Author Topic: சத்துக்காய்கள்!  (Read 989 times)

Offline Yousuf

சத்துக்காய்கள்!
« on: November 01, 2011, 03:11:57 PM »
பீட்ரூட்: கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தசோகையை சரிப்படு த்தும்.பாகற்காய்: வைட்டமின் ஏ, பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கால்சியம்   சத்துக்கள் நிறைந்துள்ளன. பசியைத்தூண்டும்.  சர்க்கரை நோயின் கடுமையைக் குறைக்கும்.

முருங்கைக்காய்: வைட்டமின் ஏ, பி, சி பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளன. பெண்களுக்கு மாதவிலக்கின்போது உண் டாகும் அதிக உதிரப்போக்கைத் தடுக்கும்.

சுண்டைக்காய்:  புரதம், கால்சியம், இரும்புச்சத்து கணிசமாக உள்ளது. வயிற்றில் உள்ள புழுக்கள் கொல்லப்படும்.

வெண்டைக்காய்: ஃபோலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. நினைவாற்றலைப் பெருக்கும். பசியைத் தூண்டும்.  மலச்சிக்கலை நீக்கும்.

கோவைக்காய்: வைட்டமின் ஏ,     கால்சியம்    ஃபோலிக் அமிலம்,     பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் நிறைந்துள்ளன.  வயிற்றுப்புண், வாய்ப்புண், மூலநோய்  போன்றவை நீங்கும்.

கேரட்:  உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
சுரைக்காய்: புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. உடல் சோர்வை  நீக்கி, உடலுக்குப் புத்துணர்வைத் தூண்டும்.

குடைமிளகாய்: வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் பாஸ்பரஸ் இரும்புச் சத்து ஆகியன கணிசமாக உள்ளன. அஜீரணக்கோள £றை நீக்கி செரிமான சக்தியைத் தூண்டும்.

கொத்தவரங்காய்: இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

Offline RemO

Re: சத்துக்காய்கள்!
« Reply #1 on: November 01, 2011, 08:06:34 PM »
Thanks usf
nala useful news

Offline Yousuf

Re: சத்துக்காய்கள்!
« Reply #2 on: November 01, 2011, 10:46:44 PM »
Nandri Remo machi!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: சத்துக்காய்கள்!
« Reply #3 on: November 02, 2011, 02:13:14 AM »
nalla thagaval palangal enrume body ku nallam ;)
                    

Offline Yousuf

Re: சத்துக்காய்கள்!
« Reply #4 on: November 02, 2011, 08:09:43 AM »
Nandri Angel!