Author Topic: வா‌ஸ்து  (Read 5263 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வா‌ஸ்து
« on: March 15, 2012, 06:40:54 PM »
வா‌ஸ்து


தள‌ம் போடுவ‌தி‌ல் வா‌ஸ்து

தமிழ்.வெப்துனியா.: பொதுவாக வீட்டின் மனை அளவு 23, 24, 25 அடிகளில் இருக்கக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு அறையும், அதற்குத் தொடர்பில்லாத குளியல் அறையும் கட்டி, இரண்டிற்கும் சேர்ந்தா‌ர்போல் மேல் குறிப்பிட்ட அளவுகளில் தளம் போடலாமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தளம் போடலாம், அதற்கு எந்த விதக் கட்டுப்பாடும் கிடையாது. தாராளமாக போடலாம். மனை வேறு, மனைக்கு மேல் இருக்கக் கூடிய அமைப்பு வேறு.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வா‌ஸ்து
« Reply #1 on: March 15, 2012, 06:42:21 PM »
வாஸ்துப்படி முழுமையான வீடு எவ்வாறு இருக்க வேண்டும்?



ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: வாஸ்துப்படி என்று பார்த்தால் இரண்டு இருக்கிறது. ஒன்று மனையடி சாஸ்திரம், மற்றொன்று வாஸ்து. அதாவது பூமியினுடைய அமைப்பை முதலில் பார்க்க வேண்டும். சதுர மனையா? செவ்வக மனையா? அல்லது ஈசானி குறைந்திருக்கிறதா? அல்லது அக்னி மூலை வளர்ந்திருக்கிறதா? போன்றெல்லாம் மனையின் அமைப்பை முதலில் பார்க்க வேண்டும்.

ஏனென்றால் சென்னை போன்ற மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளிலெல்லாம் மனை வாங்குவது என்பது பெரிய விஷயமாக இருக்கிறது. அதனால் கட்டிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், முதல் மாடி, 2வது மாடி என்று ஆகிவிடுகிறது.

அதனால் இறுதியாக என்ன பார்க்க வேண்டுமென்றால்? வடகிழக்கு ஈசானி மூலை அது கொஞ்சம் காலியாக இருந்தால் நல்லது. அதில் அதிகமான சுமை இல்லாமல் காலியாக இருப்பது நல்லது. பிள்ளைகள் படிப்பதற்கு அல்லது உறவினர்கள் வந்தால் தங்குவதற்காகக் கொடுக்கலாம். அதற்கடுத்து தாய், தந்தை, பாட்டன் பாட்டி இருந்தால் அவர்களை அங்கு தங்க வைக்கலாம். பொதுவாக ஈசானி அறையில், அதாவது வடகிழக்கு அறையில் பெரியவர்களை தங்கவைத்தால் வேறு ஏதாவது வாஸ்து தோஷம் இருந்தால் கூட அது போய்விடும். இதுபோன்ற சில விஷயங்கள் இதில் உண்டு.

அதற்கடுத்து அக்னி மூலை என்பது தென்கிழக்கு. இதில் சமையலறை இருந்தால் நல்லது. தென்மேற்கு என்பது கன்னி மூலை. அதுதான் குபேர மூலை. மாஸ்டர் பெட்ரூம். அதாவது இல்லத்தின் தலைவன், தலைவி தங்குவது நல்லது. அதற்கடுத்து வாயு மூலை. இதிலும் ஒரு பெட்ரூம் வரலாம். இதிலும் வருபவர்களை தங்கவைக்கலாம். மற்றதெல்லாம் இருக்கலாம். இதுதான் அடிப்படை வாஸ்து. இது இருந்தாலே ஓரளவிற்கு அனைத்தும் சாதகமாக இருக்கும்.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வா‌ஸ்து
« Reply #2 on: March 15, 2012, 06:43:54 PM »
வீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா?

