சுசீலா
இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுமே இதமானவை
விசேடமாக.
1/ ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
2/ பல்லாக்கு வாங்க போனேன் ஊர்வலம்போக
3/ இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா...
இந்த மூன்று பாடல்களும் அதிகம் பிடித்தவை அதிலோ எதை கேட்பதென
நினைக்கையில், புரட்ச்சி , சோகம் தவிர்த்து, காதலை கேட்கலாமென
முடிவு செய்தேன் அனைவரும் ரசிப்பதற்காக,
கேட்கலாமா பாடல் ? ருசிக்க விரும்பும் பாடல்...
இதுவரை நீங்கள் பார்த்த பார்வைஇதற்காகத்தானா...
அக்கா தங்கையர் இருக்கும் இடத்தில் பிடித்த வரிகளை சொல்லி
நாணமடைய விரும்பவில்லை ஆனால் அழகிய தமிழ் உண்டு
கண்ணதாசன் ஐயாவின் பாடலில் கற்றுகொள்ளுங்கள் கேட்கையில்
எனது தனிமையில் வீட்டை இருட்டாக்கி வேறு ஒலியோ ஒளியோ
புகாமல், ஒளித்தட்டில் கேட்டு ரசித்த பாடல்களில் இதுவுமொன்று!
இந்த பாடலை, இனிய இல்லறத்தை நோக்கிசெல்ல விரும்பி காதலிக்கும்
உண்மை காதலர்க்காயும், நமது குடும்ப நண்பர்கள் சகோதரர்
அவைவருக்காயும் ஒலிபரப்பும்படி கேட்டு நிற்கின்றேன்.
இந்த படத்து பாடல்களையும் தரவுகளையும் நான் பெற்றுகொள்ள
உதவிய நமது பொது மன்றத்துக்கும், அங்கே இதை பதிவு செய்த
மரியாதைக்குரிய தோழர் gab அவர்களுக்கும், மிக்க நன்றிகள்.
அனைத்துக்கம் அனவருக்கும் தாழ்மையான நன்றிகள் பல