Author Topic: தினம் ஒரு கொய்யாப்பழம் சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது!  (Read 1857 times)

Offline Yousuf

ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் கொ ஞ்சம் கொழுப்பு, புரோட்டீன் ஆகியவை   உள்ளன. உங்கள் முகம் பொலிவோடு விளங்க வேண்டுமென்றால் தினமும் ஒரு  கொய்யாப்பழம் சாப்பிட்டு வாருங்கள்! நாள்தோறும் ஒரு கொய்யாப் பழம் வீதம் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால்  உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. காலையில் உணவுக்கு முன்பு வெறும் வயிற்றில் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டு ஒரு  டம்ளர் தண்ணீரையும் பருகுங்கள். ஒரு மணிநேரம் கழித்து உணவருந்தலாம். ஆனால் மதியம் வரை நீங்கள் காபி, தேநீர்  எதுவும் குடிக்கக்கூடாது. பால், பூஸ்ட், ராகி மால்ட் பருகலாம். மாலை வேளையில் காபி, தேநீர் குடிக்கலாம்.

கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ, சி ஆகிய சத்துக்கள் நிரம்பியுள்ளன. கொய்யாப்பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் ஆற்றல்  பெற்றவை. இரத்தத்தைப் பெருகச் செய்யும்.

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் விளையும் நன்மைகள்

1.  முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2.  முதுமைத் தோற்றத்தைப்  போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3.  கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4.  இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது.  (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது.  5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
5.  கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
6. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.

Offline RemO



Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்