Author Topic: லிப் பாம்' போடுறவங்களா நீங்க? அப்ப தேன் யூஸ் பண்ணுங்க...  (Read 787 times)

Offline Anu

தேனின் மகத்துவத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அத்தகைய மருத்துவக்குணத்தை தன்னுள் கொண்டுள்ளது தேன். இந்த தேன் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. அதாவது தேகை சாப்பிட்டால், உடல் எடை குறையும், அதுவே தேனை சருமத்திற்கு தடவினால் சருமம் பொலிவு பெறும். சொல்லப்போனால் தேன் ஒரு சிறந்த மாய்ஸ்சுரைசர்.
அதிலும் இந்த தேன் உதட்டிற்கு மிகவும் சிறந்தது. தேனை உதட்டிற்கு லிப் பாம் போன்று தடவினால், உதடு நன்கு ஈரப்பசையுடன், மென்மையாக இருக்கும். இப்போது அந்த தேனை லிப் பாம் போன்று பயன்படுத்தினால் என்ன நன்மை உண்டு என்பதைப் பார்ப்போமா!!!

தேனின் நன்மைகள்:
* தேனை உதட்டிற்கு தடவினால் உதட்டில் ஏற்படும் வெடிப்புகள் நீங்கி, கடினமான உதடும் மென்மையாகி, ஈரப்பசையுடன் இருக்கும்.
* தேன் எந்த ஒரு பக்கவிளைவையும் ஏற்படுத்தாத ஒரு இயற்கை அழகுப் பொருள். மேலும் இது ஒரு இயற்கை ஸ்வீட்னர் என்பதால், இதில் ஆன்டி-பாக்டீரியல் பொருள், சருமத்தை பாக்டீகரியா மற்றும் மற்ற கிருமிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
* தேன் காயத்தை குணமாக்கும் ஒரு சிறந்த பொருள். அதிலும் இதனை அதனை வெடிப்பு ஏற்படும் உதட்டில் தடவினால், வெடிப்பால் ஏற்படும் வலியை சரிசெய்யும்.
* எப்போது தேனை மற்ற பொருட்களான பாதாம் எண்ணெய் அல்லது மற்ற எண்ணெயுடன் கலந்து தடவினாலும், வெறும் தேனை மட்டும் தடவுவது தான் சிறந்தது. சொல்லப்போனால், உதடு பராமரிப்பிற்கு தேன் தான் சிறந்த அழகுப் பொருள்.
* தேனை உதட்டிற்கு தடவினால், நீண்ட நேரம் உதட்டில் இருக்கும். ஆனால் லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ் போன்றவை தேனை விட சிறந்ததாக, நீண்ட நேரம் இருக்க முடியாது.
* உதடு நன்றாக எந்த ஒரு வெடிப்புமின்றி இருந்தாலும் தேனை தடவி வந்தால், உதட்டில் பனிகாலத்தில் ஏற்படும் வெடிப்புகள், வறட்சிகள் போன்றவை வராமல் தடுக்கலாம். மேலும் இதை முகத்திற்கும் தடவலாம்.
மென்மையான பிங்க் உதடு வேண்டுமென்றால், அதற்கு செய்யக்கூடியவை...
- ஒரு பௌலில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது பாதாம் எண்ணெயை ஊற்றி, நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- பின் அதனை இரவில் படுக்கும் முன் உதட்டிற்கு தடவி படுக்க வேண்டும்.
- வேண்டுமென்றால் இதனை பகல் நேரத்தில், லிப் கிளாஸ் போன்றும் பயன்படுத்தலாம்.
- அதே நேரத்தில் அதனை ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும், லிப் பாம் போன்று பயன்படுத்தலாம்.
- முக்கியமாக இரவில் படுக்கும் போது சற்று அதிகமாக உதட்டிற்கு தடவி படுத்தால், உதடு நன்கு ஈரப்பசையை உறிஞ்சி, உதடுகள் நன்கு அழகாக வறட்சியில்லாமல் காணப்படும்.
- இந்த லிப் பாமை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், இரண்டு வாரத்திற்கு பயன்படுத்தலாம்.
நினைவில் கொள்ள வேண்டியவை:
தேனை உதட்டிகோ அல்லது முகத்திற்கோ தடவும் போது, சிலருக்கு அலர்ஜி போன்று ஏற்படும். அவ்வாறு அதனை தடவி அரிப்பு போன்று வந்தால், உடனே தேனை தடவுவதை நிறுத்திவிட வேண்டும்.