Author Topic: உங்கள் கணினியில் வைரஸ் தாக்கத்தைக் கண்டறிய...!  (Read 585 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook

உங்கள் கணிப்பொறியில் நச்சு நிரல்களால்(Virus) பாதிக்கபட்டிருந்தால் கீழ்க்கண்ட பிரச்னைகள் ஏற்படலாம். .கணிப்பொறியின் வேகம் குறைந்து காணப்படும்.(very slow on computer speed) . கணிப்பொறி அடிக்கடி செயலிழந்து போகும். (computer failure ) . கணிப்பொறி சரிவர செயல்படாததுடன் அடிக்கடி தானாகவே மீண்டும் இயங்கும். (Automatic Restart) . கணிப்பொறியில் இருக்கும் பயன்பாடுகள்(computer applications) சரிவர இயங்காது . வட்டுகளையும், வட்டு இயக்கிகளையும் பயன்படுத்த முடியாது.(Disks, disk drives will not be able to use.) . அச்சிட வேண்டிய ஆவணங்களை சரியாக அச்சிட முடியாது. (Cannot print documents correctly.) . அடிக்கடி தேவையில்லாத பிழைச் செய்திகள்(Error Message) தோன்றும். . அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு இரண்டிரண்டு விரிவுகள் (Double extension)தோன்றலாம். . எந்த ஒரு காரணமும் இன்றி நச்சு நிரல் எதிர்ப்பி(Anti virus software) செயல் இழந்துவிடும். அதை மீண்டும் இயக்குவது கடினமாக இருக்கும். . நீங்கள் தோற்றுவிக்காத புதிய பணிக்குறிகள்(Short Cuts) திரைமுகப்பில் காணப்படும். . தேவையில்லாமல் வினோதமான ஒலிகள் கேட்கும். .உங்கள் கணிப்பொறியிலுள்ள முக்கியமான நிரல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே நீக்கப்பட்டிருக்கும்.(Important files are removed without your permission) . எந்தவொரு காரணமும் இன்றி கணிப்பொறியின் நினைவகம் குறைந்து போகும். (The computer's memory Reduced without any reason ) .வினோதமான செய்திகள் திரையில் தோன்றும்.(Strange news appear on screen) . வினோதமான கோப்புகள் கோப்புறைகளில் காணப்படும்.(Strange files are in folders) . உங்களுடைய கோப்புகளில் சில உங்களுக்குத் தெரியாமலேயே நகலெடுக்கப்பட்டிருக்கும். (Unbeknownst to you, some of your files will be copied.) மேற்கண்ட அறிகுறிகள் உங்களுடைய கணினியில் இருக்குமானால் நிச்சயம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

நன்றி..!!!