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.: சிலர் வீட்டு மனை வாங்குவதை, வீடு கட்டுவதை முதலீடாகவே செய்கிறார்கள். அப்படி வாங்கிவிட்ட பிறகு சட்டச் சிக்கல், இரண்டு பேர் பதிவு செய்துவிட்டார்கள், ரவுகளால் மிரட்டப்படுகிறார்கள் என்றெல்லாம் வருகிறது. இப்படி மக்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை, உங்களைப் போன்ற ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் வாங்கினால் தவிர்க்க முடியுமா?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தினசரி ஒருத்தரையாவது இதுபோன்ற பிரச்சனையுடன் சந்திக்கிறோம். பூமிக்காரகன் செவ்வாய். இந்தச் செவ்வாய் நீச்சமாய் இருந்தாலோ, 8, 12ல் போய் மறைந்திருந்தாலோ அவர்கள் பெயரில் பூமி வாங்கக் கூடாது. அவருடைய மனைவிக்கு செவ்வாய் நன்றாக இருந்தால், அவர்கள் பெயரில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்க பெயரில் வாங்கிவிடாதீர்கள் என்று சொல்கிறோம்.

அப்படி வாங்குவதென்றால் ஃபிளாட்ஸ் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால் கட்டடக்காரகன் சுக்ரன். பூமியாக இருக்கும் போதுதான் செவ்வாய். பூமியை கட்டிவிட்டால் அது சுக்ரன் நிலைக்குப் போய்விடும். அப்பொழுது குடும்பத்தில் யாருக்கு செவ்வாய் நன்றாக இருக்கிறதோ, அதாவது பூமிக்காரகன் நன்றாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் பூமியை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஒரு‌த்தரு‌க்கு மிதுன லக்னம். இந்த மிதுன லக்னத்தில் 4வது வீட்டில் கன்னியில் செவ்வாய். கன்னிச் செவ்வாய் கடல் நீரையும் வற்றச் செய்யும். 4வது வீட்டில் செவ்வாய் இருந்தால் ஒரு வகையில் பரவாயில்லை. ஆனால், அது கன்னியில் இருப்பதால் உங்கள் பெயரில் பூமி எதையும் வாங்க வேண்டாம், அது சரியாக வராது என்று சொன்னேன்.

அதற்கு அவர், இதெல்லாம் சும்மா சார். நான் யாரையும் நம்புவதாக இல்லை. தாராமாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் தனக்கு மிஞ்சின பிறகுதான் என்று வைத்துக் கொண்டால்தான் பிழைக்க முடியும் என்று சொன்னார்.

உங்களுடைய ஜாதகப்படி இப்படி இருக்கிறது என்று சொன்னேன். அதன்பிறகும், வாங்கினார். தற்பொழுது சாலை விரிவாக்கப்படுத்தினார்களே, அதில் அவர் இடம் போய்விட்டது. சாலை ஓரத்தில் என்று சொல்லித்தான் அதிக விலைக்கு விற்றிருக்கிறார்கள். இவர் வாங்கியது 40 லட்சம், ஆனால் அரசு அவருக்கு கொடுத்திருப்பது 4 லட்சம். இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை என்று அழுகிறார்.

6க்கு உரியவர்களுடைய திசை, 8க்கு உரியவர்களுடைய திசை, செவ்வாய் ராகு, செவ்வாய் சனி சேர்ந்திருந்து செவ்வாய் திசை இதெல்லாம் நடந்தால் அவர்கள் வாங்கிய சொத்தை மற்றொருவர் அபகரிப்பார்கள், இல்லையென்றால் அது கையைவிட்டுப் போகும் அல்லது யாராவது ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்று இத்தனையையும் பார்த்துதான் சிலருக்கெல்லாம் பூமியை வாங்கலாம், பூமியை வாங்கக்கூடாது கட்டடமாக வாங்கிக் கொள்ளுங்கள், செவ்வாய் பலவீனமாக இருந்தால் கீழ்த்தளத்தில் குடியிருக்காதீர்க‌ள், முதலாவது, 2வது மாடிக்கு மாறிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

அடுத்து, செவ்வாய் அவர்களுடைய ஜாதகத்தில் என்ன மாதிரி இருக்கிறது என்று பார்த்துவிட்டு கருமண் பூமி அல்லது செம்மமண் பூமியை வாங்குங்கள். செவ்வாய் சந்திரனுடன் இருந்தால் மணல் பகுதியை வாங்குங்கள். அதாவது நதியை ஒட்டி, கடலோரப் பகுதிகளில் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று இவ்வளவு விஷயங்களையும் சொல்கிறோம்.

