Author Topic: குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா?  (Read 922 times)

Offline Anu

குழந்தைக‌ள் சிறுநீர் கழிக்க சிரமமா? இரு‌க்‌கிறதா, மாதவிடா‌ய்க்கோளாறா? எ‌ன்பது போ‌ன்ற ப‌ல்வேறு ‌பிர‌ச்சனைகளு‌க்கு ந‌ம்ம மூலிகை ஆரா‌ய்ச்சியாளர் தமிழ்குமரன் பல ‌டி‌ப்‌ஸ்களை உ‌‌ங்களு‌க்காக கொடு‌த்து‌ள்ளா‌ர்.

தலை வலிக்குதா? தலைவலி வந்தா இருக்குற வேலையெல்லாம் முடங்கிப்போயிரும். இந்த மாதிரி பிரச்சினைக்கு ஒரு துண்டு சுக்கு போதும். கருங்கல் இல்லைன்னா, சிமெண்ட் தரையில கொஞ்சம் தண்ணிய ஊத்தி சுக்கை உரசி (இழைத்து) நெத்தியில பத்து போட்டா... தலைவலி வந்த இடம் தெரியாமப்போயிரும்.

வா‌ய்வுக்கோளாறா? உருளைக்கிழங்கு சாப்பிட்ட வா‌ய்வு, முட்டை சாப்பிட்டா இடுப்பு பிடிச்சிக்கிடும்னு சொல்ற ஆளா நீங்க? ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி அரை டம்ளர் பால்ல கொஞ்சம் தண்ணி சேர்த்து பத்து பூண்டுப்பல்லை போட்டு நல்லா கொதிக்க வையுங்க. நல்லா வெந்ததும் தேவையான அளவு சர்க்கரை இல்லைனா பனங்கல்கண்டு சேர்த்து கடைஞ்சி அப்பிடியே குடியுங்க. காலையில மலத்தோட கேஸ் வெளியேறிரும். இதுக்கு இன்னொரு வைத்தியமும் இருக்கு... கொஞ்சம் பெருங்காயப்பொடியை வெந்நீர்ல கரைச்சி குடிச்சா வாயுவாவது கோளாறாவது? எல்லாம் வந்த இடம் தெரியாம ஓடிப்போயிரும்.

கண்ணுல கட்டியா? வலியா? கண்ணுல கட்டி, வலி, வீக்கம், உறுத்தல்னு எந்த பிரச்சினை வந்தாலும் சோத்துக்கத்தாழை தோலைச்சீவி அதோட ஜெல்லை தண்ணியில நல்லா கழுவி கண்ணுக்கு மேல வச்சி கட்டுங்க. அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ கழிச்சி எடுத்துடுங்க. உங்களுக்கு வந்த பிரச்சினை குறைஞ்சிருக்கும். குறையலைன்னா திரும்பவும் முயற்சி பண்ணுங்க, கைமேல பலன் கிடைக்கும்.

பொடுகுத்தொல்லையா? பொடுகு வந்து அதை கவனிக்காம விட்டுட்டா, ஒரு வழி பண்ணிரும். இதில இருந்து உங்களை காப்பாத்தணும்னா எளிய மருந்து இருக்கு. சின்ன வெங்காயத்தை (சாம்பார் வெங்காயம்) மிக்சியில் நல்லா அரைச்சி, அதோட நாட்டுக்கோழி முட்டையில உ‌ள்ள வெ‌ள்ளைக்கருவை (மட்டும்) சேர்த்து திரும்பவும் ஓடவிடணும். அது ஷாம்புமாதிரி ஆனதும் அதை தலையில தே‌ய்ச்சி அரை மணி நேரம் ஊற வச்சி குளிக்கணும். அப்போ தலையில சீயக்கா‌ய் தே‌ய்ச்சி குளிக்கணும். வாரம் ஒருநா‌ள் அல்லது ரெண்டு நா‌ள் குளிச்சாலே நல்ல தீர்வு கிடைக்கும்.

இருமல், சளி தொந்தரவிலிருந்து காக்க... இருமல், சளி மாதிரி பிரச்சினை வந்தா சாப்பாட்டுமுறையை மாத்தணும். எப்போதுமே வெந்நீர் குடிக்கிறது நல்லது. இஞ்சிச்சாறு குடிக்கறது, டீ குடிக்கிறவங்க இஞ்சி, துளசி சேர்த்த டீ குடிக்கிறது நல்லது. காலைலயும், மதிய சாப்பாடு நேரத்திலயும் சின்ன வெங்காயம், முதல் கவளம் சோத்தோட மிளகுப்பொடி சேர்த்து சாப்பிடணும். அதோட காலையில எழுந்திரிச்சதும், ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடியும் வெந்நீர்ல் கல் உப்பு சேர்த்து தொண்டையில் வச்சி நல்லா கொப்புளிக்கணும். நல்ல நிவாரணம் கிடைக்கும்.

கால் ஆணியா? கவலையை விடுங்க... கால் ஆணி வந்தா ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாம கஷ்டப்படுவாங்க. கவலையே படாதீங்க... அம்மான்பச்சரினு ஒரு மூலிகை. வீட்டைச்சுத்தி வளர்ந்து கிடக்கும். அந்த செடியை உடைச்சா பால் வரும். அதை தினமும் காலைல ஆணி உ‌ள்ள இடத்துல போட்டு வந்தா சில நா‌ள்க‌ள்ல சுகம் கிடைக்கும். உடனே நடக்காது. தொடர்ந்து போட்டுட்டு வரணும். 10. 20 நா‌ள்ல பூரண குணம் கிடைக்கும்.