என் வான வெளியிலே..
உன் நினைவு சிறகுகள்..!
பால் வெளி...!
மினுக்கும் நட்சத்திரங்கள்...
வெள்ளி நிலவு...
அலை அடிக்கும் கரையில்..
அலை பாயும் மனது....
விண்ணை தாண்டும் சிறகு ..
விரும்பியவள் அருகிலே இருந்தால்...
விடியாத இரவுகள்...
முடியாத பிறவிகள்..
நீயும் நானும் ....
பிரபஞ்சம் தீண்டி பார்த்து....
உயிரை சேரும் ஆன்மா...
சொல்லாத காதல்கள்..
சொர்க்கத்தில்..
சொல்லிய காதல்கள்...
திருமணத்தில்..
இங்கு காதல் மந்திரங்கள்,,,
அந்தரத்தில்...
தேவதைகள் பூத்தூவி..
வரவேற்பதில்லை....
தேவதையே நீ என்றால்...
நீ சூரியன் ....
உன்னை சுற்றும் உலகம் நான்..
உன்னை கவி பாட ...
இங்கு வரவில்லை....
நீயே இங்கு கவிதை ஆனாய்...
வா...இன்னும் ஒரு ..
புதிய அத்தியாயம் ....
பூக்க செய்வோம்...!
நமக்கு என்று....
பறப்பதற்கு ஒரு வானம்...
பயணம் செல்ல மேக படகு..
வசிக்க ஒரு அண்டவெளி ....
சுவாசிக்க ..உன் காற்று...
இது போதுமே......