இதற்கேற்றார்போல் அவர்கள் பின்பற்றும் போது, இடர்பாடுகளோ, சொத்து வாங்கிய பின் ஏமாற்றங்களோ, இழப்புகளோ சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. திசைகளையெல்லாம் கூட சொல்கிறோம். என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, இந்தக் கோள்களுக்கு இந்த திசை என்று சுக்ர திசை என்றால் தெற்கு, தென்கிழக்கு திசையில் வாங்குங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

இதுபோன்று கலந்தாலோசித்து வாங்கும் போது, தலைமுறை தலைமுறையாக அந்தச் சொத்து தங்கும். அதில் மாற்றம் இல்லை.
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வா‌ஸ்து
« Reply #3 on: March 15, 2012, 06:45:12 PM »
செல் அரித்த வீடுகள், நிலங்களை வாங்கலாமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: ஜோதிடப்படி பார்க்கும் போது, முடிந்தவரை அதையெல்லாம் தவிர்ப்பது நல்லது. வாங்கக் கூடாது. ஏனென்றால் கரையாண் இருக்கக் கூடிய இடத்தில் நாம் இருக்கக் கூடாது.

கரையாண் என்பது எல்லாவற்றையும் கரைக்கக் கூடியது. அழிவிற்குரிய அடையாளம் என்றும் சொல்வார்கள். பொதுவாக பார்த்தால் கரையாண்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவைகளை நாம்தான் தொந்தரவு செய்கிறோம். அவற்றின் இடத்திற்குச் சென்று அவைகளை நாம் தொந்தரவு செய்யக் கூடாது.

கரையாண்கள் இருக்கும் இடத்தில் இருந்தால் புதுப்புது நோய்கள், தொற்று நோய்கள் எல்லாம் வரும். செல்வம் அழியும், பல விநோதமான நோய்கள், பாக்டீரியாக்கள் எல்லாம் உருவாகி நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கும்.

அதனால்தான் கரையாண் அரித்த இடங்களை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதையும் மீறினால், காலமெல்லாம் மருந்து மாத்திரை என்று இருக்க நேரிடும்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: வா‌ஸ்து
« Reply #4 on: March 15, 2012, 06:46:38 PM »
வாழ்ந்து வீழ்ந்த வீட்டை வாங்கலாமா?


தமிழ்.வெப்துனியா.: ஒரு குடும்பம் வாழ்ந்து, வீழ்ந்து போன தங்களுடைய வீட்டை விற்கிறார்கள். அப்படிப்பட்ட வீடுகளை வாங்கலாமா?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: 4வது வீட்டில் சனியோ அல்லது ராகுவோ இருந்தால் வாங்கலாம். 4வது வீட்டில் ராகு இருந்தாலோ, 4வது வீட்டில் 6க்குரிய கிரகம் இருந்தாலோ, 4வது வீட்டில் 8க்குரிய கிரகம் இருந்தாலோ வாழ்ந்து முடிந்த, இடிந்துபோன வீடுகளையெல்லாம் வாங்கலாம். அவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது.

இதேபோல, 4வது வீட்டில் சனி இருந்தால் அவர்களும் வாங்கலாம். பாதகாதிபதி, உதாரணத்திற்கு மேஷ லக்னத்தில் பாதகாதிபதி சனி பகவான். மேஷ லக்னத்தில் 4ல் சனி இருந்தால், வங்கியில் கடன் வாங்கி, அதனை திருப்பிக் கட்ட முடியாமல் ஏலத்திற்கு வரக்கூடிய சொத்துக்களையெல்லாம் வாங்கலாம். இவர்களுக்கெல்லாம் எந்த பாதிப்பும் வராது. பின்னமான சொத்துக்கள் இவர்களுக்கு சாதகமாக இருக்கும்