Author Topic: மனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கணவர் உயிரிழப்பது ஏன்?  (Read 2647 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

ஒரு சில குடும்பங்களில் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவர் உயிரிழந்து விடுகிறார். இதற்கு கணவரின் ஜாதகத்தில் உள்ள பாதக நிலை காரணமா? அல்லது கருவில் உள்ள குழந்தையின் ஜாதகத்தால் தந்தைக்கு மரணம் ஏற்பட்டதா?

பதில்: மேற்கூறிய இரண்டு விடயங்களுமே ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை என்றுதான் ஜோதிட ரீதியாகக் கூறவேண்டும். சிலருக்கு குழந்தையில்லை என்ற கவலை இருக்கும். ஆனால் குழந்தை பிறந்தால் தம்பதிகள் பிரிந்து விடும் நிலை அவர்களின் ஜாதகத்தில் காணப்படும்.

சமீபத்தில் என்னிடம் வந்த தம்பதிகளின் ஜாதகத்தைப் பார்த்த போது, இருவருக்கும் 5இல் செவ்வாய் இருந்தது. இதன் காரணமாக அவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அதிலும் ஒருவரது ஜாதகத்தில் உள்ள செவ்வாய் பகை வீட்டில் அமர்ந்திருந்தது. மற்றொருவரது செவ்வாய் (மீன லக்கினம்) 5இல் நீச்சமாகியிருந்தது. அதனால் குழந்தையில்லை என்பதால் வருத்தப்பட வேண்டாம்; பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றேன்.

அதிலும் குறிப்பாக பெண் குழந்தை என்று கூறுவதற்கும் ஜோதிட ரீதியாக காரணம் உள்ளது. செவ்வாய் ஆண்கிரகம். அதனால் ஆண் குழந்தை தத்தெடுத்தால் பாதிப்புகள் ஏற்படும். உறவு வழியில் தத்தெடுப்பதை விட, முன்பின் தெரியாத இடத்தில் இருந்து தத்தெடுத்தால் எதிர்காலத்தில் பிரச்சனைகளை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தினேன்.

எனவே, குழந்தை பாக்கியம் கிடைப்பதும், கிடைக்காமல் போவது அவரவர் ஜாதகத்திலேயே விதிக்கப்பட்டு விடுகிறது. ஒரு சில தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருந்தால் பிரச்சனைகள் குறையும். உயிர் பிரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும் போது தம்பதிகள் பிரிந்து வாழவோ, நிரந்தரமாக உலகை விட்டுச் செல்லவோ நேரிடுகிறது.

இதுபோன்ற பாதிப்புகளை தவிர்க்க பொருத்தம் பார்க்கும் போதே சிறப்பான முறையில் வரனைத் தேர்வு செய்ய வேண்டும். உதாரணமாக மணமகனுக்கு 5இல் செவ்வாய் இருந்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் ஜோதிட அமைப்புடைய மணமகளைத் தேர்வு செய்ய வேண்டும்.