Author Topic: வாழைக்காயை அளவோடு சாப்பிடுவது நல்லது!  (Read 943 times)

Offline Sprite

நம்முடைய வாழ்க்கையில் வாழை என்பது கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி உணவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால்தான் வாழைப்பழம் முக்கனியில் இடம் பிடித்துள்ளது. நமது திருமணம் போன்ற விழாக்கள், சடங்குகளில் வாழை மரம், வாழைப்பழம் முக்கியப் பங்கு பெற்றுள்ளது. வாழையை நம்முடைய முன்னோர்கள் தம் குடும்பத்தின் சொத்தாக நினைத்தனர்.

இன்றைக்கு மருத்துவத்திலும் வாழை பெரும்பாலான ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மற்ற வாழைக்காய்களையும் சாப்பிடலாம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது.

மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம்.

நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.

வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், கழிச்சல், இருமல் போன்றவையும் நீங்கும். ஆனால் வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாய்வு மிகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.

வாழைப்பிஞ்சுகளை பத்தியத்திற்கு சாப்பிடலாம் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
                    

Offline RemO

Thanks , rompa useful info
« Last Edit: October 30, 2011, 09:37:20 AM by Remo »