Author Topic: பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!  (Read 3517 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பரிகாரம் ஒரு வடிகாலே : ஜோதிட ரத்னா வித்யாதரன்!   

கிரக நிலைகளால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கவும், குறைக்கவும் பரிகாரம் செய்கிறோம். இது வடிகால் போன்றது என்று ஜோதிட ரத்னா கே.பி. வித்யாதரன் கூறுகிறார்.

பரிகாரங்கள் செய்வதால் நிவாரணம் பெறலாம். எல்லாவற்றையுமே ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒவ்வொரு வாரத்திற்கும், ஒவ்வொரு ராசிதாரருக்கும் ஒரு விருட்சத்தை (மரத்தை) ஒதுக்குகிறோம். அதேபோல, பரிகாரமாக எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பதை கூறுகின்றோம். குறிப்பிட்ட விருட்சத்தை பராமரிக்கும் போது அல்லது மரக்கன்றை நடும் போது கிரகத்தினால் ஏற்படும் தாக்கம் குறைகிறது. அதேபோல, அந்த ராசிக்குரிய கடவுளை வணங்கும் போது கடுமையான பாதிப்புகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.

உதாரணத்திற்கு, ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான நிலை நிலவும் போது, அதனால் அவருக்கு விபத்தில் கால் போய்விடும் என்ற அளவிற்கு ஆபத்து இருக்கமானால், இப்படிப்பட்ட பரிகாரங்களைச் செய்வதன் மூலம் அதுவொரு சிராய்ப்பாகவோ அல்லது எலும்பு முறிவு என்ற அளவிலோ முடிந்துவிடுகிறது.

அதாவது, தலைக்கு வருவது தலைப்பாகையோடு போய்விட்டது என்று கூறுகிறோமே அந்த நிலையை பரிகாரம் ஏற்படுத்துகிறது.

அந்தந்த வாரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் எந்த கிரகங்களால் நேர்முகமான, எதிர்மறையான கதிர் வீச்சுக்களை செலுத்துகின்றன என்பதனைக் கணித்து, அதில் எதிர்மறை கதிர்வீச்சுக்களை வலிமையிழக்கச் செய்ய அதற்குரிய தெய்வம், அதற்குரிய விருட்சம் ஆகியவற்றை வணங்கச் சொல்கின்றோம்.

கடவுளை வணங்குவது, இயற்கையான பாதுகாப்பு, சூழ்நிலை மாற்றம் ஆகிய மூன்றும்தான் பரிகாரத்திற்கான நடைமுறைகளாகும்.