Author Topic: காதலிப்பவர்களுக்கு சில ஆலோசனைகள்...  (Read 2605 times)

Offline RemO

காதலிக்கச் சொல்லி வற்புறுத்தாதே!

உங்களை காதலிக்க மறுக்கிறார்களா? விட்டுத் தள்ளுங்கள். ஆற்றில் எத்தனையோ மீன்கள்
இருக்கின்றன. நாம் விரும்பும் ஆண் அல்லது பெண் உங்களைக் காதலிக்கவில்லை
என்பது அசிங்கம் இல்லை. நம்மை அவர்கள் காதலனாகவோ காதலியாகவோ நினைக்கவில்லை
என்பதைப் புரிந்து கொள்ளாமல் அவர்களைத் துரத்துவதுதான் அசிங்கம். உங்களைக்
காதலிக்கும் ஆள் கிடைக்கும் வரை காத்திருங்கள்!


அந்த விஷயங்களுக்கு அவசரப்படாதே!

எல்லாவற்றுக்கும் நேரம், காலம் இருக்கிறது என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? அடல்ட்ஸ்
ஒன்லி விஷயங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வம் ஏற்படத்தான் செய்யும். ஆனால்
அவசரப்பட்டால் சமயத்தில் பெரிய பிரச்சனையில் போய் முடியும். எப்போதும் பொது
இடத்திலேயே உங்கள் காதலன் / காதலியை சந்திப்பது நல்ல ஐடியா.


காதலனின் / காதலியின் பெற்றோரைத் தெரிந்துகொள்!

காதலை வலுப்படுத்துவதற்கும் அதை நீடிக்கச் செய்வதற்கும் இது முக்கியம்! உங்கள்
காதலி அல்லது காதலனிடம் அவர்களது பெற்றோரை அறிமுகப்படுத்தும்படி
வற்புறுத்துங்கள். சில சமயம் இது சிக்கலில் மாட்டிவிடும்தான். ஆனால்
சிக்கலை உண்டாக்காத பெற்றோர்களை அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். எந்த
சிக்கல் வந்தாலும் சமாளிக்கப் பாருங்கள். பயத்தில் சந்திப்பைத் தள்ளிப்
போடாதீர்கள்.


அன்பளிப்புகள் தரும் சந்தர்ப்பங்கள் கிடைத்தால் தவற விடாதே!

காதலர்தினம், பொங்கல், தீபாவளி, தமிழ்ப் புத்தாண்டு தினம், ஆங்கிலப் புத்தாண்டு
தினம், கிறிஸ்தவராக இருந்தால் கிறிஸ்துமஸ், முஸ்லீமாக இருந்தால் ரம்ஜான்,
பக்ரீத் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் காதலனுக்கு / காதலிக்கு
குறைந்த செலவில் சின்னச் சின்ன அன்பளிப்புகள் வாங்கிக் கொடுங்கள். உங்கள்
பிறந்த நாளுக்குக் கூட உங்கள் ஆளுக்கு அன்பளிப்பு தரலாம்!
காதலனாக இருந்தால் டை, சட்டை, புத்தகம், பேனா, டயரி, ஷேவிங் செட், அவருக்குப் பிடித்த படம்
தியேட்டரில் ஓடினால் அதற்கு இரண்டு டிக்கெட், இப்படி ஏதாவது வாங்கித் தரலாம்.
காதலி என்றால் மலிவு விலையில் கம்மல்/தோடு, வளையல், சுரிதார், சல்வார் கமீஸ், புத்தகம், பேனா,
கையடக்கக் கண்ணாடி, மேக்கப் சாதனங்கள், சினிமா டிக்கெட் ஆகியவற்றை வாங்கித் தரலாம்.


விட்டுக் கொடு, தியாகம் செய்யாதே!


காதலனுக்கு / காதலிக்கு உங்களிடம் இருக்கும் சில குணங்கள் பிடிக்கவில்லையா? அவசியம்
மாற்றிக் கொள்ளுங்கள். சின்னச் சின்ன விஷயங்களில் உங்கள் சௌகரியங்களைத்
தியாகம் செய்யலாம். ஆனால் வேலையை விடுவது, நண்பர்களைப் பகைத்துக் கொள்வது
இதெல்லாம் உங்களுக்கும் உங்கள் காதலுக்கும் நல்லதில்லை.