Author Topic: சருமம் சுருக்கமா இருக்கா? ஃபேஸ் பேக் ட்ரை பண்ணலாமே!!  (Read 703 times)

Offline Anu

[size=78%]சருமத்தில் சுருக்கங்கள் வருவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சருமத்தின் மேல் அளவுக்கு அதிகமான காற்று, வெப்பம், கெமிக்கல் போன்றவை படுவது, உடல் வறட்சி மற்றும் புகைப்பிடித்தல் போன்றவை முக்கியமானவை. அதிலும் அதிக நேரம் வெயிலில் இருந்தால், சருமத்தில் சுருக்கம் வருவதோடு, பழுப்பு நிற சருமம், சருமம் மென்மையிழந்து காணப்படுவது, கரும்புள்ளிகள் போன்ற அனைத்துமே வந்துவிடும். இவை அனைத்தும் வருவதற்கு இயற்கை மட்டும் காரணமில்லை, நமது கவனக்குறைவும் தான் காரணம். ஆகவே இத்தகைய பிரச்சனைகள் சருமத்தில் ஏற்படாமல் இருக்க, போதுமான பராமரிப்பானது சருமத்திற்கு தேவைப்படுகிறது. அதிலும் ஒரு சில ஃபேஸ் மாஸ்க்களை போட்டாலே போதுமானது. இப்போது அந்த ஃபேஸ் மாஸ்க்குகள் என்னவென்று பார்ப்போமா!!![/size]

சுருக்கங்களை போக்குவதற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகள்...
தேன் மாஸ்க்: ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் கேரட் ஜூஸ் சேர்த்து, நன்கு கலந்து, காட்டன் சிறிது எடுத்துக் கொண்டு, சோடா பை-கார்பனேட் தண்ணீரில் நனைத்து, பின் தேன் கலவையில் நனைத்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும். இதனால் சுருக்கங்கள் எளிதில் போய்விடும்.
வாழைப்பழ மாஸ்க்: வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டருடன் கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் காய வைத்து, பின் கழுவி வந்தால், முகச்சுருக்கங்கள் நீங்கிவிடும்.
கிளிசரின்-தேன் மாஸ்க்: ஒரு டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கிளிசரின் கலந்து, இரவில் தூங்கும் முன்பு தடவி படுக்க வேண்டும். பின் காலையில் எழுந்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
ஆப்பிள் மாஸ்க்: ஆப்பிளில் நிறைய வைட்டமின்கள் நிறைந்துள்ளன. ஆகவே அந்த ஆப்பிளை நன்கு மசித்து, அதனை முகத்திற்கு தடவி வந்தால், சருமம் நன்கு பொலிவோடு சுருக்கமின்றி காணப்படும்.
வெங்காயம் மாஸ்க்: ஒரு டீஸ்பூன் வெங்காயச் சாற்றுடன், தேனை கலந்து முகத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து ஊற வைத்து காய வைத்தால், சருமத்தில் இருக்கும் கிருமிகள் நீங்கி, சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
ஆகவே மேற்கூறிய சில ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு செய்து, சருமத்தை நன்கு இளமையோடு, சுருக்கமின்றி அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.