Friends Tamil Chat FM > இசை தென்றல்

இசை தென்றல் - 012

(1/2) > >>

MysteRy:


இந்த  வாரம்  இசை  தென்றல் நிகழ்ச்சியில் , நமது  சூப்பர் *ஸ்டார்   ரஜினிகாந்த்  நடித்த படத்திலிருந்து பாடல் கேட்போகின்றேன் !
"புது  கவிதை "  S.P.முத்துராமன்  இயக்கிய இப்படம் , 1976   கன்னட  மொழியில் வெளிவந்த  "நா  நின்ன  மரேயலாறே ".படத்தின் தழுவல் .
காதலை மையமாக கொண்ட இத்திரைப்படத்தின் திரைக்கதை மிக அழகாக வடிவமைக்கபட்டிருக்கும் .அர்த்தம்நிரைந்ததாய் .
 ஒரு கதாநாயகன் இப்படித்தான்  இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்தெறிந்த நடிகர் ரஜினிகாந்த் . ஆகையால் தன் அவர் இன்றும் சூப்பர் ஸ்டார் .

எனக்கு  பிடித்த  பாடல்  'வெள்ளை   புறா  ஒன்று ' , பாடல்கள் திரு  வைரமுத்து ,இளையராஜாவின்  இசை  அமுதத்தில்  யேசுதாஸ் /S.ஜானகி அவர்களின் மயக்கும் குரலில் .
இந்த பாடல் இன்றுவரை  *சூப்பர் ஸ்டார் ரின் * ஒரு அழகான  இனிமையான காதல் மெல்லிசை பாடல் .

Gotham:
வணக்கம் குங்ஃபூ மாஸ்டர்..




இந்தவாரம் இசையால் வெற்றி படங்கள் வரிசையில் எனக்குப் பிடித்த பாடல்கள் கொண்ட படத்தை தேர்வு செய்திருக்கிறேன்..


"பயணங்கள் முடிவதில்லை"


1982-ல் வெளிவந்த இந்த படத்தை ஆர். சுந்தர்ராஜன் இயக்கி இருக்கிறார். படத்தில் மோகன், பூர்ணிமா ஜெயராம் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோர் நடிச்சிருக்காங்க. படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா. பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருக்காரு. மிகப்பெரிய வெற்றிப்படமான இது 500 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது. மோகனுக்கு "மைக் மோகன்"னு பேர் வர்றதுக்கு இந்த படமும் ஒரு காரணம்.


இசைஞானியின் அற்புத இசையில் இப்படத்தின் பாடல் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். இதில


" சாலையரம்
மணியோசை
இளையநிலா பொழிகிறதே
ஏ.. ஆத்தா.
தோகை மயில்
வைகறையில் வைகைக்கரையில்.."


இப்படி மொத்தம் முத்தான ஆறுபாடல்கள் இருக்கு. வைரமுத்துவின் வர வரிகளில் ஒவ்வொன்றும் ஜொலிக்கும். இன்னிக்கு எனக்கு புடிச்ச பாட்டா நான் கேட்கப் போறது..


"இளையநிலா பொழிகிறதே.."


இப்பாடல்லே வர்ற ஒவ்வொரு வரிகளும் அழகு. இயற்கைக்கு கவிஞர் சொல்ற உவமைகளும் அற்புதம். எஸ்.பி.பியின் குரல்ல கேட்க கேட்க இனிமையான பாட்டு இது.


குறிப்பா எனக்கு புடிச்ச வரிகள்..


"முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ.."


இயற்கை நிகழ்வுகளை இவ்வளவு அழகா சொல்லியிருக்கற பாடல் எனக்கு மிகவும் பிடிச்ச பாடல்கள்ல ஒன்னு.


இந்த பாட்டை நான் நம்ம FTC நண்பர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்..


நன்றி..!

Sheeju:
hi master..how r u?  happy to got d place here..

i want a song frm d movie.. 7aam arivu..and d song is " Mun andhi chaaral nee " 

itz a nice melody..n haunting song.. sung by Karthik my most fav singer..

and music by Harris Jeyaraj.. lyrics written by Na.Muthukumar

i Lik dis song sooooo much..n wanna dedicate to all my ftc frdz..!!!                           

Jasmine:
Hi,

naan select panna movie Sarvam.

intha movie la aarya and trisha act panni irukaange. Music Yuvan shankar raja podu irukaange.

Some movies Music aala than hit aagum, athula Sarvam movie-um onnu. Intha movie la back ground music Yuvan nalla podu irukaange athu maddum illa all songs um nalla irukkum. Naan select panna song "Neethane en narambukul odinai...". Intha song um Yuvan thaan sing panni irukaange.

ஸ்ருதி:
வணக்கம் ,

நான் இந்தவாரம்  தங்கமகன்  படத்திலிருந்து

"ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான்" என்ற பாடலை இந்தவாரம் இசை தென்றல் நிகழ்ச்சிக்காக கேட்க விருக்கிறேன்..

திரைப் படம்: தங்க மகன் (1983)
இயக்கம்: A ஜெக நாதன்
நடிப்பு: ரஜினி, பூர்ணிமா பாக்யராஜ்
இசை:இளையராஜா
குரல்கள்: S P B, S ஜானகி
பாடல்: வாலி


இந்த படத்தில் எல்லாம் பாடல்களும் அருமையாக இருக்கும்.. இளையராஜாவின் இசை வெற்றியில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம்...

பெரிய விவாதத்தையே ஏற்படுத்திய பாடல் என்று சொல்லலாம்....ராத்திரியில் தாமரை எப்படி பூக்கும் என்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, சர்ச்சையிலும் வெற்றி பெற்ற பாடல் இது .


இந்த படத்தில் வரும் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்..

பூமாலை ஒரு பாவை ஆனது

வா வா பக்கம் வா என்ற பாடல்கள் எல்லாம் இப்பொது கேட்டாலும் இனிமையாக இருக்கும்..

என்னுடைய எல்லா நண்பர்களுக்கும் இந்த பாடலை dedicate  செய்கிறேன்






Navigation

[0] Message Index

[#] Next page

Go to full version